பெருந்தோட்ட உற்பத்தித்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை கையில் எடுக்கும் மல்வத்தை வேலி பிளான்டேஷன்ஸ்

Share

Share

Share

Share

இலங்கைத் தேயிலை உற்பத்தியில், குறிப்பாக மல்வத்தை வேலி பிளான்டேஷன்ஸ் போன்ற நிறுவனங்களில், நில அமைப்பின் தனித்துவமான காலநிலை அதன் சுவைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாகச் செயல்படுகின்றன.

இவர்களது தேயிலையானது தனித்துவமான இதமான, மென்மையான மற்றும் மிகுந்த நறுமணம் கொண்ட சுவைக் குணாம்சத்தைக் கொண்டுள்ளது; இதனை உலகளாவிய சுவை அறிஞர்கள் (con connoisseurs) மிகவும் தீவிரமாகத் தேடி வாங்குகின்றனர். இருந்தபோதிலும், இன்றைய ஏனைய அனைத்து விவசாய வணிகங்களைப் போலவே, இந்நிறுவனமும் அதிகரித்து வரும் செலவுகள், பயிர் நோய்கள், பருவநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றின் கூட்டு விளைவினால் ஏற்படும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.

ஊவா மற்றும் அவிசாவளைப் பகுதிகளில் பரந்து விரிந்துள்ள மல்வத்தை பெருந்தோட்ட நிறுவனம், பல தசாப்தங்களாக உயர்தர தேயிலை, ரப்பர், மசாலாப் பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளராகத் திகழ்கிறது. இந்நிறுவனம் நவீன உத்திகள் மூலம் சந்தையில் அதிக இலாபம் தரக்கூடிய தயாரிப்புகளை உற்பத்தி செய்து நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

மல்வத்தை வேலி பெருந்தோட்ட நிறுவனம் உலகெங்கிலும் உள்ள முக்கிய நாடுகளுக்குத் தனது தேயிலையை ஏற்றுமதி செய்து, இலங்கையின் முன்னணி ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகத் தடம் பதித்துள்ளது. எனினும், தற்போதைய சந்தையில் இதன் முக்கிய அடையாளமாக மாறுவது அதன் பாரம்பரிய உற்பத்தி மட்டுமல்ல; தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பருவநிலை சவால்களைச் சமாளிக்க அவர்கள் கையாண்டு வரும் அதிநவீன, தொழில்நுட்பம் சார்ந்த நவீன விவசாய முறைகளும்தான்.

அந்த மறுசிந்தனையானது, ஓரளவுக்கு பருவநிலை மாற்றத்தினால் தூண்டப்பட்டதாகும். அவிசாவளையைச் சுற்றியுள்ள நிறுவனத்தின் தாழ்நிலப் பகுதிகளில் (low-country areas) ஆண்டு மழையளவு 7,000 முதல் 10,000 மில்லிமீட்டர் வரை உயர்ந்துள்ளது. இது, பெஸ்டா [பெஸ்டலோட்டியோப்சிஸ் இலை உதிர்வு நோய் (PLFD)] பரவலோடு சேர்ந்து, இப்பிராந்தியத்தில் பாரம்பரிய ரப்பர் பயிர்ச்செய்கையை இலாபமற்றதாக (unviable) மாற்றியது.

ரப்பர் பயிர்ச்செய்கை சரிவை எதிர்கொள்ள, மல்வத்தை பெருந்தோட்ட நிறுவனம் 400 ஹெக்டேயரில் கறுவாப்பட்டை, 300 ஹெக்டேயரில் புதிய தேயிலை மற்றும் வெப்பமண்டல பழங்களை பயிரிட்டு வணிகத்தை பன்முகப்படுத்தியுள்ளது. மேலும், புதிய தேயிலை தொழிற்சாலையின் கட்டுமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பனை எண்ணெய் (oil palm) பயிர்ச்செய்கைக்கு மாறுவதற்கான முந்தைய முயற்சி, ஒரு ஒழுங்குமுறை தலைகீழ் மாற்றத்தால் தடைபட்டதை கருத்தில் கொள்ளும்போது, இந்த மாற்றம் எளிதான ஒன்றாக இருக்கவில்லை. அந்த ஒழுங்குமுறை மாற்றம் நிறுவனத்தின் நாற்றுப்பண்ணை இருப்புகளையும் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த சுமார் 100 மில்லியன் ரூபா மதிப்புள்ள பணிகளையும் கைவிடக் கட்டாயப்படுத்தியது. இருப்பினும், நிறுவனம் அந்தப் பின்னடைவை எதிர்கொண்டு, தன்னைத் தயார்படுத்திக்கொண்டு, அந்த நிலம் எதற்குச் சாதகமாக இருக்கும் என்ற தெளிவான புரிதலுடன் முன்னோக்கி நகர்ந்தது.

