உலகளாவிய ஆடை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் MAS Holdings, Women Go Beyond (WGB) செயல்முறைத் திட்டத்தின் 20ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட WGB, MAS இல் பணிப்புரிவோர் மற்றும் அதன் சமூகத்தில் உள்ள பெண்களை மேம்படுத்துவதற்கும்,சவால்களை எதிர்கொள்வதற்கும், வலிமையான பெண்னை உருவாக்க உதவியாக உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில், இது உலகளவில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலின அடிப்படையிலான வன்முறை (GBV), பாலியல் மற்றும் இனப்பெருக்க உடல்நலம் மற்றும் உரிமைகள் (SRHR), பொருளாதார மேம்பாடு போன்ற முக்கிய பிரச்சினைகளை கையாள்வதன் மூலம், பெண்கள் சமமான தளத்தில் போட்டியிடுவதைத் தடுக்கும் மனநிலை மற்றும் கட்டமைப்புகளை மாற்ற WGB பாடுபட்டுள்ளது. WGB திட்டத்தின் நீடித்த பொருத்தப்பாட்டையும், MAS நிறுவனத்தின் பாலின சமத்துவத்திற்கான அர்ப்பணிப்பையும் இந்த ஆண்டு நிறைவு விழா வெளிப்படுத்துகிறது.
Women Go Beyond திட்டத்தின் தலைவர் தனூஜா ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், “MAS நிறுவனம், பெண்கள் தமது வணிக செயற்பாடுகள் மற்றும் சமூகங்களை வழிநடத்துவதில் இருந்து தடுக்கும் சவால்கள் மற்றும் எதிர்மறையான கருத்துக்களை கையாள வேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்த்திவருகின்றது. Women Go Beyond ஒரு திடமான கட்டமைப்பு மற்றும் பாலின சமத்துவத்தை நோக்கி வேலை செய்வதற்கான ஒரு பார்வையுடன் உருவாக்கப்பட்டது மற்றும் மிகவும் சமமான உலகில் பெண்கள் மற்றும் ஆண்களின் தேவைகளை அங்கீகரிப்பதற்காக தொடர்ந்து தன்னை மறுவரையறை செய்து வருகிறது..” என தெரிவித்தார்.
Women Go Beyond திட்டம் ஒரு அமைப்பிலிருந்து ஒரு வாழ்க்கை முறையாக மாறியுள்ளது, இது ஒரு பெண்ணின் பயணத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் பின்னிப் பிணைந்துள்ளது. நிறுவனத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள முயற்சிகளுடன் MAS நிறுவனத்தின் இலக்குகள் மிக முக்கியமானவை: பெண்களின் ஆரோக்கியம் மற்றும் SRHR, திறன் மேம்பாடு, பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடுதல் மற்றும் தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிப்பது, கல்வி மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், தொழிற்சாலை தளங்களில் 100% பெண்கள் மேம்படுத்தப்படுகிறார்கள். MAS Holdings நிறுவனத்தின் நிர்வாக நிலையில் 30% பெண்கள் இருக்கவேண்டும் என்னும் இலக்கை 2025இல் அடைய விரும்புகிறது, அங்கு பெண்கள் சமமான அடிப்படையில் போட்டியிடுவதற்கும், சுதந்திரமாக தேர்வுகளை செய்வதற்கும், முடிவெடுப்பதில் தீவிரமாக பங்கேற்பதற்கும் ஒரு உலகத்தை அவர்கள் ஆதரிக்கின்றனர்.
WGB என்பது அடையாளம் காணப்பட்ட மூலோபாயப் பகுதிகளில் பெண்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பன்முக பரிமாண முயற்சியாகும். மொழி, தகவல் தொழில்நுட்பம், மென் திறன்கள், நிதி நிர்வகிப்பு மற்றும் தலைமைத்துவ வளர்ச்சி பயிற்சி மூலம் தொழில் முன்னேற்றத்தை இது ஆதரிக்கிறது. பெண்களின் ஆரோக்கிய கல்வி மற்றும் அதில் உள்ள இடைவெளிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, WGB தாய்மை ஆரோக்கிய மனைகள் மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க உடல்நலம் மற்றும் உரிமைகள், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வு பற்றிய பட்டறைகளை மேற்கொள்கிறது.
