செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பேச்சு மற்றும் கேட்டல் திறனும் கற்றுக்கொடுத்த 10 ஆண்டுகள்: அமலியா ஆரம்பக் கற்றல் நிலையம் முன்னோடியாக செயல்படுகிறது

Share

Share

Share

Share

சிறப்பு ஆரம்பக் கற்றல் நிறுவனம் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை பொதுவான கல்வி முறைக்கு வெற்றிகரமாக அழைத்துச் செல்கிறது

முக்கிய சாதனைகள்:

  • பத்து ஆண்டுகளில் 85 குழந்தைகள் வெற்றிகரமாக பொதுவான பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
  • செவி-வாய்மொழி கல்வி முறைக்கான த்வானி (Dhvani) முறையைப் இலங்கையில் பயன்படுத்தும் ஒரே நிறுவனம்
  • சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் கற்பித்தல்.

செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான அமலியா ஆரம்பக் கற்றல் நிலையம் (Amaliya Early Learning Centre – AELC), 2025 டிசம்பர் 2ஆம் திகதி தனது 10ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. பிறப்பு முதல் 5 வயதுக்குட்பட்ட செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஆரம்பகால தலையீடு, பேச்சு வளர்ச்சி மற்றும் சிறப்பு முன்பள்ளி கல்வி ஆகியவற்றில் ஒரு தசாப்த கால முன்னோடியாக செயல்பட்டத்தைக் கௌரவிக்கும் விழாவாக இது அமைந்தது.

 

இந்த விழாவில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் ஈ.என்.டி ஆலோசகர் (காது, மூக்கு, தொண்டை) அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மிஹிரி ரூபசிங்க பிரதம அதிதியாகவும், சென்னை பாலவித்யாலயாவின் உப அதிபர் டாக்டர் மீரா சுரேஷ் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு, அமலியா ஆரம்பக் கற்றல் நிலையத்தின் சாதனைகளை கௌரவித்தனர். அத்துடன், இந்நிகழ்வில் பெற்றோர்கள், குடும்பங்கள், கல்வியாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கொழும்பில் உள்ள அமலியா அறக்கட்டளையில் நடைபெற்ற இந்த விழாவில், மாணவர்களின் நிகழ்ச்சிகள், பெற்றோர்களின் அனுபவப் பகிர்வுகள், மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை உதவித் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மருத்துவ மற்றும் கல்வி நிபுணர்களின் உரைகள் இடம்பெற்றன.

இந்த விழாவில் அமலியா அறக்கட்டளையின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் அஜய் அமலீன் உரையாற்றுகையில், “செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் நடக்கும் பாதைக்கு தைரியமும், விரைவான நடவடிக்கையும் அவசியம். முக்கியமான காலகட்டமான 0-3 வயதில், இக்குழந்தைகளுக்கு எஞ்சியுள்ள கேட்கும் திறனைக் கொண்டு அவர்களின் கற்றல் பயணத்தை ஆரம்பிக்க பெற்றோர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எங்களின் தீவிரமான கட்டமைப்புள்ள பாடத்திட்டம், குழந்தைகளை பொதுவான பாடசாலைகளில் இணைவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.” என்றார்.

இச்சாதனையை நினைவுகூர்ந்த அமலியா அறக்கட்டளையின் பணிப்பாளரும், அமலியா ஆரம்பக் கற்றல் நிலையத்தின் அதிபருமான நிஷா அமலீன், “முன்பு கேட்க முடியாத ஒரு குழந்தையால் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் அன்பின் வெற்றியாகும். குழந்தைகள் மலர்வதை பார்ப்பது – கேட்கவும், பேசவும், சமூகத்தில் இணையவும் கற்றுக்கொள்வது – எங்களின் மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. இலங்கை முழுவதும் உள்ள குடும்பங்களை சென்றடைவதே எங்கள் உறுதிப்பாடாகும். இலங்கையில் உள்ள எந்தவொரு குழந்தையும் கேட்கும் திறனில்லாமல் பிறந்ததற்காக மட்டும் பின்தங்கி விடக்கூடாது.” என தெரிவித்தார்.

த்வானி முறையைப் பயன்படுத்தி செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கேட்கவும், பேசவும் கற்றுக்கொடுக்கும் இலங்கையின் ஒரே நிறுவனமாக அமலியா ஆரம்பக் கற்றல் நிலையம் செயல்படுகிறது. கேட்கும் திறன், மொழி புரிதல் மற்றும் பேச்சுத் திறன்களை வளர்க்கும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஆதரவுடன் இது நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், 85 குழந்தைகள் வெற்றிகரமாக பொதுவான பாடசாலைகளுக்கு மாறியுள்ளனர். இது திட்டத்தின் செயல்திறனை நிரூபிக்கிறது.

இந்த நிலையம் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான விரிவான ஆரம்ப நிலை உதவித் திட்டத்தையும், பின்னர் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான முன்பள்ளி கல்வித் திட்டத்தையும் வழங்குகிறது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கற்பித்தல் வழங்கப்படுகிறது. செயல்பாடு அடிப்படையிலான கற்றல், தொடர்ச்சியான மதிப்பீடு, சிறிய ஆசிரியர்-மாணவர் விகிதம், மற்றும் வீட்டில் பேச்சு மற்றும் மொழித் திறன்களை வலுப்படுத்த பெற்றோர்களின் முழு பங்களிப்பு ஆகியவற்றுடன் இது செயல்படுகிறது.

2013இல் அமலீன் குடும்பத்தால் நிறுவப்பட்ட அமலியா அறக்கட்டளை, இலங்கை முழுவதும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை உதவித் திட்டத்தின் அணுகலை விரிவுபடுத்தும் தனது நோக்கத்தை தொடர்கிறது. மேலும் அவர்களை தரம் 1 முதல் பொதுவான கல்வியில் சிறப்பாக செயல்பட தயார்படுத்துகிறது.

පාම් තෙල් විරෝධය, විශ්වාස සහ...
2026 ආධුනික වයස් කාණ්ඩ පිහිනුම්...
இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி களம் அமைக்கும்...
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் Rebuilding...
කොකා-කෝලා පදනම සහ සේවාලංකා පදනම...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி...