இன்றைய வேகமான உலகில், இளைஞர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய தீர்மானங்களை எடுப்பதில் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்கின்றனர். எதனைப் படிப்பது, எந்தத் துறை எதிர்காலத்திற்குப் பாதுகாப்பானது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் பழைய தலைமுறையினரின் அனுபவங்களிலிருந்து மட்டும் கிடைப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் மற்றும் மாறிவரும் உலகப் பொருளாதாரம் காரணமாக, பாரம்பரிய கல்வி முறைகளுக்கும் தொழில் வாய்ப்புகளுக்கும் இடையிலான தொடர்பு இன்று நேர்க்கோடாக அமைவதில்லை. இத்தகையதொரு நிலையில், சமூக ஊடகங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தாமல், ஒரு முக்கிய தேடுதளமாகவும், முடிவுகளை எடுப்பதற்கான கருவியாகவும் இளைஞர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, TikTok தளம் வெறும் வீடியோக்களைப் பார்க்கும் இடமாகத் தாண்டி, நிஜ வாழ்க்கை அனுபவங்களை அவதானித்து ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு தளமாகப் பரிணமித்துள்ளது.
பரீட்சைக்கு தயாராகின்றது வரை, மாணவர்கள் இன்று வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் நம்பியிருப்பதில்லை. பாடங்களைக் கற்றுக் கொள்வதை விட, சவாலான சூழலில் எவ்வாறு திறம்படப் படிப்பது (How to study) என்பதே அவர்களது பெரும் கவலையாக உள்ளது. பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளில் பாடங்களை நடத்தினாலும், ஒரு மாணவர் அந்தத் தயாரிப்பு காலத்தை எவ்வாறு கையாள்கிறார் என்ற ‘செயல்முறை’ பற்றிய புரிதலை வழங்குவதில்லை. இதனைத் தீர்க்க மாணவர்கள் TikTok-ஐ தேடுகின்றனர்.
அங்குள்ள குறுகிய வீடியோக்கள் மூலம் பிற மாணவர்களின் படிப்பு அட்டவணைகள், நேர முகாமைத்துவம் மற்றும் நெருக்கடியான நேரங்களில் அவர்கள் கடைப்பிடிக்கும் உத்திகளைப் பார்த்துத் தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்துகொள்கின்றனர். இது ஒரு மாணவர் தனது சொந்த நேரம் மற்றும் திறமைக்கு ஏற்ப எது சாத்தியமான வழி என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது.
கல்விப் பாதையைத் தெரிவு செய்வதிலும் இதே போன்றதொரு மாற்றத்தை இளைஞர்களிடம் காண முடிகிறது. புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களை மட்டும் பார்க்காமல், ஒரு கற்கை நெறியை தேர்ந்தெடுத்து படிப்பது நடைமுறையில் எவ்வாறு இருக்கும், அதன் வேலைவாய்ப்புத் திறன் என்ன என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் விரும்புகின்றனர். TikTok இல் தற்போதைய மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் பகிரும் வீடியோக்கள் மூலம், ஒரு குறிப்பிட்ட கல்வி தொடர்பான பணிச்சுமை, தேவையான திறன்கள் மற்றும் அந்தத் துறையில் உள்ள யதார்த்தமான சவால்களை இளைஞர்கள் முன்கூட்டியே அவதானிக்கின்றனர். இது கல்வி நிலையங்களின் விளம்பரத் தாள்களை (Prospectuses) விடவும் அவர்களுக்கு ஒரு தெளிவான சித்திரத்தை வழங்குகின்றது.
தொழில் வாழ்க்கை குறித்த புரிதலில், முன்னொரு காலத்தில் பத்திரிகைகள் அல்லது இணையதளங்களில் பகிரப்பட்ட மிகக் குறைந்த தகவல்களே ஆதாரமாக இருந்தன. ஆனால் இன்று, #LearnonTikTok போன்ற ஹேஷ்டேக்குகளின் கீழ் பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் தங்கள் அன்றாட பணி வாழ்வை (Day-in-the-life) ஒளிவுமறைவின்றிப் பகிர்கின்றனர். இந்த வீடியோக்கள் மூலம் ஒரு தொழில்துறையில் உள்ள வெற்றி, தோல்வி மற்றும் அன்றாட நடைமுறைகளை இளைஞர்கள் நேரடியாகக் காண்கின்றனர். இது பாரம்பரிய தொழில் வழிகாட்டல் முறைகளை விடவும் விரிவான மற்றும் துல்லியமான பார்வையை அவர்களுக்கு வழங்குகிறது.
திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் இளைஞர்கள் இன்று ஒரு புதிய அணுகுமுறையைக் கையாள்கின்றனர். முந்தைய தலைமுறையினர் ஒரு படிப்பில் சேர்ந்த பிறகு அதன் பொருத்தப்பாட்டை உணர்ந்தனர். ஆனால் இன்றைய இளைஞர்கள், நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்வதற்கு முன்னரே, ஒரு திறன் தனக்குப் பொருத்தமானதா என்பதை TikTok தேடல் மூலம் பரிசோதித்துப் பார்க்கின்றனர். அங்கு வெறும் பாடங்களைக் கற்காமல், அந்தத் திறன்கள் நிஜ உலகில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், வேலைவாய்ப்புச் சந்தையில் அவற்றுக்குள்ள மதிப்பையும் ஆராய்கின்றனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், TikTok தேடல் என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக அன்றி, எதார்த்தமான வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து ஆபத்துகளைக் குறைப்பதற்கான ஒரு தளமாக மாறியுள்ளது. பாரம்பரிய வழிகாட்டுதல்கள் மற்றும் பழைய முறைகள் உறுதிப்பாட்டை வழங்கத் தவறும் இன்றைய உலகில், TikTok இளைஞர்களுக்கு ஒரு திசைகாட்டியாகச் செயல்படுகின்றது. இது வெறும் பதில்களைக் கண்டறியும் இடமல்ல, மாறாகத் தங்களின் கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கை குறித்த சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான ஒரு நடைமுறைக் கருவியாகும்.



