பெண்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் மற்றும் கண்ணியமான பணியிடங்களை ஊக்குவிப்பதற்காக சன்ஷைன் ஹோல்டிங்ஸுடன் கைகோர்க்கும் IFC

Share

Share

Share

Share

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் உறுப்பினரான சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (IFC) இணைந்து, பெண்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் மற்றும் கண்ணியமான பணியிடங்களை உருவாக்குவதற்கு ஒத்துழைக்கும் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.

இந்த கூட்டு முயற்சி IFCஇன் “Facility for Investment Climate Advisory Services (FIAS)” திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் மூலம், சன்ஷைன் குழுமத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் தக்கவைப்பது குறித்து IFC ஒரு விரிவான மதிப்பாய்வை மேற்கொள்ளும். மேலும், சன்ஷைனின் தொழிலாளர் படையணியில் பெண்கள் இணைவதற்கும், தொடர்ந்து பணியாற்றுவதற்கும் உள்ள வாய்ப்புகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்ணியமான மற்றும் பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்குவதற்கு உதவும் வகையில் IFC சிறப்பு பயிற்சி ஒன்றை வழங்கும். இந்த பயிற்சியை அடுத்து, பணியிடத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை எவ்வாறு தவிர்க்கலாம், பணியாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் உரிய முறையில் அறிவிப்பதை எவ்வாறு மேம்படுத்துவது, முறைபாடுகள் வந்தவுடன் நிறுவனம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை வலுப்படுத்துதல் போன்ற பயிற்சிகளும் இங்கு வழங்கப்படும்.

இப்பயிற்சியுடன் இணைந்ததாக, கண்ணியமான பணியிடக் கொள்கைகள் நடைமுறையில் எவ்வளவு திறம்பட செயல்படுகின்றன என்பதை கண்காணித்து மதிப்பிடுவதற்கான அச்சிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் சன்ஷைன் நிறுவனத்திற்கு வழங்கப்படும். மேலும், இந்த கூட்டு முயற்சியின் நோக்கம், சன்ஷைனின் அனைத்து நிறுவனங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலினத்தவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் ஒரு கண்ணியமான பணியிடமாக நிறுவனத்தை மேம்படுத்துவதாகும்.

இலங்கை புதிய சந்தை வாய்ப்புகளை 15...
2025 ஆம் ஆண்டு மே மாத...
කොකා-කෝලා බෙවරේජස් ශ්‍රී ලංකා ආපසු...
TikTok හරහා රසවත් ආහාර සංස්කෘතියක...
BPPL Holdings PLC completes the...
Cinnamon Life සූප ශාස්ත්‍ර ක්ෂේත්‍රයේ...
சமையல் கலைத் துறையில் புது வரலாறு...
50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு...
Cinnamon Life සූප ශාස්ත්‍ර ක්ෂේත්‍රයේ...
சமையல் கலைத் துறையில் புது வரலாறு...
50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு...
සමාගම්වලින් අඩකඩ වැඩි ප්‍රමාණයක් ඩොලර්...