பாரம்பரிய கெவும் முதல் நவீன கீட்டோ வரை: அன்றாட சமையல் குறிப்புகளுக்காக TikTok-ஐ நாடும் இலங்கையர்கள்

Share

Share

Share

Share

இலங்கையின் பாரம்பரிய சமையல் கலை என்பது தலைமுறை தலைமுறையாக நேரடி அவதானிப்பின் மூலமே கடத்தப்பட்டு வந்துள்ளது. ஒரு தாய் எவ்வாறு மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறார் என்பதைப் பார்த்தும், கைகளால் மாவின் பதத்தை உணர்ந்தும், எந்தவித எழுத்துப்பூர்வமான குறிப்புகளும் இன்றி சமையல் நுணுக்கங்கள் கற்கப்பட்டன. ஆனால் இன்று சமையலறையின் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. சமையலறைகள் வேகமானவையாகவும், உணவு முறைகள் மாறுபட்டவையாகவும், நேரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் மாறியுள்ளன. இந்த வேகமான உலகில், இன்றைய இலங்கையர்கள் சமையல் குறிப்புகளுக்காக சமையல் புத்தகங்களை விட TikTok தளத்தையே அதிகம் நாடுகின்றனர். சிங்களப் புத்தாண்டுக்கான பாரம்பரிய ‘கெவும்’ பலகாரம் முதல் நவீன ‘கீட்டோ’ (Keto) உணவு வகைகள் வரை, எவ்விதமான சமையல் தேடலுக்கும் TikTok ஒரு சிறந்த வழிகாட்டியாக உருவெடுத்துள்ளது.

TikTok-இன் தேடல் வசதியானது சமையல் முறைகளைக் காட்சி ரீதியாகவும் (visual), நேரடியாகவும், மிக எளிமையாகவும் மாற்றியுள்ளது. மக்கள் தற்போது மிகச்சரியான செய்முறைகளைத் தேடுவதை விட, ஒரு உணவு சமைக்கப்படும் போது எப்படி இருக்கும், எவ்வளவு நேரத்தில் அதனைச் சமைக்கலாம் மற்றும் அது தங்களின் வேலைப்பளுமிக்க வாழ்க்கைக்குப் பொருந்துமா என்பதையே அதிகம் கவனிக்கின்றனர். இவ்வாறாக, பாரம்பரிய உணவுகள் முதல் நவீன உணவு முறைகள் வரை அனைத்தையும் இலங்கையர்கள் அணுகும் விதத்தில் TikTok ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி வருவதுடன், அவர்களின் சமையலறை அனுபவங்களையும் மறுசீரமைத்து வருகின்றது.

ஏன் தற்போது சமையல் குறிப்புகள் TikTok-இல் தேடப்படுகின்றன?
இன்றைய இளைய தலைமுறையினர் ஏதேனும் புதிய உணவைச் சமைக்க விரும்பினால், இணையத் தேடுபொறிகளை விட நேரடியாக TikTok தளத்தையே நாடுகின்றனர். TikTok தளத்தின் தேடல் வசதி என்பது சமையலை காட்சி ரீதியாகவும், உடனடியானதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்றியுள்ளது. மக்கள் இப்போது மிகச்சரியான சமையல் குறிப்புகளைத் தேடுவதில்லை; மாறாக, ஒரு உணவு எப்படித் தோற்றமளிக்கிறது, அதைச் செய்ய எவ்வளவு நேரமாகும், அது அவர்களின் வாழ்க்கைக்குப் பொருந்துமா என்பதையே தேடுகிறார்கள்.

