நவலோக்க மருத்துவமனையின் 40வது ஆண்டு விழாவை ஒட்டி மருத்துவமனைத் தொகுதியின் புதிய வர்த்தக இலச்சினை வெளியிடப்பட்டது

Share

Share

Share

Share

இலங்கையின் தனியார் மருத்துவமனைத் துறையில் ஒரு முன்னோடியான நவலோக்க மருத்துவமனைகள் குழுமம், தனது 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு தனது புதிய வர்த்தக நாம இலச்சினையை அண்மையில் வெளியிட்டது. நவலோக்க மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற 40வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில், நவலோக்க மருத்துவமனையில் 40 ஆண்டுகள் மட்டும் அதற்கு அண்ணளவான காலம் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். நாட்டின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணரான பேராசிரியர் ஷெரீப்டீன் இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 1985 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நவலோக்க மருத்துவமனை குழுமம், இலங்கையின் சுகாதார சேவைத் துறையை சர்வதேச அளவில் உயர்த்துவதில் முன்னோடிப் பணியாற்றியுள்ளது. மேலும், மிகவும் சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் மூளை சார்ந்த அறுவை சிகிச்சைகளை முதன்முறையாக செயல்படுத்திய தனியார் துறையின் முன்னணி மருத்துவமனை குழுமமாக இது உள்ளது.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை இலங்கைக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்திய முன்னோடு முயற்சியையும் நவலோக்க மருத்துவமனைகள் குழுமம் மேற்கொண்டது. நவலோக்க மருத்துவமனைகளின் 40வது ஆண்டு விழாவிற்கு, நவலோக்க மருத்துவமனைகளின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாஸ, துணைத் தலைவர் அனீஷா தர்மதாஸ, நிறைவேற்று பணிப்பாளர் பேராசிரியர் லால் சந்திரசேன உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நவலோக்க மருத்துவமனைகளின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஒரு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு இலங்கை தபால் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. நவலோக்க மருத்துவமனைகளின் 40வது ஆண்டு விழாவில், Cooperate, cinema, sports போன்ற துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 300க்கும் மேற்பட்ட அதிதிகள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, நவலோக்க மருத்துவமனையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்களின் தலைமையில், 200 விழா பலூன்கள் விண்ணில் விடப்பட்டன. இந்த 200 பலூன்களில், 40 பலூன்களில் முழு மருத்துவ பரிசோதனை வவ்சர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த வவ்சர்களைப் பெறும் நபர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நவலோக்க மருத்துவமனையில் இலவசமாக முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும், பகல் ஷிப்டில் பணியாற்றும் 1,500க்கும் மேற்பட்ட நவலோக்க ஊழியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இரவு ஷிப்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரு நினைவுச் சின்ன பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நவலோக்க மருத்துவமனையின் 40வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நவலோக்க மருத்துவமனைகளின் தலைவர் ஜயந்த தர்மதாஸ கருத்து தெரிவிக்கையில், “அசையாத துணிவு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நவலோக்க மருத்துவமனைகளை இலங்கையின் முதல்தர தனியார் மருத்துவமனையாக உருவாக்கிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க இந்த நிகழ்வை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகிறேன். இலங்கையிலுள்ளவர்களுக்கு சர்வதேச தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் எனும் நவலோக்கவின் வாக்குறுதியை நிறுவனத்தின் தொடக்கத்திலிருந்தே இன்று வரை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். குறிப்பாக, இதயம், மூளை, கல்லீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை போன்ற மிகவும் சிக்கலான பல அறுவை சிகிச்சைகளை முதன்முறையாக தனியார் மருத்துவமனைத் துறைக்கு அறிமுகப்படுத்த நவலோக்க மருத்துவமனைகளால் முடிந்தது” என தெரிவித்தார்.

நவலோக்க மருத்துவமனைகளின் 40வது ஆண்டு விழாவை ஒட்டி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வர்தகநாம இலச்சினை, நீலம் மற்றும் செம்மஞ்சல் நிறங்களால் ஆனது. இந்த நிறங்கள் 2026 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட நிறங்களாகக் கருதப்படுகின்றன. இந்த புதிய வர்த்தக இலச்சினை குறித்து கருத்து தெரிவித்த நவலோக்க மருத்துவமனைகளின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாஸ, “இந்த புதிய இலச்சினை, நவலோக்க மருத்துவமனைகளின் வளர்ச்சி, அர்ப்பணிப்பு, கருணை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மருத்துவ சேவைகளைப் பிரதிபலிக்கிறது. தற்போது மருத்துவத் துறைக்கு நவீன தொழில்நுட்பத்தை வழங்கும் நவலோக்க மருத்துவமனைகள், எதிர்காலத்திலும் இலங்கையின் தனியார் மருத்துவமனைத் துறையில் முன்னணி இடத்தைப் பிடித்துக்கொண்டு தொடரும் என்பது எனது நம்பிக்கையாகும்” என மேலும் தெரிவித்தார்.

நவலோக்க மருத்துவமனைகளின் குழுமம், AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு கதிர்வீச்சு நோய் கண்டறிதல் துறையை மேம்படுத்தும் வகையில், தனது கதிர்வீச்சியல் மையத்தில் நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட MRI மற்றும் CT ஸ்கேன் பொறியமைப்புகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், மிகவும் துல்லியமான மற்றும் நடைமுறைக்குரிய நோய் கண்டறிதல் முடிவுகளைப் பெறவும், மிகவும் வெற்றிகரமான சிகிச்சைகளை வழங்கவும் நவலோகா மருத்துவமனைகளுக்கு சாத்தியமாகியுள்ளது.

Softlogic Life Grows 29% with...
TikTok Launches Time and Well-being...
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன்...
Sri Lanka Targets Inclusive Economic...
2025 SLIM ජාතික විකුණුම් සම්මාන...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
Global Talent Competes to Solve...