நற்காரியங்களின் 23வது RO நிலையத்திற்கான சன்ஷைன் அறக்கட்டளை, சமூகங்களுக்கான பாதுகாப்பான நீர் பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது

Share

Share

Share

Share

2025 செப்டம்பர் 03: நற்காரியங்களுக்கான சன்ஷைன் அறக்கட்டளை, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பில்சி கூட்டு நிறுவன சமூக பொறுப்பு பிரிவானது அதன் 23வது ரிவர்ஸ் ஒஸ்மோஸிஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை சிலாபம், ஹெலம்பவட்டவான ஸ்ரீ சத்தாநந்த மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்தது.

பாடசாலை மற்றும் அதனை சூழவுள்ள சமூகத்தின் பயன்பாட்டிற்கென கையளிக்கப்பட்ட குறித்த புதிய நிலையத்தின் ஊடாக 1,300 மாணவர்களும் 2,000 க்கும் மேற்ப்பட்ட பிரதேச மக்களும் முகம்கொடுத்த நீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்வது, சுகாதாரமான வாழ்வியலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முயற்சியாக அமையப்பெற்றுள்ளதுடன், சிறுநீரக நோய் போன்ற நீரினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றது. அத்துடன் பணம் செலுத்தி நீரைப் பெற்றுக்கொள்ளல், பாதுகாப்பற்ற நீரை அருந்துவதால் ஏற்படக்கூடிய நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு அதிக பணத்தை செலவிடுதல் போன்ற நிதிச் சுமையினை குறைக்கின்றது.

“எமது 23வது RO நிலையம், சிலாபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமையானது சமூக நல்வாழ்விற்கான சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நீண்டகால பொறுப்பை பிரதிபலிக்கிறது.” என சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் தெரிவித்தார். “தியரசனவின் ஒவ்வொரு முயற்சிகளும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதுடன், சமூகத்தில் சுகாதாரம், மீள்தன்மை மற்றும் வளர்ச்சியைப் உறுதிசெய்கிறது. தேசத்தை கட்டியெழுப்புவதிலும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் எமக்கான பங்கினை மீள உறுதிசெய்கிறது.”

பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுப்பதில் SFG யின் அர்ப்பணிப்புமிக்க சமூக நல முயற்சியான தியரசன ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை சுமார் 35,000க்கும் அதிகமான இலங்கையர்களுக்கு நீர் விநியோகத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, தெற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் பல பிராந்தியங்களில் 23 RO நிலையங்கள்; அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலையமும் நாளாந்தம் 5000 முதல் 10,000 லீற்றர் வரையான நீரைப் பெற்றுக்கொடுக்கும் திறன் கொண்டது. இத்திட்டமானது பாடசாலைகள் மற்றும் கிராமங்களுக்கு தேவையான பாதுகாப்பான நீரைப் பெற்றுக்கொடுக்கின்றது. குறிப்பாக, பாதுகாப்பற்ற நீரினால் உயர் இடர்களை எதிர்கொள்ளும் பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

குறித்த முயற்சியானது, ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளில் (SDG – 6) ஒன்றான சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் உட்பட பாதுகாப்பான நீருக்கான உலகளாவிய முயற்சியில் இலங்கையின் முன்னேற்றத்திற்கு நேரடியாக ஒத்துழைப்பு வழங்குகிறது.

சன்ஷைன் ஹோல்டிங்ஸின் CSR முயற்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இரண்டு முக்கிய தூண்களின் கீழ் (கல்வி மற்றும் சுகாதாரம்) 2017ம் ஆண்டு நற்காரியங்களுக்கான சன்ஷைன் அறக்கட்டளை நிறுவப்பட்டது. தியரசன திட்டங்களின் ஊடாக, அறக்கட்டளையானது தொடர்ச்சியாக இது போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், சமூக சுகாதாரம், கல்வி மற்றும் நீண்டகால தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குகின்றது.

தேசிய பொருளாதார மீட்புக்காக ஃபாம் ஒயில்...
நற்காரியங்களின் 23வது RO நிலையத்திற்கான சன்ஷைன்...
Huawei Named Sole Leader in...
Sri Lanka’s Business Leaders Convene...
වෙළෙඳ සේවා වොලිබෝල් තරඟාවලියේදී MAS...
IASL, රක්ෂණයේ නව්‍ය හෙට දවසකට...
Cinnamon Life at City of...
සැම්සුන් ඉලෙක්ට්‍රොනික්ස් සැබෑ විනෝදාස්වාදය වෙනුවෙන්...
IASL, රක්ෂණයේ නව්‍ය හෙට දවසකට...
Cinnamon Life at City of...
සැම්සුන් ඉලෙක්ට්‍රොනික්ස් සැබෑ විනෝදාස්වාදය වෙනුවෙන්...
2025 ගෘහ පාලන සතිය සමඟින්...