ஜனசக்தி லைஃப், 2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பெண்களுக்கு நட்புறவான சிறந்த 20 பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

Share

Share

Share

Share

JXG (Janashakthi Group) குழுமத்தின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், Satynmag Women Friendly Workplace Awards விருது வழங்கும் விழாவில், 2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பெண்களுக்கு நட்புறவான சிறந்த 20 பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தமது தொழில்சார் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக கட்டியெழுப்புவதற்கும், நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு முன்னேறுவதற்கும் வாய்ப்பளிக்கும் உள்ளடக்கமான பணிச்சூழலை உருவாக்குவதில் நிறுவனம் தொடர்ந்து செலுத்திவரும் கவனத்தை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது.

ஜனசக்தி லைஃப்பின் பணியாளர்களில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிப்பதுடன் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளிலும் அவர்கள் தொடர்ந்து தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்று வருகின்றனர். பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கம் காணப்படும் ஆயுள் காப்புறுதி விற்பனை முகாமைத்துவம் உள்ளடங்கலாக வணிகம், தொழிற்பாடுகள் மற்றும் நிறுவனசார் பணிகள் என பல்வேறு பிரிவுகளின் சிரேஷ்ட தலைமைத்துவப் பதவிகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது.

பெண்கள் தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், அனுபவங்களை விரிவுபடுத்திக்கொள்ளவும், தலைமைத்துவப் பொறுப்புகளை நோக்கி முன்னேறவும் வாய்ப்புகளை உருவாக்குவதில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. தலைமைத்துவ மேம்பாடு, வழிகாட்டல், பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஊடாக, பெண்கள் நீடித்ததும் திருப்திகரமானதுமான தொழில்சார் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்க ஜனசக்தி லைஃப் எதிர்பார்க்கிறது.

“ஜனசக்தி லைஃப்பில், எமது பெண் பணியாளர்கள் தமது தொழில்சார் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளை வழங்குவதுடன், அவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் உள்ளடக்கமான பணிச்சூழலை உருவாக்குவதும், அவர்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட இலக்குகளை அடைந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் எமது நோக்கமாகும். இந்த அங்கீகாரம் நாம் கட்டியெழுப்பி வரும் பணியிடக் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதுடன், மிக முக்கியமாக, தமது இலக்குகளை நோக்கி முன்னேறும் எமது பெண் பணியாளர்களின் சாதனைகளையும் கௌரவிக்கிறது.” என ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே தெரிவித்தார்.

“பெண்களுக்கு நட்புறவான சிறந்த 20 நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது, ஜனசக்தி லைஃப் தற்போது எட்டியுள்ள நிலையை மேலும் உயர்த்துவதற்கான ஊக்கமாக அமைந்துள்ளது. மேலும், வலுவானதும் தாக்கமிக்கதுமான பெண் பணியாளர் அணியை உருவாக்குவதற்கு இந்த அங்கீகாரம் எமக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. பெண்களுக்கு நட்புறவான பணியிடத்தை உருவாக்குவது என்பது வெறுமனே பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதுடன் மட்டுப்படுத்தப்படுவதில்லை என்பதையும் எமது அணுகுமுறை அங்கீகரிக்கிறது. அவர்களின் தொழில்சார் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களிலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதுடன், வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் அர்த்தமுள்ள பங்களிப்புகளுக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்குவதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும்.” என லியனகே மேலும் தெரிவித்தார்.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் மனிதவளப் பிரிவுத் தலைவர் தனுஷ்க சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “பெண்களுக்கு நட்புறவான பணியிடத்தை உருவாக்குவது என்பது அவர்களின் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் அவர்களுக்கு ஆதரவளிப்பதுடன், கற்றுக்கொள்வதற்கும், பங்களிப்பதற்கும், முன்னேறுவதற்கும் தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்குவதாகும். இது எமது பணியாளர்களின் அன்றாட அனுபவத்தின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதி செய்வதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றார்.

Great Place to Work அங்கீகாரத்தை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகப் பெற்றுள்ளதுடன், Great Place To Work® Sri Lanka ஆல் வெளியிடப்பட்ட Sri Lanka’s 50 Best Workplaces™ 2026 இலும் இடம்பெற்றுள்ள ஜனசக்தி லைஃப்பின் பணியிடத்துக்கான சிறப்பை இந்த அங்கீகாரமானது மேலும் வலுப்படுத்துகிறது.

ஜனசக்தி லைஃப் பற்றி

JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வலுவூட்டி வருகிறது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் (IRCSL) உரிமம் பெற்றுள்ள இது, நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

TikTok strengthens AI transparency and...
රෙදිපිළි හා ඇඟලුම් උපාංග නිෂ්පාදකයින්ගේ...
Deleted Scenes by BBDO Sri...
150 years of rubber: A...
Swisstek strengthens integrated building solutions...
පාරිභෝගිකයින්ට සුවිශේෂී ප්‍රතිලාභ රැසක් පිරිනමමින්...
BBDO Sri Lanka හි ‘Deleted...
99x launches AI-Hub to increase...
පාරිභෝගිකයින්ට සුවිශේෂී ප්‍රතිලාභ රැසක් පිරිනමමින්...
BBDO Sri Lanka හි ‘Deleted...
99x launches AI-Hub to increase...
‘Teardrop Nation’ Brings Sri Lanka’s...