நீண்ட கட்டுரைகளைப் படிப்பதையோ அல்லது விளம்பரங்கள் நிறைந்த இணையதளங்களில் நேரத்தைச் செலவிடுவதையோ விட, TikTok இல் ‘கெவும் செய்முறை’ அல்லது ‘குறைந்த நேர அரிசி மற்றும் கறி’ எனத் தேடுவது மிக எளிதாக இருப்பதாகப் பயனர்கள் கருதுகின்றனர். TikTok உடனடியாகப் பதில்களைத் தருவதுடன், மாவின் பதம், எண்ணெயின் நிறம், அடுப்பின் சுவாலை மற்றும் உணவு தயாரான சரியான தருணம் ஆகியவற்றை நேரடியாகக் காட்டுகிறது. குறிப்பாக, வேலை முடிந்து வீடு திரும்பும் ஒருவருக்கு, நீண்ட விளக்கங்களை விட இந்த தெளிவான காட்சி விளக்கமே பெரிதும் உதவுகிறது. மேலும், பாரம்பரிய முறைகள் முதல் நவீன காலத்திற்கு ஏற்ற சுருக்கமான வழிமுறைகள் மற்றும் ஆரோக்கியமான மாற்றுகள் என ஒரே உணவிற்குப் பலவிதமான செய்முறைகள் TikTok இல் கிடைக்கின்றன.

இத்தகைய பன்முகத்தன்மை சமையலை ஒரு சவாலாகப் பார்க்காமல், எவரும் செய்யக்கூடிய ஒரு எளிய கலையாக மாற்றியுள்ளதால், இலங்கையர்களின் சமையலறைகளில் TikTok இன்று தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறியுள்ளது.
சிறு வீடியோக்கள் மூலம் பண்டிகை சமையலை எளிதாக்குதல்.

இலங்கையின் பண்டிகைக்கால சமையல் என்பது பல்வேறு கலாசாரங்களையும் சமையலறைகளையும் ஒன்றிணைக்கும் ஒரு உன்னதமான கலையாகும். சிங்கள – தமிழ் புத்தாண்டுப் பலகாரங்கள், ரமழான் கால பிரியாணி, தைப்பொங்கல் உணவுகள் மற்றும் நத்தார் கேக் என ஒவ்வொன்றும் தனித்துவமான பக்குவத்தையும் சமைக்கும் நேரத்தையும் கொண்டவை. முன்னைய காலங்களில் ஒருவரின் நேரடி வழிகாட்டலில் கற்றுக்கொண்ட இந்தப் பாரம்பரிய முறைகளை, இன்றைய இளைய தலைமுறையினர் TikTok போன்ற டிஜிட்டல் தளங்களில் தேடி நிகழ்நேரத்தில் (real-time) கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஒரு நீண்ட நேரக் காணொளியைப் பார்த்து சலிப்படைவதை விட, தேவையான பொருட்கள், உணவின் பக்குவம், சமைக்கும் நேரம் மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகள் என ஒரு செய்முறையின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனி குறுங்காலக் காணொளிகளாக TikTok வழங்குகின்றது. மேலும், அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் முதல் தொழில்முறை சமையல் கலைஞர்கள் வரை பலதரப்பட்டவர்களின் செய்முறை விளக்கங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால், பாரம்பரிய உணவுகளை எவ்வித அச்சமுமின்றி சமைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.

உணவுக் கட்டுப்பாடு சார்ந்த தேடல்கள் இலங்கைச் சமையலறைகளை எவ்வாறு மாற்றியமைக்கின்றன.
இலங்கையின் இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் தொழில் வல்லுநர்கள் மத்தியில் கீட்டோ (Keto), குறைந்த மாப்பொருள் (Low-carb), சைவ உணவுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இவர்கள் பாரம்பரிய இலங்கை உணவுகளை முற்றாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக, TikTok மூலம் அவற்றை எவ்வாறு தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கலாம் எனத் தேடுகிறார்கள். குறிப்பாக, அரிசிக்கு மாற்றான தானியங்கள் மற்றும் புரதம் செறிந்த கறி வகைகள் போன்ற செய்முறைகளை நேரடி காட்சி விளக்கங்களுடன் TikTok வழங்குவதால், சமையலறையின் தனித்துவத்தை இழக்காமல் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை நோக்கி இலங்கையர்கள் மிக இலகுவாக மாறி வருகின்றனர். இத்தகைய தேடல் வசதிகள், உணவு குறித்த புதிய மாற்றங்களை சவாலாகக் கருதாமல், அவற்றை நடைமுறைக்குச் சாத்தியமான ஒன்றாக மாற்றியுள்ளன.

