ட்ரோன் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட Santa Claus மூலம் காலி முகத்திடலை வண்ணமயமாக்கிய Softlogic Life

Share

Share

Share

Share

படைப்பாற்றல் மற்றும் புதுமையான படைப்புகள் மூலம் தொடர்ச்சியாக இலங்கை மக்களை மகிழ்விக்கும் இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life இன் மற்றொரு கவர்ச்சிகரமான படைப்பு சமீபத்தில் கொழும்பு காலி முகத்திடலில் அரங்கேற்றப்பட்டது.

இலங்கையில் முதல் முறையாக மான்கள் பூட்டிய சறுக்கு வண்டியில் வந்த Santa Claus கொழும்பு வானத்தை வண்ணமயமாக்கிய இந்தப் படைப்பு பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரின் வியப்புக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது. நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Santa Claus இற்கு உயிரோட்டத்தைக் கொடுத்த Santa Claus, இலங்கை மக்கள் இதுவரை அனுபவிக்காத தனித்துவமான அனுபவத்தை அவர்களுக்கு வழங்க முடிந்ததுடன், புத்தாக்கத்துக்கான தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியது.

நாட்டின் முன்னணி ட்ரோன் இயக்குநர்களான ‘ட்ரோன் முதியன்சே’ உடன் இணைந்து இந்த சிறப்பு படைப்பைக் காணும் வாய்ப்பை இலங்கை மக்களுக்கு வழங்க Softlogic Life ஏற்பாடு செய்தது. இரண்டு அதிநவீன ட்ரோன்களின் உதவியுடன் சுமார் 12 அடி நீளமுள்ள Santa Claus இன் பனிச்சறுக்கு வண்டியை வானில் பறக்க வைத்தனர், இது காலி முகத்திடலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. Santa Claus இன் பனிச்சறுக்கு வண்டி வானில் பறக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் நிரம்பி வழிந்தது.

எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தமது முழு அர்ப்பணிப்புடன், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்க Softlogic Life க்கு இந்த நிகழ்வின் மூலம் முடிந்தது.

இது குறித்து Softlogic Life சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் சமிந்த்ரி பிலிமதலவ்வே கருத்து தெரிவிக்கையில்,’ Softlogic Life என்ற வகையில் எப்போதும் எங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயல்படும் நாங்கள், மக்களுக்கு மிகவும் புதிய மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்க தைரியமாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். இந்த கிறிஸ்மஸ் காலத்தில் கொழும்பு வானத்தில் Santa Claus பறக்கும் காட்சியைக் காண்பது இளையோர், முதியோர் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது என்பது இரகசியமல்ல. புதிய போக்குகளின் உருவாக்குநராகவும், புதுமையான காப்புறுதியாளராகவும், இலங்கையர்களுக்கு பெரிய கனவுகளைக் காணும் வாய்ப்பை வழங்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்று நம்புகிறோம். இந்த ட்ரோன் மூலம் இயக்கப்படும் Santa Claus படைப்பு மூலம் புத்தாக்கத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை காட்டியுள்ளோம். இது வெறும் அழகான படைப்பு மட்டுமல்ல, கனவுகளை நனவாக்குவதற்காக இலங்கையர்களை ஊக்குவிக்க வாக்குறுதிகளை நிறைவேற்ற தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காட்டும் வாய்ப்பாகவும் குறிப்பிடலாம்’ என்றார்.

இது குறித்து Softlogic Life இன் முகாமைத்துவப் பணிப்பாளர் இஃப்திகார் அஹமட் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதிப் பாதுகாப்புக்கு அப்பால் சென்று, நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் நேர்மறை ஆகியவற்றின் மூலம் சிறப்பான அனுபவத்தை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பறக்கும் Santa Claus இன் பனிச்சறுக்கு வண்டியைப் போலவே, AI தொழில்நுட்பத்தின் மூலம் சில நிமிடங்களில் காப்புறுதி உரிமைகோரல்களை நிறைவேற்றுவதற்காக வாக்குறுதியளித்தபடி, எங்கள் திறன்களை மேலும் மேம்படுத்தி தொழில்துறையில் புதிய மைல்கற்களை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்’ என்றார்.

ட்ரோன் முதியன்சேவுடன் Softlogic Life உருவாக்கிய இந்த கூட்டாண்மை மூலம், இலங்கையின் திருவிழா கலாச்சாரத்திலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. இது மற்றுமொரு புதுமையான பயணத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. நிறுவன நோக்கங்களை அனுபவமாக மாற்றுவதற்கு பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடர்ந்து பணியாற்றி வரும் Softlogic Life, காப்புறுதி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, தனக்கென ஒரு நற்பெயரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. வானில் மிதக்கும் Santa Claus மற்றும் பிற அம்சங்கள் மூலம் பண்டிகைக் காலத்தில் காலி முகத்திடலில் கூடியிருந்த முதியோர், இளைஞர்கள் அனைவருக்கும் புதிய அனுபவத்துடன் மகிழ்ச்சியை வழங்க Softlogic Life செயல்பட்டது, அதன் புத்தாக்க முயற்சியில் மற்றொரு மைல்கல்லை குறிக்கிறது.

Sri Lanka Unlocks New Market...
Sampath Bank Launches Priority Reserve...
2025 වසරේ මැයි මස අපනයන...
Shantha Bandara Appointed President at...
கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
Capital Trust named one of...
Dankotuwa Porcelain partners Kiros Hospitality...
Samsung Reinforces Commitment to Smart...
ශ්‍රී ලංකාව තුළ සිය ප්‍රවේශය...