புத்தகங்களையும், வீடியோக்களையும் இணைக்கும் TikTok இன் BookTok புரட்சி

Share

Share

Share

Share

வாசிப்பின் மீதான காதல், காலத்தின் எல்லைகளையும் தாண்டி, தொழில்நுட்பத்தின் மாற்றங்களையும் கடந்து, எப்போதும் நிலைத்து நிற்கிறது. அன்பான புத்தகக் குழுக்கள் முதல் மின்னணு வாசகர்களின் (e-reader) டிஜிட்டல் உலகம் வரை, வாசிப்பின் வடிவங்கள் மாறினாலும், ஒரு சிறந்த கதையின் மாயாஜாலம், இன்னும் ஒரு பக்கம் படிக்க வேண்டும் என்ற ஈர்ப்பு என்றும் மாறுவதில்லை.

உலகெங்கிலும் உள்ள வாசகர்கள், புத்தகங்களின் மீதான பிரியத்தால் ஒன்றிணைந்து, ஒன்றாக கொண்டாடி மகிழ, பகிர்ந்து கொள்ள, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக்கொள்ளும் ஒரு சமூகத்தை கற்பனை செய்து பாருங்கள். இதுதான் BookTok இன் அடிப்படை சாரம்சம். அனைத்து வயதினர், பின்னணிகள், கலாச்சாரங்களைச் சேர்ந்த வாசகர்கள் இலக்கியத்தின் மீது கொண்ட காதலால் இணையும் ஒரு களம். இது வெறும் ஒரு புது Trend மட்மல்ல. வாசகர்களுக்கு வலு சேர்க்கும், புதிய குரல்களை உயர்த்தும், ஒரு நல்ல புத்தகத்தில் மனம் லயித்து, அதன் நிழலில் திளைப்பதன் அழகை நினைவுபடுத்தும் ஒரு உலகளாவிய இயக்கம்.

BookTok என்றால் என்ன?
BookTok என்பது வுமைவுழம இல் உள்ள வாசகர்களின் ஒரு சமூகமாகும், இது தங்கள் இதயங்களைக் கவர்ந்த புத்தகங்கள் குறித்த விமர்சனங்கள், பரிந்துரைகள் மற்றும் உயிரோட்டமான விவாதங்களைப் பகிர்ந்து கொள்ள #BookTok என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துகிறது. இது ஒரு இடம், அங்கு படைப்பாளர்கள் காதல் முதல் இளைஞர் கற்பனை வரை, நினைவுகள் மற்றும் அதற்கு அப்பால் எல்லாவற்றையும் ஆராய்ந்து, குறுகிய, கவர்ச்சிகரமான வீடியோக்கள் மூலம் புத்தகங்களை உயிர்ப்பிக்கின்றனர். சில ஆர்வமுள்ள புத்தக பிரியர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களைப் பகிர்ந்து கொண்டதாகத் தொடங்கியது, #BookTok என்ற ஹேஷ்டேக்கின் கீழ் 48 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஒரு சக்திவாய்ந்த இலக்கிய சக்தியாக மலர்ந்துள்ளது. BookTok தற்போது, நாம் இலக்கியத்தை எவ்வாறு கண்டுபிடிக்கிறோம், விவாதிக்கிறோம் மற்றும் அனுபவிக்கிறோம் என்பதை மறுவடிவமைக்கும் ஒரு செழிப்பான சமூகமாக மாறியுள்ளது.