அன்றாட உள்ளடக்க படைப்பாளர்கள் நவீன இலங்கை சமையலறைகளுக்கு வழிகாட்டிகள்
இலங்கையின் நவீன சமையலறைகளில் TikTok படைப்பாளர்கள் இன்று முக்கிய வழிகாட்டிகளாக உருவெடுத்துள்ளனர். குறிப்பாக, TikTok தளத்தில் சமையல் நிபுணர்களை விட, சாதாரண மக்கள் சமைக்கும் வீடியோக்களே அதிக வரவேற்பைப் பெறுகின்றன. இவர்கள் தங்களை ஒரு சமையல் நிபுணர்களாகக் காட்டிக்கொள்ளாமல், சமையலில் ஏற்படும் தவறுகள், சவால்கள் மற்றும் அவற்றைச் சரிசெய்யும் நடைமுறை அனுபவங்களை நேர்மையாகவும் யதார்த்தமாகவும் பகிர்ந்து கொள்வதால் மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். குறிப்பாக, ஒரு கறியில் உப்பு அதிகமானால் என்ன செய்வது அல்லது சமையல் பிழைத்தால் அதனை எவ்வாறு சரிசெய்வது போன்ற அன்றாடச் சிக்கல்களுக்கு எளிய தீர்வுகளை இவர்கள் வழங்குகின்றனர். இத்தகைய நேரடி மற்றும் நேர்மையான அணுகுமுறையானது சமையலை ஒரு கடினமான கலையாகப் பார்க்காமல், எவரும் முயற்சி செய்யக்கூடிய ஒன்றாக மாற்றியுள்ளதால், இலங்கையர்கள் இன்று இந்த சாதாரண படைப்பாளர்களின் ஆலோசனைகளையே அதிகம் பின்பற்றுகின்றனர்.

இந்த மாற்றம் எங்கள் சமையல் முறைக்கும், அடுத்த தலைமுறைக்;கும் ஏன் முக்கியம்
TikTok ஊடாக நிகழும் இந்த மாற்றமானது பாரம்பரியத்தை மாற்றியமைக்காமல், சமையல் தொடர்பான அறிவை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கொண்டு செல்லும் விதத்தில் ஒரு புதிய சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. சமையல் குறிப்புகள் இனி ஒரு குறிப்பிட்ட வீட்டிற்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட முறையிலோ மட்டும் முடங்கிவிடாமல், அனைவராலும் பகிரப்படக்கூடிய மற்றும் மாற்றியமைக்கப்படக்கூடிய ஒரு பொதுவான அறிவாக மாறியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் சமையல் கலையானது பிராந்திய, மத மற்றும் ஆரோக்கிய ரீதியான பன்முகத்தன்மையுடன் வெளிப்படுவதுடன், புதிய சமையல் கலைஞர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ற முறையை ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்வு செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இவ்வாறாக, முறையான போதனைகளுக்குப் பதிலாக தேடல் மற்றும் ஆர்வம் மூலம் சமையலைக் கற்றுக்கொள்ளும் ஒரு புதிய கலாசாரத்தை TikTok உருவாக்கியுள்ளது.

ගෝලීය සහයෝගීතාවය සමඟින් Fortune GP...
BMPC Awards 2026 நிகழ்வில் இரண்டு...
காப்புறுதித் துறை மேம்பாட்டு செயல் திட்டத்தை...
City of Dreams இல் கலாச்சார...
TikTok தளத்தின் ’Cook & Create’...
E. B. Creasy & Co.,...
E. B. Creasy & Co.,...
99x Shares Key Insights at...
E. B. Creasy & Co.,...
E. B. Creasy & Co.,...
99x Shares Key Insights at...
ஒருங்கிணைந்த ஹோட்டல் சேவைகளுக்கு வலுசேர்க்கும் Samsung...