தென்மேற்கு ஆசியாவுக்கான Franchise Operations துணைத் தலைவராக அஜய் விஜய் பதிஜாவை நியமித்துள்ளதாக Coca-Cola இந்தியா அறிவித்துள்ளது

Share

Share

Share

Share

தென்மேற்கு ஆசியாவிற்கான Franchise Operations (SWA) துணைத் தலைவராக அஜய் விஜய் பதிஜாவை நியமித்துள்ளதாக Coca-Cola இந்தியா அறிவித்துள்ளது. Coca-Cola நிறுவனத்துடனான அஜய்யின் விரிவான வாழ்க்கைப் பயணம் சுமார் 24 ஆண்டுகள் ஆகும். இந்த காலப்பகுதிக்குள் சந்தைப்படுத்தல் மற்றும் Franchise நிபுணத்துவத்தின் தனித்துவமான கலவையும் உள்ளடங்கும்.

1999 ஆம் ஆண்டில், அஜய் Hindustan Coca-Cola Beverages Pvt. Ltd. (HCCBPL) களத்தில் முன்னணி விற்பனைக் குழுவுடன் தனது தொழில்முறை பயணத்தைத் தொடங்கினார். நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புக்கள் மற்றும் நிலைகளில் சீராக முன்னேறி நிலையான வளர்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் 2005 இல் SabCo Vietnamஇல் Mekong Delta பிராந்தியத்தின் பிராந்திய முகாமையாளராக கடமையாற்றினார். இந்த முக்கிய பதவியில், அவர் விற்பனை செயல்பாடுகள் மற்றும் வழித்தடத்தில் இருந்து சந்தை உத்திகளை செயற்படுத்துவதற்கும் வழிவகுத்தார்.

அவர் Colas நிறுவனத்திற்கான சந்தைப்படுத்தல் முகாமையாளராக இந்தியாவுக்குச் சென்றார் மற்றும் “Share a Coke” Campaignஐ முன்னெடுத்தார். அவர் வெற்றிகரமாக, INSWA (இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியா) சந்தைகளில் முதன்முறையாக Coca-Cola Zero Sugar பானத்தை அறிமுகப்படுத்தினார். ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மேம்பாட்டு நடவடிக்கையின் மூலம் தடம் பதிப்பதிலும் புத்துயிர் பெறச் செய்வதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

2018-2020 வரை பங்களாதேஷ் முகாமையாளராக, உலகளாவிய Coca-Cola நிறுவனத்தில் (TCCC) உள்ள Coca-Cola TM க்கான சிறந்த 3 சந்தைகளில் பங்களாதேஷைக் கொண்டு வர, Bottling Partnersகளுடன் அஜய் நெருக்கமாக பணியாற்றினார். 2020 ஆம் ஆண்டில், அவர் சிரேஷ்ட பணிப்பாளரான – கள முன்னிலை சந்தைப்படுத்தல் அதிகாரியாக மாற்றம் பெற்றார், அங்கு அவர் Portfolio உத்திகளை சீரமைத்தார், தடையற்ற வணிக மற்றும் சந்தைப்படுத்தல் செயல்படுத்தலை எளிதாக்கினார், மேலும் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான இசை உரிமையான ‘Coke Studio’ஐ வங்காளதேசத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தார். அவரது முன்னோடியான “Is Cooking” Coke உணவு அனுபவ தளம், குறிப்பாக “Kolkata is cooking”, Coca-Cola TM வர்த்தக நாம அன்பையும் நுகர்வோர் ஈடுபாட்டையும் உயர்த்தியது.

இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த Sanket Ray, இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் தலைவர், “வணிகம் பற்றிய புரிதல் மற்றும் வளர்ச்சி மனப்பான்மையால், அஜய் வணிகத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில் நிரூபிக்கப்பட்ட சாதனை படைத்துள்ளார். அவரது புத்திசாலித்தனமான வணிக அறிவு மற்றும் கூட்டு அணுகுமுறை மூலம் அவர் தென்மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைப்பின் நோக்கத்தை மேலும் மேம்படுத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

அஜய் மும்பையில் உள்ள NMIMSஇல் சந்தைப்படுத்தல் முகாமைத்துவப் பிரிவில் முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். அவர் HR வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் வணிகவியல் பட்டதாரியும் ஆவார்.

 

සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
Sunshine Foundation for Goodஇன் 20வது...
Kaushala Amarasekara wins prestigious Chartered...
සොෆ්ට්ලොජික් ලයිෆ් 2024 CA TAGS...
CEPA හි නව විධායක අධ්‍යක්ෂවරයා...
இலங்கை பெருந்தோட்டத் துறையின் ஒளிமயமான எதிர்காலம்
සොෆ්ට්ලොජික් ලයිෆ් 2024 CA TAGS...
CEPA හි නව විධායක අධ්‍යක්ෂවරයා...
இலங்கை பெருந்தோட்டத் துறையின் ஒளிமயமான எதிர்காலம்
இலங்கையர்களின் புன்னகைக்கு வலுவூட்டும் DENTA வின்...