அஸ்மா அன்ஜும், TikTok இன் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புப் பிரிவு தலைவர்
சமூக ஊடகங்கள் மாணவர்களின் கற்றல் முறையை TikTok மாற்றியுள்ளன. இந்த மாற்றம் தகவல் வேகமாகக் கிடைப்பதால் மட்டும் நிகழவில்லை. மாறாக, கவனம் செலுத்தும் விதம், ஆர்வம், சக மாணவர்களின் தாக்கம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களால் நிகழ்கிறது.
இத்தளங்களில் கற்றல் என்பது தனிநபர் செயல்பாடு அல்ல. அது ஒரு கூட்டு அனுபவம். மாணவர்கள் தங்கள் நண்பர்கள் எதைப் படிக்கிறார்கள், எப்படி அணுகுகிறார்கள் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கவனித்து, அவற்றைப் பின்பற்றி, உடனடி கருத்துகளைப் பெறுகின்றனர். இது புதிய கருத்துகளை ஆராயவும் பரிசோதிக்கவும் வாய்ப்பளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில், அரைகுறை புரிதல்கள், தவறான கருத்துக்கள், நிரூபிக்கப்படாத போக்குகள் ஆகியவை வேகமாகப் பரவும் ஆபத்தும் உள்ளது.
சமூக ஊடகத் தளங்களின் கடமை வெறும் உள்ளடக்கத்தை வழங்குவதோடு நின்றுவிடக் கூடாது. பரிந்துரைகள் எவ்வாறு காட்டப்படுகின்றன, பயனர்கள் எவ்வாறு தொடர்புகொள்கின்றனர் என ஒவ்வொரு வடிவமைப்பு முடிவும் மாணவர்கள் எதைக் கவனிக்கிறார்கள், எதை நம்புகிறார்கள், எதை ஆராய்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. கல்விக்காக சமூக ஊடகங்களைப் பயனுள்ள வகையில் செயல்படுத்த திட்டமிட்ட நடவடிக்கைகள் அவசியம். சரிபார்க்கப்பட்ட தகவல் மூலங்கள், தெளிவான விளக்கங்கள், சிந்திக்கத் தூண்டும் கேள்விகள், தவறான புரிதல்களைச் சரிசெய்யும் வழிமுறைகள் போன்றவை இதில் அடங்கும். ஆசிரியர்களுக்கு முன் உள்ள சவால் இன்னும் பெரியது. மாணவர்கள் காண்பவற்றை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதை வழிநடத்துவது, இந்த அனுபவங்களை பரந்த கற்றல் இலக்குகளோடு இணைப்பது, காணும் தகவல்களை விமர்சன பார்வையுடன் மதிப்பிட மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பது ஆகியவை அவர்களின் முக்கிய கடமைகளாக மாறியுள்ளன.
சமூக ஊடகங்கள் தகவல் தளங்கள் மட்டுமல்ல. மாணவர்களின் நடத்தையை வடிவமைக்கும் சூழலாகவும் செயல்படுகின்றன. சரியான முறையில் பயன்படுத்தினால் இவை மாணவர்களின் அறிவுத் தாகத்தைத் தூண்டும், கூட்டுக் கற்றலை ஊக்குவிக்கும், வகுப்பறைகளில் கிடைக்காத கற்றல் வாய்ப்புகளை உருவாக்கும். ஆனால் இந்தப் பலன்களை அடைய கற்பித்தல் முறைகள், தள வடிவமைப்பு, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் திட்டமிட்ட ஒருங்கிணைப்பு அவசியம். சமூக ஊடகங்களின் சமூகத் தன்மையே அவற்றின் மிகப்பெரிய பலமும் அதே நேரத்தில் மிகப்பெரிய பலவீனமும் என்பதை உணர்ந்து செயல்படுவது முக்கியம்.
பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள டிஜிட்டல் கற்றலை உறுதி செய்தல்
டிஜிட்டல் தளங்கள் மாணவர்களுக்கு ஆராய்வதற்கும் இணைந்து கற்பதற்கும் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை வழங்குகின்றன. TikTok தளம் கற்றலைப் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் வயதுக்கேற்றதாகவும் மாற்ற ஒரு தெளிவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் தளத்தை ஈர்க்கும் வகையில் மாற்றும் வேகம், பரவல், ஊடாட்டம் போன்ற அம்சங்களே தகவல் சரிபார்ப்பு மற்றும் கட்டுப்பாடற்ற வைரல் பரவல் என்ற சவால்களையும் உருவாக்குகின்றன.
TikTok டிஜிட்டல் கற்றலின் சவால்களை எதிர்கொள்ள கொள்கை, தொழில்நுட்பம், சிந்தனைமிக்க வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. மாணவர்களின் மன வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 13 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தளம் அணுக அனுமதி இல்லை. உள்ளடக்கங்கள் கற்றல் மதிப்பு, வயதுக்கேற்ற தன்மை, உண்மைத்தன்மை என மூன்று நிலைகளில் சரிபார்க்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவும் மனித மேற்பார்வையும் இணைந்து தீங்கான உள்ளடக்கங்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கின்றன. #LearnOnTikTok, #StudyTok போன்ற குறிச்சொற்கள் (ஹேஷ்டேக்குகள்) மூலம் மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் புதிய திறன்களையும் கருத்துகளையும் கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.
