ஜனசக்தி லைஃப், பொசன் பக்தர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான ஆதரவை வலுப்படுத்துகிறது

Share

Share

Share

Share

JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் முதன்மை வர்த்தகநாமமான ஜனசக்தி லைஃப், பொசன் பூரணைக் காலத்தில் அனுராதபுரத்தில் சுகாதார சேவைகள், பொதுப் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் நலனை ஆதரிக்கும் வகையில் சமூகம் சார்ந்த முன்னெடுப்பை மேற்கொண்டது.

நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியதுடன் மருத்துவ உதவியை நாடும் வருகையாளர்களின் அணுகலை மேம்படுத்துவதற்காக வைத்தியசாலைக்கு புதிய பெயர்ப் பலகையையும் நிறுவியது.

யாத்திரைக் காலத்தில் மக்கள் நடமாட்டத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் உதவும் நோக்கில் ஜனசக்தி லைஃப், இலங்கை காவல்துறைக்கு திசைகாட்டி பலகைகளையும் வழங்கியது. மேலும், நிறுவனம் ஜய ஸ்ரீ மகா போதியில் பக்தர்களுக்கு புண்ணிய நூல்களை விநியோகித்தது.

இம் முன்னெடுப்புகளின் ஊடாக சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்குப் பங்களிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை ஜனசக்தி லைஃப் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜனசக்தி லைஃப் பற்றி

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி – https://www.janashakthi.com/

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...