நாடு முழுவதிலும் நோக்கம் சார்ந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஊடாக 87,000 பயனாளிகளை பலப்படுத்தும் Outreach Projects

Share

Share

Share

Share

Outreach Projects (Guarantee) Limited, சமூகப் பராமரிப்பு முயற்சிகள் மூலம் உள்ளூர் சமூகங்களை பலப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற சுயாதீன அமைப்பாகும், இந்த அமைப்பின் ஊடாக 2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 87,000 க்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

Outreach Projects அதன் கார்ப்பரேட் சோஷியல் இன்வெஸ்ட்மென்ட் (CSI) திட்டங்களுக்கு இணையாக ஒரு வருடத்தில் 170 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் முதன்மையான CSI திட்டமான, நிலையான வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் (SADP), தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் வீட்டுத் தோட்டம் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் தன்னிறைவு அடைய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் 2022 வரை 33,000க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர். கம்பளை, வலஸ்முல்ல, வெலிகேபொல, பிலான, பிபிலே, வெலிகம, தலாவ, அகுனுகொலபலஸ்ஸ, தம்புள்ளை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குண்டசாலை ஆகிய பகுதிகளுக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், இது இப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்க உதவுகிறது.

 

‘சுவ ஜீவன்’ திட்டத்தின் மூலம் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் சமூகங்களுக்கு 9 Reverse Osmosis (RO) நீர் சுத்திகரிப்பு அலகுகளை நிறுவுவதன் மூலம் நாட்டில் நீண்டகால சிறுநீரக நோய்க்கு (CKD) எதிரான போராட்டத்திற்கு Outreach Projects தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இதன் மூலம் தியவின்ன, வெலிபத்தயாய, அவுகன, அத்தனகத்வெல, நிகபதிய, பக்கமூன, கொட்டபிட்டிய, பதுலுஓயா மற்றும் மெகல்லேவ ஆகிய பகுதிகளில் உள்ள 6,750 குடும்பங்களில் வசிக்கும் 27,000 பேருக்கு வருடம் முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த Outreach Projects (Garantee) Limited இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி சேனக்க டி பொன்சேகா, “2006 ஆம் ஆண்டு முதல் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அம்சங்களில் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தேசிய முன்னுரிமை விடயங்களாக அடையாளம் காணப்பட்ட சமூகப் பிரச்சினைகளுடன் நமது தேசிய திட்டங்களை சீரமைப்பது முதல் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு அடிமட்ட மக்களுடன் தொடர்பு கொள்வது வரை, இதில் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதில் நாம் வகிக்கும் முக்கிய பங்கை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.

 

தேசிய தொழிற்பயிற்சிகள் மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணையம் (NAITA) மற்றும் தேசிய இளைஞர் சேவை கவுன்சில் (NYSC) ஆகியவற்றுடன் இணைந்து, தகுதி அடிப்படையிலான தொழிற்பயிற்சி உதவித்தொகைகளை வழங்குவதற்காக ‘தொழில்முனைவோர்’ என்ற புதிய திட்டத்துடன் ஆயிரக்கணக்கான திறமையான (வளர்ந்துவரும்) தொழில்முனைவோருக்கு பலத்தை அளித்து வருகிறோம். இது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் மிகவும் தேவையான வருமானத்தைக் கொண்டுவருவதற்கும் பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என அவர் மேலும் கூறினார்.

Outreach Projects (Guarantee) Limited தொடர்பில்

2006 இல் ஸ்தாபிக்கப்பட்ட Outreach Projects (Guarantee) Limited என்பது இலங்கையின் சமூக-பொருளாதாரப் பின்னணியை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுயாதீன இலாப நோக்கற்ற அமைப்பாகும். பல ஆண்டுகளாக நாடு முழுவதிலும் உள்ள பின்தங்கிய சமூகங்களின் வலுவூட்டலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக முதலீட்டு திட்டங்களை அடையாளம் கண்டு, அபிவிருத்தி செய்து, முன்னின்று நடத்துவதற்கு இது உறுதிபூண்டுள்ளது. இந்தத் திட்டங்களில் வறுமை ஒழிப்பு, விவசாய மேம்பாடு, அடிப்படை சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கம், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவை அடங்கும். பல ஆண்டுகளாக, சமூகத்திற்கு Outreach Projects இன் நேர்மறையான பங்களிப்பு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விவசாய Enterprise Asia விருது வழங்கும் நிகழ்வில் “Best Environmental Value Addition Programme’ விருதையும், நிலையான விவசாய அபிவிருத்தி திட்டத்திற்கான (SADP) ‘Social Empowerment’ விருதையும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் பெற்றதன் மூலம் இது நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ගාල්ල රසවත් කළ Coke Food...
2024 ஆம் ஆண்டில் 5% ஏற்றுமதி...
HNB ත්‍රෛභාෂා ජංගම දුරකතන යෙදවුමක්...
Global Expansia 1.0: AIESEC Kelaniya...
JAAF මෙරට ඇඟලුම් ක්ෂේත්‍රයේ රැකියා...
ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam”...
Renowned Global Experts to Inspire...
Sri Lanka Apparel achieves 5%...
ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam”...
Renowned Global Experts to Inspire...
Sri Lanka Apparel achieves 5%...
Softlogic Life to introduce AI...