MAS நிறுவனம் உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் இயங்கி வருவதால், பாலின அடிப்படையிலான வன்முறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது என்பது வருந்தத்தக்க உண்மை. சட்ட கட்டமைப்புகள் மற்றும் உரிமைகள் குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வு மற்றும் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு ஆதரவு வழங்குதல் ஆகியவை இந்த திட்டத்தின் கட்டமைப்பின் முக்கிய கருவிகளாகும். தொழிலுக்கப்பாட்பட்ட திறன்களை வளர்ப்பது, தொழில்முனைவு திறன்கள் மற்றும் புதிய வர்த்தகங்கள் மற்றும் கைவினைப்பொருட்களைக் கற்றுக்கொள்வது போன்றவை, MAS வசதிகளுக்குள் நூற்றுக்கணக்கான பெண் தொழிலதிபர்கள் உருவாக வழிவகுத்துள்ளது. சக்திக்கு முன்மாதிரியாக இருந்து, முற்போக்கான மாற்றத்திற்கான ஆதரவாளர்களாக இருக்கும் பெண்களை WGB ஆண்டுதோறும் கௌரவித்து வருகிறது.
WGB ஐ தனித்துவமாக்குவது அதன் தடையற்ற முறையில் MAS நிறுவனத்தின் கலாச்சாரத்தில் இணைக்கப்பட்டுள்ளமை ஆகும். இது உள்ளடக்கம் மற்றும் மரியாதையான சூழலை உருகாக்குகிறது. நிர்வாகம் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இது மனப்பான்மையில் பெரிய மாற்றத்தை ஏற்றப்படுத்துகிறது. உணர்வற்ற சார்பு பயிற்சி, பெண்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் நிதி திட்டங்கள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் பாலூட்டும் அறைகள், தொழிலாளர் ஒத்துழைப்பு குழந்தை பராமரிப்பு உதவி மற்றும் மகப்பேறு, தந்தை மற்றும் தத்தெடுப்பு விடுப்பு உள்ளிட்ட பல குடும்ப நட்பு கொள்கைகளை வழங்குதல் மற்றும் நெகிழ்வான வேலை ஏற்பாடுகள் போன்ற உள்கட்டமைப்பு ஆதரவு ஆகியவை இணைந்த வேலைச் சூழலை உருவாக்குகின்றன.
“இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எங்கள் பயணத்தைப் பற்றி சிந்தித்து, சமத்துவத்திற்காக எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நாங்கள் மதிப்பாய்வு செய்யும் அதே வேளையில், ‘Women Go Beyond’ எங்கள் சமூகங்களில் பாலின அடிப்படையில் ஒடுக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் சமத்துவத்தை அடைய எல்லைகளை தொடர்ந்து விஸ்தரிக்கும் எதிர்காலத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் புதுப்பிக்கிறோம்” என ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.
MAS Holdings நிறுவனத்தின் Women Go Beyond திட்டம் உண்மையில் பெண்களின் மேம்பாடு மற்றும் பாலின சமத்துவத்திற்கு முன்னோடியாக இருந்துள்ளது. அதன் மூன்றாவது தசாப்தத்தில் நுழையும் போது, இந்த திட்டம் தொடர்ந்து உலகளாவிய மாற்றத்தின் உருவாக்குநர்களையும் ஆதரவாளர்களையும் ஊக்கப்படுத்தி வரும். 20 ஆண்டுகால முன்னேற்றத்திற்கும், இன்னும் வரவிருக்கும் பல நடவடிக்கைகளுக்கும் எமது வாழ்த்துகள்.