தனது 6 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை உருவாக்கும் BYD

Share

Share

Share

Share

சீனாவின் ஷென்ஜெனில் நவம்பர் 24ஆம் திகதி அன்று, உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனங்கள் மற்றும் மின்சார பெட்டரிகள் தயாரிப்பாளரான BYD, அதன் 6 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை Zhengzhou தொழிற்சாலையில் உற்பத்தி செய்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

அத்தகைய மைல்கல்லை எட்டிய உலகின் முதல் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்தியுள்ள இந்த சாதனை, மின்சார வாகனத் துறையில் முன்னோடியாக முன்னேறுவதற்கு BYD இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வெறும் மூன்று மாதங்களில் 5 மில்லியனில் இருந்து 6 மில்லியனுக்கும் அதிகமான புதிய ஆற்றல் வாகனத்தை தாண்டிய நிலையில், BYD இன் துரிதமான வேக உற்பத்தி மற்றும் விற்பனையில் புதிய அளவை நிர்ணயித்துள்ளது. BYD இன் தொழில்முறை தனிப்பயனாக்கப்பட்ட துணை பிராண்டான FANGCHENGBAO இன் கீழ் Super Hybrid hardcore SUVஆன BAO 5 என பெயரிடப்பட்ட 6 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை உருவாக்கியுள்ளதுடன், இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் மகிழ்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதன் ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக விசேட நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமான John Keells Holdings PLC (JKH) உடனான BYD இன் மிக சமீபத்திய கூட்டு உடன்படிக்கையின் பின்னணியில், பொருளாதாரத்தின் புதிய சகாப்தத்தில் புதிய ஆற்றல் வாகனங்களை (NEV) வழங்குவதற்கு இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் ஒத்துழைப்பாக அமைந்துள்ளது. இது இலங்கை சந்தைக்கான பொருளாதார, சுற்றுச் சூழல் உணர்வுள்ள முன்னேற்றத் தீர்வுகளின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

BYD தொடர்பில்

BYD என்பது ஒரு பல்தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் தொழில்நுட்ப புத்தாக்கங்களையும், கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. 1995 ஆம் ஆண்டில் Recharge செய்யக்கூடிய பேட்டரி தயாரிப்பாளராக நிறுவப்பட்ட BYD, தற்போது மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து, புதிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக துறைகளை கொண்டுள்ளது. BYD ஆனது, சீனா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரேசில், ஹங்கேரி மற்றும் இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட தொழில்துறை பூங்காக்களை கொண்டுள்ளது. ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்பிலிருந்து அதன் பயன்பாடுகள் வரை, BYD ஆனது முழு அர்பணத்துடன் எரிபொருள்கள் மீதான காபன் வெளியேற்றத்தைக் குறைக்கும் தீர்வுகளை வழங்கி உலகளாவிய ரீதியில் புதைபடிவ எரிபொருட்கள் மீதான தங்கியிருத்தலை குறைத்துள்ளது. அதன் புதிய ஆற்றல் வாகன தடயமானது இப்போது 6 கண்டங்களில், 70 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், மற்றும் 400க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளது. ஹொங்கொங் மற்றும் ஷென்ஜென் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், பசுமையான உலகத்தை நோக்கிய புத்தாக்கங்களை வழங்கும் Fortune Global 500 நிறுவனமாக அறியப்படுகிறது. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து www.bydglobal.com ஐ பார்வையிடவும்.

BYD Auto தொடர்பில்

2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட BYD Auto, சிறந்த வாழ்க்கைக்கான தொழில்நுட்ப புத்தாக்கங்களை பயன்படுத்துவதற்கு அர்ப்பணித்துள்ள ஒரு பன்னாட்டு உயர்தொழில்நுட்ப நிறுவனமான BYD இன் வாகன துணை நிறுவனம் ஆகும். உலகளாவிய போக்குவரத்துத் துறையின் பசுமை மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், BYD Auto தூய மின்சார மற்றும் Plug-in hybrid வாகனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. புதிய ஆற்றல் வாகனங்களின் முழு தொழில்துறை சங்கிலியின் முக்கிய தொழில்நுட்பங்களான பேட்டரிகள், மின்சார மோட்டார்கள் மற்றும் மின்னணு கட்டுப்படுத்தி ஆகியவற்றில் இந்த நிறுவனம் தேர்ச்சி பெற்றுள்ளது. சமீப ஆண்டுகளில், Blade Battery, DM-i Super Hybrid தொழில்நுட்பம், ePlatform 3.0, CTB தொழில்நுட்பம், e⁴ Platform, BYD DiSus Intelligent Body Control System மற்றும் DMO Super Hybrid System ஆகியவை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களை இந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. EV மாற்றத்தில் படிம எரிபொருள் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்திய உலகின் முதல் கார் தயாரிப்பாளராகும். மேலும் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக சீனாவில் புதிய ஆற்றல் பயணிகள் வாகன விற்பனையில் முதலிடத்திலும் உள்ளது.

JKH தொடர்பில்

JKH, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய குழும நிறுவனமாவதோடு, 7 வேறுபட்ட தொழில் ரீதியான துறைகளில் 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இயங்கி வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம், 15,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதோடு, LMD பத்திரிகையால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்’ என்ற தரவரிசையில் இடம்பெற்று வருகிறது. வெளிப்படைத் தன்மைக்கான சர்வதேச இலங்கை நிறுவனத்தின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டின் வெளிப்படைத் தன்மை’ மதிப்பீட்டில் ஜோன் கீல்ஸ் தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக முதலிடத்தைப் பிடித்தது. உலக பொருளாதார மன்றத்தின் முழு உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகள் சபை உலக ஒப்பந்தத்தில் பங்கேற்பாளராகவும் இருப்பதுடன், ஜோன் கீல்ஸ் ஆனது தனது சமூக நல குறிக்கோளான “நாளைக்கான தேசத்தை வலுப்படுத்துதல்” – என்பதை அதன் அறக்கட்டளை மற்றும் சமூக தொழில் முனைவோர் முயற்சியின் மூலம் அடைய எத்தணித்து வருகின்றது. ஜோன் கீல்ஸ் குழுமத்தினால் இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதற்கு ஊக்கியாக விளங்கும் ‘பிளாஸ்டிக் சைக்கிள்’ முயற்சியானதும் இயக்கப்படுகிறது.

 

GSCS International Ltd, with a...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...
MIHCM Asia showcases latest HR...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...
MIHCM Asia showcases latest HR...
TikTok Releases Q2 2024 Community...