நவலோக மருத்துவமனை குழுமம் Home Care சேவையை மேலும் வலுவூட்டுகிறது

Share

Share

Share

Share

இலங்கையில் தனியார் சுகாதாரத் துறையில் முன்னோடியாகத் திகழும் நவலோக்க மருத்துவமனை குழுமம், அதன் சிறப்பு, தரம் மற்றும் மனதைக் கவரும் சுகாதார சேவைகளில் ஒரு படி முன்னேறி, தனது Home Care சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் இந்த தனித்துவமான பராமரிப்பு சேவைத் தொகுப்பில், நோயாளியை குளிப்பாட்டுதல் மற்றும் ஆடை அணிவித்தல் போன்ற அன்றாட நடவடிக்கைகளில் இருந்து சிக்கலான சுகாதார பராமரிப்பு தேவைகள் வரை உள்ளது. பிரத்யேக சுகாதார பணியாளர்கள் குழுவினரால் NG Feeding, PEG Feeding மற்றும் Tracheostomy பராமரிப்பு உள்ளிட்ட சிறப்பு சேவைகளை வழங்குகிறது, சிறப்பு சுகாதார தேவைகள் உள்ள அனைத்து நோயாளிகளும் மிக உயர்ந்த தரமான கவனிப்பைப் பெறுவதை இந்த Home Care சேவை உறுதிசெய்கிறது.

“நவலோக்க மருத்துவமனைகள் குழுமமாகிய நாங்கள் இலங்கையிலுள்ள அனைவருக்கும் தனித்துவமான மற்றும் புத்தாக்கமான சேவைகளை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் மற்றும் விதிவிலக்கான நோயாளர் பராமரிப்பை வழங்குகிறோம். எங்கள் ஊழியர்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் நோயாளிகளை மையமாகக் கொண்டு, அவர்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது. குறிப்பாக எந்த அவசர சேவைகளுக்கும், மருத்துவ ஆலோசனை அல்லது மருத்துவ பரிசோதனைகளுக்கு மருத்துவமனையை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். நவலோகா Home Care சேவையின் ஊடாக, நோயாளிகள் தமது சுகாதாரத் தேவைகளை மிக இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும், மேலும் இவ்வாறானதொரு சேவையை ஆரம்பித்து வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச தெரிவித்தார்.

நவலோக்க மருத்துவமனைக் குழுமத்தினால் ஒவ்வொரு நோயாளிக்கும் தரத்திற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் விளைவாக பராமரிப்பு திட்டங்களை (Care Plans) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Care Plans அவர்களின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் அவர்களின் கவனிப்புக்கு உயர்தர சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், உணவளித்தல், மருந்து நிர்வாகம், Tracheostomy பராமரிப்பு மற்றும் சுவாசப் பராமரிப்பு அனைத்தும் மருத்துவமனையின் Home nursing Careஇல் இருந்து செய்யப்படுகின்றன.

நவலோக்க மருத்துவமனைக் குழுமத்தின் தரம் மற்றும் நிபுணத்துவத்திற்கு எங்களின் விதிவிலக்கான சேவை வலையமைப்பு சான்றாக உள்ளது. பராமரிப்புக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் NVQ நிலை 3 அல்லது 4 தகுதியைப் பெற்றுள்ளனர், இது உயர்தர சுகாதார சேவையை வழங்குவதற்கான திறனையும் தொழில்முறையையும் நிரூபிக்கிறது. நோயாளிகளுக்கு பரந்த அளவிலான சுகாதார சேவைகளை வழங்குவதன் செயல்திறனையும் இந்த சான்றிதழ் உறுதி செய்கிறது.

“எங்கள் ஊழியர்கள் நிபுணர் மற்றும் நல்ல சேவையை வழங்குகிறார்கள். அவர்களின் பயிற்சி, விரிவான அனுபவம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், நோயாளிகளின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட சேவைகளை அவர்கள் வழங்குகிறார்கள். சிக்கலான சுகாதார நிலைமைகளைக் கையாள்வதில் அவர்களின் நிபுணத்துவம், நோயாளிகளுக்கான உண்மையான அனுதாபத்துடன் இணைந்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் மிக உயர்ந்த தரமான பராமரிப்பை உறுதி செய்கிறது. பராமரிப்பில் இணையற்ற நிபுணத்துவத்தை தொடர்ந்து வெளிப்படுத்தும் உதவியாளர்கள் குழுவைக் கொண்டிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” என கலாநிதி ஜயந்த தர்மதாச மேலும் வலியுறுத்தினார்.

 

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் கருவிகள் மூலம்,...
China Unicom Beijing, Huawei Deploy...
Strong sectoral performances drive CIC’s...
JAAF welcomes 2026 Budget focus...
Sampath Bank Honoured at the...
Renewed diaspora optimism as the...
Green Cabin Marks Festive Season...
Mahindra Ideal Finance records 204%...
Renewed diaspora optimism as the...
Green Cabin Marks Festive Season...
Mahindra Ideal Finance records 204%...
දහසය වන ජාතික සයිබර් ආරක්ෂණ...