தோட்டத் தொழிலாளர்களின் தன்னிச்சையான சம்பள உயர்வுக்கு முதலாளிமார் சம்மேளனம் கடும் எதிர்ப்பு

Share

Share

Share

Share

தேயிலை மற்றும் ரப்பர் துறையில் உள்ளயில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70% உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது

புதிய சம்பள உயர்வால் பெருந்தோட்டத் துறையில் ஏற்பட்டுள்ள பாதகமான பாதிப்புகளுக்கு எதிராக அனைத்து பங்குதாரர்களாலும் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்தத் தீர்மானமானது பெருந்தோட்டத் துறையை நலிவடையச் செய்து இறுதியில் நாட்டில் கடுமையான பொருளாதார ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் என முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

“தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் நலன்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. எந்த நன்மையையும் தராத இந்தத் தீர்மானமானது, இந்நாட்டின் தேயிலை மற்றும் ரப்பர் கைத்தொழிலின் ஒவ்வொரு துறையையும் மேலும் பலவீனப்படுத்தும் என்பது எமது நம்பிக்கை. சிறு தேயிலை தோட்ட மற்றும் ரப்பர் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களை (RPCS) நிர்ப்பந்திக்கும் இந்த தற்போதைய முயற்சியானது, தொழில்துறையின் அடிப்படை செயல்பாட்டுத் தேவைகளைக் குறைப்பதன் மூலம் இத்தகைய நியாயமற்ற சம்பள உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. முழு பெருந்தோட்டத்தின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது மற்றும் இலங்கை முழுவதும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வாதாரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.” என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அரசு எடுத்துள்ள இந்த முடிவால் தேயிலை மற்றும் ரப்பர் உற்பத்திச் செலவு மிக அதிகமாக இருக்குவதுடன், தற்போது மதிப்பிடப்பட்டுள்ள ஒரு கிலோ தேயிலைக்கான செலவு சுமார் 45%ஆல் அதிகரிக்கும். இதன் காரணமாக தேயிலை மற்றும் ரப்பர் கைத்தொழில் உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்படுவதுடன் அத்துறைகளில் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், வருடாந்த EPF/ETF மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகள் 35 பில்லியனாக உயரும் என்பதால், இந்த சம்பள உயர்வு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு (RPCS) தேவையற்ற சுமையை ஏற்படுத்தும். இந்த அழுத்தத்தை இந்நிறுவனங்கள் தாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.

பெருந்தோட்டத்துறை நிர்வாகத்தில் அரச அதிகாரிகள் தலையிடுவதும், தனியார் துறையினருக்கு சம்பளத்தை அதிகரிக்க அழுத்தம் கொடுப்பதும் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாகும் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தீர்மானமானது, குறுகிய கால அரசியல் வெற்றிகளை நோக்கமாகக் கொண்டதுடன், மக்கள் செல்வாக்கு அரசியலால் தூண்டப்படுகிறது, அதற்குப் பதிலாக தொழில்துறையின் நீண்டகாலப் பொருளாதார ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கும், தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் இலக்காகக் கொண்டது அல்ல.

குறைந்தபட்ச தலையீட்டுடன் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் நிதி வலிமையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட சில கடுமையான நிபந்தனைகளுடன் IMF இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை வழங்கியது. இலங்கையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல அரச நிறுவனங்களின் தோல்வியே அவற்றின் பயனற்ற தன்மைக்கும் நிதிச்சுமைக்கும் வழிவகுத்தது.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (SOEs) தவறாக நிர்வகிக்கும் மற்றும் திறமையற்ற முறையில் நிர்வகித்த வரலாற்றை நாட்டின் அரசாங்கம் கொண்டுள்ளது. எனவே, அந்த நிறுவனங்கள் தொடர்ந்து பணத்தை இழந்து மூழ்கும் விளிம்பில் உள்ளன. 1992ஆம் ஆண்டு தனியார்மயமாக்கலின்போது, அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்ததால், அரசாங்கம் வருடாந்தம் 5 பில்லியன் ரூபா வரை கணிசமான நிதியை மானியமாக வழங்க வேண்டியிருந்தது.

