இந்தியாவின் மிகப்பெரிய காப்புறுதித் தளமான Policybazaar.com, இலங்கை, கத்தார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் தனது காப்புறுதி சேவைகளைத் தொடங்கியதாக அண்மையில் அறிவித்தது. இதன் மூலம், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொழில்நுட்பத்துடன் கூடிய காப்புறுதி மாதிரியை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய காப்புறுதி தரகராக இது மாறுகிறது.
டிஜிட்டல் மையமாகக் கொண்ட Policybazaarஇன் காப்புறுதி சேவைகள், ஒரு தசாப்தத்திற்கும் மேலான சேவை அனுபவம், தரவு பகுப்பாய்வு மற்றும் நடைமுறை அறிவின் மூலம், விரைவான, வெளிப்படையான மற்றும் தரவு சார்ந்த சேவையை வழங்குவதற்குத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. சொத்து, கடல்சார் பொறுப்பு, இணையம் மற்றும் காலநிலை தொடர்பான அபாயங்கள் ஆகியவற்றுக்கு காப்புறுதி வழங்குவதில் Policybazaar, குறைந்த கவனம் செலுத்தப்பட்ட பிரிவுகளுக்கு விரைவான மற்றும் உயர்தர சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Policybazaarஇன் நிறுவன காப்புறுதி மற்றும் மீள்காப்புறுதித் துறையின் இணை நிறுவுனரும் சிரேஷ்ட வணிக அதிகாரியுமான Tarun Mathur இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “மீள்காப்புறுதித் துறை நீண்ட காலமாக அதன் சொந்த பிரத்யேக வலைப்பின்னல்களால் இயக்கப்படுகிறது. ஆனால் இன்று, காப்புறுதித்தாரர்கள் காலநிலை மாற்றம், முறையான சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்ற பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த சவால்களை சமாளிக்க, தெளிவான, விரைவான மற்றும் தரவு சார்ந்த முடிவுகளை எடுக்கக்கூடிய பங்குதாரர்கள் தேவை,” என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “Policybazaarஇல், மேற்கூறிய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு காப்புறுதித் தளத்தை உருவாக்க நாங்கள் தொடங்கினோம். காப்புறுதித்தாரர்கள் விரைவான, தகவலறிந்த முடிவுகளை எடுக்க அதிகாரம் அளிக்கும் மிகவும் வெளிப்படையான, பயன்படுத்த எளிதான சேவை. புத்தாக்கம் மற்றும் செயல்திறன் முன்னணியில் உள்ள இலங்கை, கத்தார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்த சேவைகளை நாங்கள் கொண்டு சென்றுள்ளோம். இந்த பிராந்தியங்களில் ஒரு தனித்துவமான தொழில்நுட்பத்தால் இயங்கும் காப்புறுதி வலையமைப்பின் தொடக்கமாகும்.” என குறிப்பிட்டார்.
பிராந்திய வாய்ப்புகளை அதிகரித்தல்
இலங்கை – 2023 ஆம் ஆண்டில் 280.1 பில்லியன் ரூபா மொத்த எழுத்தப்பட்ட கட்டுப்பணத்தைப் பதிவு செய்த இந்தத் துறை, 2019 ஐ விட 40% வளர்ச்சியைப் பதிவு செய்ய முடிந்தது. சைபர் காப்புறுதி போன்ற சிறப்பு சேவைகளை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதால், அவை நவீன மீள்காப்புறுதி சேவைகளுக்கு மிகவும் பொருத்தமானவை.
ஓமான் – காப்புறுதி நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டில் 609 மில்லியன் ஓமான் ரியால் வருவாயைப் பதிவு செய்துள்ளன, இது ஆண்டுக்கு 8% வளர்ச்சியாகும். அதன் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வளர்ச்சி 21% ஆகும். கட்டாய சுகாதார காப்புறுதித் திட்டமான Dhamani செயல்படுத்தப்படுவதால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும்.
கத்தார் – சுகாதாரம் மற்றும் விசேஷ அபாயங்களில் கவனம் செலுத்துவதற்காக எரிசக்தி சந்தையைத் தாண்டி, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணங்களில் 17% அதிகரிப்பை கத்தார் பதிவு செய்துள்ளது, இது 5.7 பில்லியன் கத்தார் ரியால்கள் அதிகரிப்புடன் உள்ளது. அதன் மத்திய வங்கி ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் டிஜிட்டல் செயல்திறனில் கவனம் செலுத்தும் மீள் காப்புறுதி சேவைகளை ஊக்குவிக்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – மத்திய கிழக்கின் மிக முக்கியமான மையங்களில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 2024 ஆம் ஆண்டில் 64.8 பில்லியன் திர்ஹம்களின் மொத்த எழுத்தப்பட்ட கட்டுப்பணத்தைப் பதிவு செய்தது. அது 21% ஆண்டு வளர்ச்சியாகும். இது மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மீள்காப்புறுதி கட்டுப்பணத்தைப் பதிவு செய்தது, இது டிஜிட்டல் ஆபத்து வாய்ப்புகளில் கவனம் செலுத்துவதையும் அதிகரித்தது.
இந்த சமீபத்திய மூலோபாய விரிவாக்கத்தின் மூலம், Policybazaar இந்தியாவின் காப்புறுதி தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உலகளாவிய மீள்காப்புறுதி சேவைகளுடன் இணைக்கும் அதன் நோக்கத்தை மேலும் மேம்படுத்தியுள்ளது. இது ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் உள்ள காப்புறுதித்தாரர்களுக்கு தெளிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் சுறுசுறுப்புடன் சிக்கலான அபாயங்களைச் சமாளிக்கும் திறனை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.





