புத்தாக்கம் செய்யப்பட்ட SpaceMax™ Side-by-side குளிர்சாதனப் பெட்டிகளை Digital Inverter கள் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்துவதில் Samsung ஆனது பெருமிதம் கொள்கின்றது

Share

Share

Share

Share

Side-by-Side குளிர்சாதன பெட்டிகள் துறையினில் மேலோங்கி நிற்கும் Samsung நிறுவனமானது, தனது அதிநவீன SpaceMax™ Side-by-Side குளிர்சாதனப் பெட்டிகளை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கின்றது. இரண்டு மற்றும் மூன்று கதவுகள் கொண்ட வடிவங்களில் கிடைக்கப்பெறும் இப்புத்தாக்க வரிசையில், அதன் பாவனையாளர்கள் தமது உணவு வகைகளினை நிர்வகிப்பதிலும் மற்றும் பாதுகாப்பதிலும் தற்போது இருந்து வரும் முறைகளினை மாற்றி அமைப்பதனையே நோக்காகக் கொண்டு அதிநவீன அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையினில் மூன்று கதவு வடிவமைப்பின் ஒரே உற்பத்தியாளர் என்று கூறினால் அது Samsung மட்டுமேயாகும்.

SpaceMax™ வரிசை, குளிர்சாதன பெட்டிகளின் சுவர்கள் மிகவும் ஒடுக்கமானதாக அமைந்திருப்பதானது, அதன் மின்சார சேமிப்புச் செயல்திறனை அதிகரிக்கும் வகையிலான வெளிப்புற அளவுப் பிரமாணங்கள் மற்றும் அதிகரிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள் பழுதடையாமல் சேமித்து வைக்கக் கூடிய இட வசதி இவை அனைத்தும் எவ்வித சமரசமும் செய்யப்படாமல் அதிநவீன புதுமையான தொழில்நுட்பதின் ஊடகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

SpaceMax™ குளிர்சாதன பெட்டிகளில் இருக்கக்கூடிய மேம்பட்ட All-around குளிரூட்டும் அமைப்பானது மூலோபாய ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஏராளமான சிற்றிடைவெளியூடாக குளிர்ந்த காற்றானது தொடர்ந்தும் சீர் செய்யப்பட்டு சுழட்சிக்கு உட்படுகின்றது. இது குளிர்சாதன பெட்டியின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே மாதிரியான குளிரூட்டலை உறுதி செய்கின்றது, உகந்த வெப்பநிலையினைப் பராமரிக்கின்றது மற்றும் நீண்ட காலத்திற்கு உணவானது பழுதுபடாமல் இருக்கும்படி பாதுகாக்கின்றது.

SpaceMax™ வரிசையின் சிறப்பம்சமாக Samsung இன் digital Inverter Compressor ஆனது அமைந்துள்ளது. இது அதன் நீடித்துஉழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் என்பன வற்றுக்குப் பரவலாகப் பெயர் பெற்றதாகும். வளமையான Compressor களுடன் ஒப்பிடும்போது நீடித்து உழைக்கும் தன்மை கொண்ட மற்றும் மின்சார வீண் விரையத்தினைத் தவிர்க்க வல்லதும் ஆகும். இது குளிரூட்டும் தேவைகளின் அடிப்படையில் அதன் வேகத்தினை சீர்செய்கின்றது. இது தேய்மானத்தினைக் குறைக்கும் வகையினில் பங்களிப்பினை வழங்குகின்றது. 20 வருட உத்தரவாதத்துடன் சான்றளிக்கப்பட்ட இத் தொழில்நுட்பமானது நம்பகமான மற்றும் நீண்டகால செயல்திறனை உறுதி செய்கின்றது.

சந்தை தொழில்நுட்பத்தினைப் பொறுத்தவரையினில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பத்தின் ஊடாக குளிர்சாதனப் பெட்டிகளின் பாவனை தொடர்பாக பல புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளினை Samsung ஆனது தொடர்ந்தும் நுகர்வோரின் வாழ்வினை மேம்படுத்தும் வகையினில் வழங்குகின்றது. அவ்வகையினில் தொழில்துறையில் முன்னணி வகிக்கும் இவர்கள், SpaceMaxTM Side-by-Side குளிர்சாதன பெட்டிகளை அதன் பாவனையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இது அதன் பாவனையாளர்களின் உணவுகளைச் சேமிக்கும் முறைகளில் புரட்சியினை ஏற்படுத்தும் வகையினில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகைக் குளிர்சாதனப் பெட்டிகள் அதிக ஆற்றல் திறன் கொண்டவையும், நீடித்து உழைக்கும் செயல்திறனையும் உறுதி செய்கின்றது.

SpaceMax™ வரிசையில் மூன்று கதவுகள் கொண்ட அமைப்பானது இரு குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஒரு உறைவூட்டி (Freezer) ஆகியவற்றினை உள்ளடக்கியதாகும், குளிர்ந்த காற்றானது இழக்கப்படுவதனைக் குறைக்கும் அதேநேரத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சேமிப்பு இட வசதியினை வழங்குகின்றது, இதன் காரணமாக மின்சார வீண் விரையமானது தவிற்கப்படுகின்றது. குளிர்சாதன பெட்டியில் ஒரு பெரிய நீர் தொட்டி மற்றும் குழாய் இல்லாத பனிக்கட்டி மற்றும் நீர் விநியோகம் உள்ளது. நீர் வழங்கல் இணைப்பிற்கான அவசியத்தினை இது நீக்குகின்றது.

இதில் மேலதிக அம்சங்களாக Power Cool மற்றும் Power Freeze, பொருத்தப்பட்டுள்ளன, மேலும் உணவு வகைகளை எளிதாக வைக்கவும் எடுக்கவும் EZ Slide Shelf பொருத்தப்பட்டுள்து மேலும் தாராளமான இடப் பயன்பாடானது உறுதி செய்யபட்டுள்ளது. SpaceMax™ Side-by-Side குளிர்சாதனப் பெட்டிகள் அனைத்து channel களிலும் கிடைக்கின்றன, இது பாவனையாளர்களுக்கு அவர்களின் விருப்பத்தேர்வுகளுக்கு தக்கவாறு பல்வேறு தேர்வுகளினை வழங்குகின்றது. Side-by-Side குளிர்சாதன பெட்டியின் விலையானது ரூ. 679,999 இல் இருந்து ஆரம்பிக்கின்றது. Samsung நிறுவனத்தினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவர்களாக; Singer, Softlogic, Singhagiri மற்றும் Damro ஆகியவற்றில் நீங்கள் இதனைக் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

 

SampathCards & Hilton Colombo Collaborate...
நிம்னா & இசுரு: TikTok மூலம்...
Samsung Sri Lanka Hosts B2B...
Atlas PlayPalz, ශ්‍රී ලංකාවේ මුල්...
Sunshine Holdings celebrates employee excellence...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
Sri Lanka’s coconut industry faces...