மேலும், அரசுக்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு உலக வங்கியிடமிருந்து பெற்றுக்கெகாடுக்கப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி காரணமாக மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு 8 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. இந்தப் பணம் பெறுவது பெருந்தோட்டக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் இருந்த போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதன் காரணமாக பெருந்தோட்டத் துறையினர் இந்தக் கடன்களை செலுத்த முடியாமல் போனதுடன், இறுதியில் அரசாங்கமே இந்தக் கடன் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனியார்மயமாக்கலுக்குப் பிறகு, தொழிலாளர் சம்பளங்கள் கணிசமாக அதிகரித்தன மற்றும் பெருந்தோட்டத் தொழிற்துறை மிகவும் திறமையாக இயங்கியது, பிராந்திய தோட்டக் கம்பனிகளில் 327,123 பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் தொழில் வளர்ச்சியில் அதிக முதலீடு செய்ததுடன், உலகளாவிய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், தூய இலங்கை தேயிலை மற்றும் ரப்பரின் விதிவிலக்கான தரத்திற்காக அவர்களின் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது.

இந்த முயற்சிகள் பெருந்தோட்டத் தொழிலில் மேம்பட்ட வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனுக்கு வழிவகுத்துள்ளதுடன், இப்போது இந்த முன்மொழியப்பட்ட சம்பபள உயர்வு காரணமாக அது ஆபத்தில் உள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது வர்த்தக நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அரசு உடனடியாக கையகப்படுத்துவது, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை கமிஷன் (SEC) விதிகள், நிறுவனங்கள் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களை மீறுவதாகும்.

இத்தகைய தன்னிச்சையான மற்றும் நடைமுறைக்கு மாறான முடிவு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக உற்பத்தி மற்றும் சேவைகள் மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய ரீதியாக முக்கியமான துறைகளை மேம்படுத்துவதற்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இலங்கைக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் நேரத்தில் பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கு அப்பால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமானது உற்பத்தித்திறன் மற்றும் ஏல வருமானத்துடன் இணைக்கப்பட்ட சம்பள மாதிரியை அல்லது தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை உற்பத்தித்திறன் மற்றும் வருவாயுடன் இணைக்கும் வருவாய் பகிர்வு மாதிரியை அமுல்படுத்த வேண்டுமென நீண்டகாலமாக கூறி வருகிறது. இந்த அமைப்பு உற்பத்தித்திறனை ஊக்குவிக்கிறது மற்றும் தொழிலாளர்களுக்கு நியாயமான மற்றும் நிலையான சம்பள முறையை உறுதி செய்கிறது. தொழிலாளர்களுக்கு அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்ட சம்பளத்தை விடவும் கூடுதலான வருமானம் முந்தைய ஊதியக் கட்டமைப்பில் பங்கு வருமானத்தின் கீழ் கோரப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

தினசரி வருகையை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய குறைந்தபட்ச ஊதிய மாதிரி காலாவதியானது மற்றும் நவீன தோட்டத் தொழிலின் தேவைகளைப் பிரதிபலிக்கவில்லை. உற்பத்தி அல்லது தரத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அது ஏற்றுமதிச் சந்தைகளை கடுமையாகப் பாதிக்கும், இது ஏற்றுமதி வருவாய் மற்றும் போட்டித்தன்மையைக் குறைக்க வழிவகுக்கும்.

குறுகிய நோக்குடைய தீர்மானங்களை விட நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் உற்பத்தித்திறன் சார்ந்த சம்பள மாதிரிக்கான தொழில்துறையின் முன்மொழிவுகளை கருத்தில் கொள்ளுமாறு கொள்கை வகுப்பாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Stakeholders validate apparel curriculum for...
Cinnamon Signature Selection, සංචාරක කර්මාන්තයේ...
Neo QLED, OLED, QLED மற்றும்...
Samsung ශ්‍රී ලංකා, Galaxy F06...
ශ්‍රී දළඳා වන්දනාවට සමගාමීව පාරිසරික...
MullenLowe Group Sri Lanka Appoints...
HNB සමූහය 2025 වසරේ පළමු...
Samsung Sri Lanka Ushers in...
MullenLowe Group Sri Lanka Appoints...
HNB සමූහය 2025 වසරේ පළමු...
Samsung Sri Lanka Ushers in...
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් සිංහල හා හින්දු...