கல்வி உள்ளடக்கம் உருவாக்கும் படைப்பாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய TikTok சிறப்பு சரிபார்ப்பு முறையைப் பின்பற்றுகிறது. STEM Feed போன்ற பிரிவுகளில் இடம்பெறுவோரின் தகுதி தீர ஆராயப்படுகிறது. உள்ளடக்கங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வழங்கப்படுவதால் மாணவர்கள் பாதுகாப்பாக தளத்தைப் பயன்படுத்துகின்றனர். வழிகாட்டும் குறிப்புகளும் ஊடாடும் அம்சங்களும் ஆபத்தில்லாமல் ஆழமான ஈடுபாட்டைத் தூண்டுகின்றன. பல்வேறு பிராந்தியங்களில் உள்ள மாணவர்களை அடைவதும் டிஜிட்டல் அறிவு மற்றும் சாதன வசதியில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பதும் TikTok இன் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளன.
இதிலிருந்து ஒரு முக்கிய படிப்பினை கிடைக்கிறது. டிஜிட்டல் கற்றல் தளங்கள் பாதுகாப்பு வேலிகளையும் தகவல் சரிபார்ப்பு முறைகளையும் அனைத்து தரப்பினரையும் சேர்த்துக்கொள்ளும் வடிவமைப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். TikTok இதை எவ்வாறு சாத்தியமாக்குகிறது என்பதற்கு சிறந்த உதாரணம். மாணவர்களின் பாதுகாப்பையும் ஈடுபாட்டையும் உறுதிசெய்தபடியே கற்றல் வாய்ப்புகளை பரந்த அளவில் கொண்டுசெல்ல முடியும் என்பதை இது நிரூபித்துள்ளது. இக்கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் சமூக ஊடகங்கள் கல்வியை பாதுகாப்பான, நம்பகமான, அர்த்தமுள்ள இடமாக மாற்றி உலகம் முழுவதும் மாணவர்கள் கற்கவும் படைக்கவும் வளரவும் உதவும்.
பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கல்விக்கான வழிகாட்டு
சமூக ஊடகத் தளங்கள் மாணவர்களை ஈர்க்க முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் இந்தப் நன்மைகள் கற்றல் சூழல் பாதுகாப்பாகவும், ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கும்போது மட்டுமே சாத்தியமாகும். தளங்கள் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கம், தெளிவான வழிகாட்டுதல், வயதுக்கேற்ற பாதுகாப்புக் கட்டமைப்புகளை வழங்கி மாணவர்களைப் பாதுகாப்பதோடு அவர்களின் ஆர்வத்தையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்களிடம் டிஜிட்டல் எழுத்தறிவையும் இணையத்தில் பொறுப்புணர்வுடன் செயல்படும் திறனையும் வளர்ப்பது மிக முக்கியம்.
உள்ளடக்கங்களை விமர்சன பார்வையுடன் மதிப்பிடுவது, நம்பகமான தகவல் மூலங்களைக் கண்டறிவது, டிஜிட்டல் உலகில் மரியாதையுடன் பங்கேற்பது ஆகிய திறன்கள் மாணவர்களுக்கு அவசியம். இந்த வாய்ப்புகளை நாடு முழுவதும் கொண்டுசெல்ல அரசாங்கம், கல்வியாளர்கள், தொழில்நுட்பத் தளங்கள் ஆகிய மூன்று தரப்பினரும் கைகோர்த்து செயல்படும்போதே இது சாத்தியமாகும்.
இணைய வசதியில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கவும் அனைவருக்கும் சம வாய்ப்பை உறுதிசெய்யவும் பின்தங்கிய சமூகங்களுக்கு உதவவும் இலக்கு நோக்கிய சிறப்புத் திட்டங்கள் அவசியம். புதிய தொழில்நுட்பங்களுக்கும் மாணவர்களின் மாறும் தேவைகளுக்கும் ஏற்ப கொள்கைகள், உள்ளடக்கங்கள், கற்றல் கருவிகள் ஆகியவை தொடர்ந்து மேம்படுத்தப்பட தொடர் கண்காணிப்பும் சூழலுக்கேற்ற மாற்றங்களும் இன்றியமையாதவை.
பாதுகாப்பு, நம்பகத்தன்மை, அணுகல் வசதி ஆகியவை மாணவர்களின் ஈடுபாட்டுடன் இணையும்போது சமூக ஊடகங்கள் கல்வியை இயக்கமுள்ளதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் தாக்கமுள்ளதாகவும் மாற்றும். இக்கொள்கைகளை முன்னுரிமையாகக் கொண்டால் இலங்கை தனது அடுத்த தலைமுறையை டிஜிட்டல் உள்ளடக்கங்களை வெறுமனே நுகர்வோராக மட்டுமின்றி படைப்பவர்களாகவும் கற்போராகவும் வளர்ப்போராகவும் உருவாக்க முடியும்.




