நிலையான நிதி முறையின் கீழ் உள்ள உறுப்பினர்களின் வீட்டு சூரிய சக்தி தேவைக்கான நிதி வசதிகளை வழங்கும் HNB FINANCE PLC

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLCஇன் நிலையான மற்றும் பசுமை நிதியமைப்பு (Sustainable & Green Financing) கருத்தாக்கத்தின் கீழ், சனச சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வீட்டு சூரிய சக்தி உபகரணங்களை வாங்குவதற்கான நிதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. HNB FINANCE நிறுவனம் இந்த திட்டத்தை முதல் முறையாக அதுருகிரிய சனச சங்கத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வீட்டு சூரிய சக்தி உபகரணங்கள் மற்றும் அதன் நிறுவும் பணிகளுக்காக 33 மில்லியன் ரூபா அதுருகிரிய சனச சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை HNB Finance-இன் நிதி உதவி மற்றும் சனச நிதியம் மூலம் 6 kW திறன் கொண்ட 65 சூரிய சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிவதற்குள் இந்த எண்ணிக்கையை 100 அலகுகள் வரை உயர்த்துவது சங்கத்தின் நோக்கமாகும்.

HNB FINANCE PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் அவர்கள் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “நிதி சேவைகளை வழங்கும்போது, அந்த நிதி வசதிகள் வழங்கப்படும் திட்டங்களின் தன்மை மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நாங்கள் தொடர்ச்சியான மதிப்பீட்டை மேற்கொள்கிறோம். சுற்றுச்சூழல் நலன் கருதும் வணிகங்கள் மற்றும் வணிகத் திட்டங்களுக்கு நிதி வசதிகள் வழங்குவது இதன் அத்தியாவசிய அங்கமாக நாங்கள் கருதுகிறோம். இந்த முயற்சியை மேலும் விரிவாகவும், உகந்த மட்டத்திலும் நடத்திச் செல்ல ‘நிலையான நிதியமைப்பு’ (Sustainable Financing) திட்டமாக இதைத் தொடங்க நம்மால் முடிந்தது. இவ்வாறு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் எங்கள் சேவை முன்னுரிமைகளில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. மேலும் பல நிதி நிறுவனங்கள் நிலையான நிதி வழங்குதல்கள் (Sustainable Financing) நோக்கி திருப்பப்படுவதற்கான ஒரு படியாகவும் இது அமையும் என்று குறிப்பிட விரும்புகிறேன்.” என தெரிவித்தார்.

The future of electric driving...
இலகு நிதி முகாமைத்துவத்துக்காக ஒரு புதிய...
குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக புலமைப் பரிசில்களை...
HNB සහ Ideal Motors වෙතින්...
SLISA සමාරම්භක පාසල් නායක සමුළුව...
இலங்கை முழுவதும் 25 மெகாவாட் பயன்பாட்டிற்கு...
SampathCards & Hilton Colombo Collaborate...
நிம்னா & இசுரு: TikTok மூலம்...
இலங்கை முழுவதும் 25 மெகாவாட் பயன்பாட்டிற்கு...
SampathCards & Hilton Colombo Collaborate...
நிம்னா & இசுரு: TikTok மூலம்...
Samsung Sri Lanka Hosts B2B...