தென்னிலங்கையில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் BYD இன் புதிய காட்சியறை காலியில் திறந்து வைப்பு

Share

Share

Share

Share

உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனங்களின் (NEV) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, அவர்களின் புதிய காட்சியறையை 2025 மார்ச் 26ஆம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் காலி, நுகதுவ நுழைவாயிலுக்கு அருகாமையில் அண்மையில் திறந்து வைத்தனர்.

இது BYD நிறுவனத்தால் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட இரண்டாவது விற்பனை முகவர் நிலையமாகும். மேலும், கொழும்பில் உள்ள அதன் பிரதான காட்சியறையைப் போன்று உயர்தர வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த காட்சியறையானது நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, இப் புதிய காட்சியறை BYD SEALION 6, BYD ATTO 3, BYD SEAL, BYD DOLPHIN மற்றும் BYD M6 ஆகிய சமீபத்திய மாதிரிகளைக் கொண்டுள்ளது, இதன்மூலம் தென் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு BYD இன் நவீன மின்சார மற்றும் plug-in hybrid மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இப்புதிய காட்சியறை தொடர்பில் John Keells குழுமத்தின் சில்லறை விற்பனைப் பிரிவின் தலைவர் சரித சுபசிங்க கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கையில் BYD நிறுவனத்தின் வளர்ச்சி புதிய ஆற்றல் வாகன சந்தையை முன்னெடுத்து செல்வதற்கான எங்களது நீண்டகால அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. எமது காலி காட்சியறையைத் திறப்பதன் மூலம், BYD நிறுவனம் தென் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆற்றல் வாகவாகனங்களை வாங்குவதை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து தீர்வுகளுக்கான வலுவான மற்றும் நீண்டகால சந்தையை உருவாக்கவும் பங்களிக்கிறது,’ என தெரிவித்தார்.

இக் காட்சியறைக்கு மேலதிகமாக, BYD நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்க அதிநவீன வசதிகளைக் கொண்ட சேவை மையத்தையும் நிறுவத் திட்டமிட்டுள்ளது. மேலும், இது இலங்கை முழுவதும் தனது சேவை வலையமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கான BYD நிறுவனத்தின் நீண்டகால நோக்குடன் ஒத்துப்போகிறது.

இலங்கையில் புதிய ஆற்றல் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கான BYD நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் காட்டும் வகையில், BYD நிறுவனம் மற்றும் John Keells CG Auto நிறுவனம் என்பன நாட்டின் பிரதான இடங்களில் மின்சார வாகன EV charge வசதிகளை விரிவுபடுத்தியுள்ளனர். அதன்படி, கொழும்பு, நீர்கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் நாட்டின் தென் பகுதியின் முக்கிய சுற்றுலா இடங்களான கராப்பிட்டிய, மாத்தறை மற்றும் தங்கல்ல வரை, அதேபோல புத்தளம், குருநாகல் மற்றும் கண்டி போன்ற இடங்களிலும் charge நிலையங்கள் ஏற்கனவே செயல்படுட்டு வருகின்றன. இது மின்சார வாகன உரிமையாளர்களுக்கு தங்கள் வாகனங்களை charge செய்வதை நிச்சயமாக எளிதாக்கும். மேலும், இந்த முதலீடு இலங்கை நிலைபேறான போக்குவரத்தை நோக்கி செல்வதற்கான வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான BYD நிறுவனத்தின் குறிக்கோளுக்கு ஆதரவு அளிக்கிறது.

இதனிடையே, காலி காட்சியறை திறக்கப்பட்டதன் மூலம், BYD நிறுவனம் மற்றும் John Keells CG Auto நிறுவனம் என்பன உயர் தொழில்நுட்பம், உயர் செயல்திறன் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதன் மூலம் இலங்கையில் அதிகமான மக்களை சமீபத்திய புதிய ஆற்றல் வாகனங்களைப் பயன்படுத்த தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.

FitsAir தற்போது வணிக வகுப்பு சேவைகளையும்...
Samsung නවතම 12KG Front Load...
Shaping Tomorrow’s Tech as 99x...
RIUNIT புறநகர் சொத்து சந்தை அறிக்கை:...
සංජීව් හුලුගල්ල මහතා Cinnamon Life...
ශ්‍රී ලාංකේය ඇඟලුම් ක්ෂේත්‍රය තිරසාර...
Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய...
Samsung Sri Lanka Expands Bespoke...
ශ්‍රී ලාංකේය ඇඟලුම් ක්ෂේත්‍රය තිරසාර...
Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய...
Samsung Sri Lanka Expands Bespoke...
தனது வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முகமாக...