தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Share

Share

Share

Share

இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (CSE: SUN) ‘Sunshine Soorya Mangalyaya 2025’ நிகழ்ச்சியுடன் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடியது. இந்தக் குழுமத்தின் வருடாந்திர பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்களில் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்றிணைந்தனர்.

அத்துருகிரியவிலுள்ள Steel Corporation மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள், சன்ஷைனின் ஒற்றுமை மற்றும் கூட்டு மகிழ்ச்சியின் பண்பாட்டை ஆழமாக எதிரொலித்தன. குழுமத்தின் பல்வேறு வணிகப் பிரிவுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து ஊழியர்கள் பாரம்பரிய புத்தாண்டு நடவடிக்கைகள் மற்றும் ‘Wasana Mutti’ (மண்பாணை உடைத்தல்), ‘Aliyata Ehe Thabeema’ (யானையின் கண்ணில் புள்ளடி இடுதல்), ‘கொட்ட பொர’ (தலையணி சண்டை) போன்ற உற்சாகமான விளையாட்டுகளில் பங்கேற்றனர். இவை அன்றைய நிகழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்தின.

பாரம்பரிய உணவுகளான ‘பாற் சோறு’, ‘பாசிபயறு பலகாரம்’, ‘பலகாரம்’ போன்ற இனிப்புகள் விருந்தோம்பலில் சுவையும் உறவாடலும் சேர்த்தன. ஊழியர்கள் மகிழ்ச்சியான உறவுகளுடன் இந்த சிறப்பு உணவுகளை அருந்தியபோது, பிணைப்புகள் வலுப்பெற்றன.

அன்றைய கொண்டாட்டங்களின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, ஆண் அழகன் மற்றும் பெண்களுக்கான அழகுராணி போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்படும் ஆண் அழகன் மற்றும் அழகுராணி பட்டங்களின் தேர்வாகும். இந்த ஆண்டு, Akaz Dowd (சன்ஷைன் மெடிக்கல் டிவைசஸ்) மற்றும் Selani Chamathka (சன்ஷைன் ஃபார்மசூட்டிகல்ஸ்) ஆகியோர் இந்த பட்டங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சன்ஷைன் ஹோல்டிங்ஸின் ஒன்பது வணிகப் பிரிவுகளால் நடத்தப்பட்ட சிறந்த புத்தாண்டு போட்டிக் குழுக்களுக்கான இல்ல படைப்பாற்றல் மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு குழுவும் தங்கள் இல்லத்தை எதிர்காலத்தை குறிக்கும் தொனிப் பொருள் அடிப்படையில் அலங்கரித்தன, இது புத்தாக்கம் மற்றும் பாரம்பரியம் இரண்டையும் பிரதிபலித்தது. Lina Manufacturing நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இல்லம் மிகவும் ஆக்கபூர்வமானதாக அறிவிக்கப்பட்டு, அதன் யதார்த்த தன்மை மற்றும் புத்தாண்டு நிகழ்வின் உணர்வை உள்ளடக்கியதற்காக அங்கீகாரம் பெற்றது.

‘Sunshine Soorya Mangalyaya 2025’ தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் செழுமையான கலாச்சார மரபை மதிக்கும் ஒரு உள்ளடக்கிய பணியிடத்தை வளர்ப்பதில் சன்ஷைன் ஹோல்டிங்ஸின் அர்ப்பணிப்பையும் கண்ணாடியாக பிரதிபலித்தது.

இலங்கை புதிய சந்தை வாய்ப்புகளை 15...
2025 ஆம் ஆண்டு மே மாத...
කොකා-කෝලා බෙවරේජස් ශ්‍රී ලංකා ආපසු...
TikTok හරහා රසවත් ආහාර සංස්කෘතියක...
BPPL Holdings PLC completes the...
Cinnamon Life සූප ශාස්ත්‍ර ක්ෂේත්‍රයේ...
சமையல் கலைத் துறையில் புது வரலாறு...
50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு...
Cinnamon Life සූප ශාස්ත්‍ර ක්ෂේත්‍රයේ...
சமையல் கலைத் துறையில் புது வரலாறு...
50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு...
සමාගම්වලින් අඩකඩ වැඩි ප්‍රමාණයක් ඩොලර්...