டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ Samsung Sri Lanka நிறுவனத்தால் “Relief Sri Lanka 2025” திட்டம் அறிமுகம்

Share

Share

Share

Share

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் “Relief Sri Lanka 2025″‘ என்ற தேசிய நிவாரண திட்டத்தை Samsung Sri Lanka நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி முழு நாட்டையும் தாக்கிய டிட்வா புயலால் 25 மாவட்டங்களில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்ததுடன், மேலும் பலருக்கு அவர்கள் தங்கியிருந்த இடங்களையும் இழக்க நேரிட்டது. இது அவர்களை கடுமையான சிரமத்திற்கு உள்ளாக்கியது. இதனால் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட அவர்கள் தற்போது நாடு முழுவதும் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர். வெள்ளப்பெருக்கால் வீடுகளில் இருந்த மின் சாதனங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளும் மிக மோசமாக சேதமடைந்தன. அந்தப் பொருட்களை பழுதுபார்க்க Samsung Sri Lanka நிறுவனத்திற்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. எனவே, டிட்வா புயல் மற்றும் வெள்ளத்தால் எல்லாவற்றையும் இழந்த அவர்களுக்கு பழுதுபார்ப்புக்கு கூடுதல் செலவு செய்வது மிகவும் கடினமான விடயமாக இருந்தது.

வாடிக்கையாளர்களின் இந்த சிறப்பான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், 2025 டிசம்பர் 08ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 33 Samsung இன் அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களில் சிறப்பு சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து Samsung பொருட்களின் பழுதுபார்ப்பு கட்டணமும் முற்றிலும் இலவசம். மின் சாதனங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான மாற்றுப் பாகங்களுக்கு 50% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. *பொருட்களின் வகை மற்றும் வாங்கிய காலத்தின் அடிப்படையில் இந்த வசதிகள் வழங்கப்படும். ஒரு வருடத்திற்குள் வாங்கிய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மூன்று வருடங்களுக்குள் வாங்கிய மின் சாதனங்கள் இதற்கு தகுதியானவை. பெரிய சாதனங்களை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டணமின்றி வீட்டிற்கே வந்து தேவையான சேவைகளை வழங்க Samsung ஏற்பாடு செய்திருப்பது சிறப்பம்சமாகும்.

இந்த சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையார்கள் தாம் வாங்கிய பொருளின் பற்றுச்சீட்டு, சேதமடைந்த சாதனத்தின் புகைப்படங்கள், பாதிக்கப்பட்ட பகுதியில் வசிப்பதை உறுதிப்படுத்தும் முகவரி சான்று மற்றும் என்ன நடந்தது என்பதை விளக்கும் சிறு விளக்கக் கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். கையடக்கத் தொலைபேசிகளுக்கு உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையும் அவசியம். இந்த பழுதுபார்ப்புகள் அனைத்தும் 2025 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடையும். மாற்றுப் பாகங்களுக்கு ஒரு மாத கால உத்தரவாதமும் வழங்கப்படும். Samsung தனது Service Authorization Work system மூலம் வெளிப்படையான மற்றும் நம்பகமான சேவையை வழங்கும்.

பழுதுபார்ப்புக்குப் பின் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அவை Samsung இன் Voice of Customer திட்டத்தின் கீழ் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்வு வழங்கப்படும்.

இந்த சிறப்பு திட்டம் குறித்து Samsung Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் SangHwa Song கூறுகையில், “திட்வா புயலால் இலங்கை முழுவதும் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. பலர் தங்கள் அழிந்த வீடுகளையும், வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். பொறுப்புள்ள நிறுவனமாக இந்த நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக நிற்பது எங்கள் கடமையும் பொறுப்பும் ஆகும். அதனால்தான் ‘Relief Sri Lanka 2025’ திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். டிட்வா புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட Samsung சாதனங்களை மலிவான விலையில் பழுதுபார்க்கும் வாய்ப்பை வழங்குவதன் மூலம், அன்றாட தொடர்பு மற்றும் மின்சாதன தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த விரும்புகிறோம்.” என்றார்.
இலங்கை மக்களுக்கு உடனடி உதவியை வழங்கும் நடவடிக்கையாக மட்டுமல்லாமல், Samsung இன் வாடிக்கையாளர் பராமரிப்பு நடவடிக்கையாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின் சாதனங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் பழுதுபார்ப்புக்கான வாடிக்கையாளர்களின் செலவுகளை குறைத்தல், Samsung இன் மீதான நம்பிக்கையை அதிகரித்தல், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துதல் மற்றும் இந்த தருணத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிக்கு பங்களிப்பது இந்த திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும். இந்த சேவையைப் பெற 011 7267864 இலக்கத்துக்கு WhatsApp மூலம் செய்தி அனுப்பி Samsung வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளலாம்.

* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

SLIM Brand Excellence Award උළෙලේදී...
KAL, ශ්‍රී ලංකාවේ ප්‍රථම ස්යංක්‍රීය...
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ...
සම්ප්‍රදාය සහ අනාගත දැක්මත් සහිත...
HNB ‘’2025 ශ්‍රී ලංකාවේ වසරේ...
HNB, ශ්‍රී ලංකාවේ ශක්තිමත්ම බැංකුව...
Keells and Enfection Win the...
Huawei and Partners Win 2025...
HNB, ශ්‍රී ලංකාවේ ශක්තිමත්ම බැංකුව...
Keells and Enfection Win the...
Huawei and Partners Win 2025...
Samsung QLED TV සැබෑ තාක්ෂණික...