பலருக்கு, BookTok வாசிப்பின் மீதான ஆர்வத்தை மீண்டும் தூண்டியுள்ளது. ஒரு இலங்கை வாசகர் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்ட போது, ‘நான் முன்பு ஒரு ஆர்வமுள்ள வாசகராக இருந்தேன், ஆனால் வாழ்க்கை எனக்குத் தடையாக இருந்தது. படிப்பு மற்றும் வேலையுடன், சமூக ஊடகங்களில் உலாவுவதைத் தவிர வேறு எதையும் செய்ய எனக்கு நேரமில்லை. பின்னர் நான் தற்செயலாக BookTok ஐ கண்டேன். அது ஒரு முற்றிலும் புதிய உலகத்தில் அடி எடுத்து வைப்பது போல இருந்தது. புத்தகக் கடைகளில் உலாவ நேரமில்லாத அல்லது புதிய வெளியீடுகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியாத ஒருவருக்கு, BookTok ஒரு தனிப்பட்ட புத்தக விநியோக சேவையைப் போல் இருந்தது. இது எனக்குப் பிடித்த வகைகளை என் திரைக்கே கொண்டு வருகிறது, மேலும் நான் தொடர்ந்து அற்புதமான பரிந்துரைகளைக் கண்டறிந்து, சக புத்தகப் பிரியர்களுடன் தொடர்பு கொள்கிறேன். BookTok ஐ கண்டுபிடித்ததிலிருந்து, நான் எப்போதும் சாத்தியம் என்று நினைத்ததை விட அதிகமான புத்தகங்களை வாசித்துள்ளேன். இது ஒரு புத்தகப்புழுவின் கனவு நனவாகியது போன்றது. சரியான புத்தகங்கள் எப்போதும் ஒரு ஸ்க்ரோல் (scroll) தொலைவில் இருப்பது போன்றது.’ என குறிப்பிட்டார்.

BookTok மற்றும் சமூகத்தின் பலம்
ஆனால் BookTok புதிய புத்தகங்களைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல. இது தொடர்புகளை உருவாக்குவது பற்றியதாகும். இது வாசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் படைப்பாளர்கள் இலக்கியத்தின் மீதான பகிரப்பட்ட அன்பில் பிணைக்கும் ஒரு இடம். இந்தத் தளம் ஒரு முழு தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கங்களை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை நேரடியாகக் கண்ட, இலங்கையின் பிரபலமான BookTok படைப்பாளியான Chanu Chapters ஐ எடுத்துக்கொள்ளுங்கள்.
‘இளம் தலைமுறையினருக்கு புதிய தலைப்புகள் மற்றும் வகைகளை அறிமுகப்படுத்துவதில் TikTok பெரும் பங்கு வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன்’ சானு பகிர்கிறார். ‘எனது விமர்சனங்கள் மற்றும் புத்தக வீடியோக்கள் மூலம் மக்களை வாசிக்கத் தொடங்க ஊக்குவித்ததற்காக எனக்கு நன்றி தெரிவித்து பல தனிப்பட்ட குறுஞ்செய்திகளை நான் பெற்றுள்ளேன். பரபரப்பான வாழ்க்கையின் காரணமாக வாசிப்பிலிருந்து விலகிச் சென்ற மக்கள் தற்போது புத்தகங்களுடன் மீண்டும் இணைவதைப் பார்ப்பது அற்புதமாக உள்ளது.’

‘TikTok இல் ஒரு சமூகத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம்’ என்கிறார் சானு. ‘நீங்கள் மற்ற படைப்பாளர்களுடன் ஈடுபடும்போது மற்றும் ஒரு எழுத்தாளராக உங்கள் பயணத்தைப் பகிரும்போது, நீங்கள் வாசகர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்கலாம். புத்தகங்கள் வெறுமனே வாசிப்பதற்கு மட்டுமல்ல. அவை கொண்டாடப்பட வேண்டியவை, விவாதிக்கப்பட வேண்டியவை, பகிரப்பட வேண்டியவை என்ற ஒரு இடத்தை உருவாக்குவது பற்றியது இது.’ என அவர் தெரிவித்தார்.

புத்தக ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் மீது BookTok ஏற்படுத்தும் தாக்கம்
ஆச்சரியப்படும் விதமாக, வாசகர்கள் மட்டுமல்ல BookTok இலிருந்து பயனடைபவர்கள் ஆசிரியர்களும் தங்கள் வாசகர்களுடன் தொடர்புகொள்ள புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளனர். தங்கள் புத்தகங்களில் சிறு பகுதிகளைப் பகிர்வதன் மூலம், தாங்கள் எழுதும் செயல்முறையின் பின்னணியை பகிர்ந்து கொள்வதன் மூலம், அல்லது போக்குகளில் (Trends) பங்கேற்பதன் மூலம், ஆசிரியர்கள் தங்கள் வாசகர்களுடன் ஒரு தனிப்பட்ட உறவை உருவாக்குகின்றனர், புத்தகங்களை விற்பதை தாண்டி ஒரு சமூக உணர்வை வளர்க்கின்றனர். TikTok இலக்கியத்தை ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மாற்று வழியில் கேட்கப்படாத குரல்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. பெரிய பதிப்பகங்களின் ஆதரவில்லாத சுயாதீன ஆசிரியர்களுக்கு இது ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது. பரந்த வாசகர் வட்டத்தை அடைய இது உதவுகிறது. ‘BookTok இல் பிரபலமான பல புத்தகங்களை நானும் வாசிக்கிறேன், அவற்றை மிகவும் ரசிக்கிறேன்’ என்கிறார் சானு. ‘ஆனால், புதிய மற்றும் அறிமுகமாகாத ஆசிரியர்களை கண்டறிவது எனக்கு மிகவும் பிடித்தமானது. புதிய குரல்களுக்கு வாய்ப்பளிப்பதிலும், புத்தக உலகின் வாயில்களை அகலமாக திறப்பதிலும் வுமைவுழம முக்கிய பங்காற்றி வருகிறது.’

