தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளை மீண்டும் கட்டியெழுப்ப “Nana Savi Mehewara” திட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுக்கும் HNB

Share

Share

Share

Share

தித்வா சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கல்வி செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய முயற்சியான Nana Savi Mehewara திட்டத்தை, இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

HNB பரந்த கிளைக் கட்டமைப்பின் மூலம், Nana Savi Mehewara திட்டம் இலங்கை முழுவதிலும் உள்ள ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைத்தது. 250க்கும் மேற்பட்ட HNB கிளைகளில் அமைக்கப்பட்ட சேகரிப்பு மையங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பங்களிப்புகளைப் பெற வழிவகுத்தன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசியக் கல்வி உபகரணங்கள் சேகரிக்கப்பட்டன. இயற்கை பேரிடர் காரணமாக இடம்பெயர்வு, இழப்பு மற்றும் பாடசாலைப் படிப்புத் தடங்கல் ஆகியவற்றை எதிர்கொண்ட மாணவர்களுக்கு புத்தகங்கள், எழுதுகருவிகள் மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் உடனடிக் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டது.

HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த கூறுகையில், “HNB தனது Nana Savi Mehewara திட்டம் மூலம், பேரிடரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கல்வியைத் தொடர உதவிகள் வழங்கி, இலங்கையின் எதிர்காலத் தலைமுறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் மூலம் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன், குழந்தைகளின் கல்வித் தடை நீங்கி, அவர்கள் நம்பிக்கையுடன் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இந்த உதவிப் பொருட்கள் அனைத்தும் மிகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, பாடசாலைகளுடன் கொண்டுள்ள நேரடித் தொடர்புகள் மூலம் விநியோகிக்கப்பட்டன. மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் நோக்கில் இத்திட்டம் மேலும் நீடிக்கப்படவுள்ளது.

HNBஇன் சந்தைப்படுத்தல் மற்றும் நிறுவனத் தொடர்புகள் பிரிவின் துணைத் தலைவர் உபுல் அதிகாரி கூறுகையில், “வங்கிச் சேவை என்பது வெறும் பணப் பரிவர்த்தனை சார்ந்தது மட்டுமல்ல, அது மக்களின் வாழ்வில் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவான ஒரு பிராண்ட் தான் HNB. தித்வா சூறாவளி நாடு முழுவதிலும் உள்ள சமூகங்களைப் பாதித்தபோது, அந்த நம்பிக்கையைச் செயல்பாட்டின் மூலம் நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இதைக் கருதினோம். கல்வி தடைப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக எங்களது நாடளாவிய கிளைகளின் பங்களிப்பைத் திரட்டும் வகையில் Nana Savi Mehewara திட்டம் வடிவமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் விநியோகம் Dehiowita Buddhist Primary Schoolஇல் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் எங்களது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் கிளைக் கட்டமைப்பின் கூட்டு முயற்சியால் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. கல்வி என்பது இந்நாட்டின் எதிர்காலத்திற்கு மிக அடிப்படையானது. இத்தகைய முயற்சிகள், குறிப்பாக நெருக்கடி காலங்களில், நாங்கள் சேவை செய்யும் சமூகங்களில் HNB ஆற்ற வேண்டிய பங்களிப்பைப் பிரதிபலிக்கின்றன.” என தெரிவித்தார்.

இந்த முயற்சியானது, பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுக்கான (CSR) HNBஇன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. இது நாடு முழுவதிலும் உள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பங்களிப்பைத் திரட்டுவதற்காக வங்கியின் நாடளாவிய கிளைக் கட்டமைப்பைப் பயன்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பங்களிப்புடனும், 250க்கும் மேற்பட்ட கிளைகளின் ஆதரவுடனும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, தனது நிறுவன ரீதியான எட்டலை அர்த்தமுள்ள சமூகப் தாக்கமாக மாற்றுவதில் HNB கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றமை குறிப்பபிடத்தக்கது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...