BookTok இலக்கிய உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு சக்தியான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. வாசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் என அனைவரின் உறவையும், புத்தக உலகையும் புதிய பரிமாணத்திற்கு இது கொண்டு சென்றுள்ளது.

BookTok Trends ஐ புத்தகக் கடைகள் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றன
BookTok இல் புத்தகக் கடைகளும் கூட தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர், இது டிஜிட்டல் யுகம் அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் அல்ல என்பதை நிரூபிக்கிறது – இது அவர்களின் மறுமலர்ச்சியாகும். பல ஆண்டுகளாக, மின்னணு புத்தகங்களும், இணையத்தளங்களும் அவர்களை தேவையற்றவர்களாக ஆக்கிவிடும் என அவர்கள் எச்சரிக்கப்பட்டனர். ஆனால் ஒரு அழகான திருப்பத்தில், அவர்களை அச்சுறுத்திய அதே டிஜிட்டல் உலகம் தற்போது எப்போதையும் விட அதிகமான வாசகர்களை அவர்களின் கதவுகளுக்குள் கொண்டு வருகிறது.

உலகம் முழுவதும் BookTok காரணமாக புத்தகங்களின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. MD குணசேன போன்ற பிரபலமான புத்தகக் கடைகள் இந்த போக்கிற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றனர், அதே சமயம் சுயாதீன விற்பனையாளர்களும் வீட்டை அடிப்படையாகக் கொண்ட புத்தகக் கடைகளும் TikTok ஐப் பயன்படுத்தி புதிய பார்வையாளர்களை அடைகின்றனர். படைப்பாற்றல் மிக்க உள்ளடக்கம், வைரல் போக்குகள் மற்றும் உணர்ச்சிபூர்வமான கதை சொல்லல் மூலம், புத்தகம் வாங்குவதை ஒரு அனுபவமாக மாற்றுகிறார்கள். நினைவுகளால் நிறைந்த, உற்சாகமான மற்றும் சமூக ஒன்றுகூடலான அனுபவமாக. அடுத்த முறை நீங்கள் ஒரு புதிய புத்தகத்தை தேடும்போது,
அலுமாரிகளுக்கு மட்டும் செல்லாதீர்கள். TikTok க்கு செல்லுங்கள். உங்கள் அடுத்த பிடித்த எழுத்தாளரை, உங்கள் புதிய பிடித்த வகையை, அல்லது ஒரு வாழ்நாள் முழுவதும் உங்களுடன் வாசிக்கும் ஒருவரைக் கூட நீங்கள் தற்செயலாக சந்திக்கலாம். BookTok சமூகம் உங்களை நீங்கள் தேடிக்கொண்டிருக்கவில்லை என்று தெரியாத புத்தகங்களுக்கு வழிகாட்ட அனுமதியுங்கள். மேலும் வாசிப்பின் மகிழ்ச்சியை மீண்டும் கண்டுபிடியுங்கள்.

Michelin Sri Lanka ජාත්‍යන්තර කාන්තා...
Sampath Bank Tees Up for...
Samsung Electronics Marks 19 Consecutive...
Sampath Bank Adjudged Best Commercial...
உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் தொடர்ந்து 19...
Sunshine Holdings embarks on a...
Sampath Bank Tees Up for...
John Keells CG Auto இலங்கைக்கு...
Sunshine Holdings embarks on a...
Sampath Bank Tees Up for...
John Keells CG Auto இலங்கைக்கு...
HNB වෙතින් මේ අවුරුදු සමයේ...