இயந்திரமயமாக்கல் மூலம் பெருந்தோட்டத் துறையை நவீனமயமாக்கும் மல்வத்தை வேலி நிறுவனம்
இலங்கையின் விவசாயத் துறையிலேயே மிகவும் அதிக மனித உழைப்பு தேவைப்படும் ஒரு பணி கறுவாப்பட்டை உரிப்பதாகும்; இங்கு திறமையான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மட்டுமே அத்தயாரிப்பின் இறுதி மதிப்பில் 50% வரை இருக்கும். இத்தகைய சூழலில், மல்வத்தை பெருந்தோட்ட நிறுவனம் தனது இயந்திரமயமாக்கப்பட்ட கறுவாப்பட்டை உரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதானது, அதன் புத்தாக்கப் பயணத்தின் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, மல்வத்தை பெருந்தோட்ட நிறுவனம் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் பணியாற்றும், மொரட்டுவ பல்கலைக்கழகப் பொறியாளர்களைக் கொண்டு புதிய இயந்திரவியல் தீர்வை உருவாக்கியது. இக்குழுவினர், சோலார் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, கறுவாப்பட்டை உரிக்கும் பணியை இயந்திரமயமாக்கியுள்ளனர். இத்தகைய உள்நாட்டுத் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், விவசாயத் துறையில் நிலவும் சவால்களுக்கு நவீன பொறியியல் தீர்வுகளை வழங்குகின்றன.

நீண்டகால விரிவான சோதனைகளுக்குப் பிறகு கிடைத்த இதன் முடிவுதான், கறுவாப்பட்டை உரிப்பதன் மிகச் சிக்கலான கட்டத்தைச் செய்யக்கூடிய, காப்புரிமை கோரப்பட்ட ஒரு புதிய இயந்திரமாகும். இது, எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத சாதாரண தொழிலாளர்கள் கூட, பல வருட அனுபவமிக்க தொழிலாளர்களுக்கு இணையான உற்பத்தித் திறனைப் பெற வழிவகுக்கிறது. இந்த கண்டுபிடிப்பானது உற்பத்தித்திறனை கணிசமாக மேம்படுத்துவதுடன், வேகமாக குறைந்து வரும் திறமையான தொழிலாளர்களின் மீதான நிறுவனத்தின் சார்புநிலையையும் குறைக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்ய முடியாத ஒரு நாட்டில், இத்தகையதொரு தீர்வை உள்நாட்டிலிருந்தே உருவாக்குவது என்பது பெருந்தோட்டத் தொழில்துறையின் பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி விளங்கும் ஒரு சிக்கல் தீர்க்கும் கலாசாரத்தை தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

மாற்று அளவுகோலில் பயிர்ச்செய்கை
இதேபோன்றதொரு புத்தாக்கச் சிந்தனை, மல்வத்தையின் பயிர்ச்செய்கை அணுகுமுறையிலும் பரவியுள்ளது. இலங்கையின் வழக்கமான தேயிலை பயிரிடல் அடர்த்தி என்பது ஒரு ஹெக்டேயருக்கு சுமார் 8,000 முதல் 13,500 வி.பி. செடிகள் வரை இருக்கும் நிலையில், மல்வத்தை பெருந்தோட்ட நிறுவனம் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில தாழ்நிலத் பெருந்தோட்டங்களில் ஒரு ஹெக்டேயருக்கு 40,000 வி.பி. செடிகள் என்ற வீதத்தில் பயிரிட்டு வருகிறது; சர்வதேசத்தின் மிகச்சிறந்த நடைமுறைகளை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளதன் மூலம், வழக்கமான முறைகள் அனுமதிப்பதை விட கணிசமாக மிகக் குறுகிய காலத்திலேயே தேயிலைச் செடிகள் அறுவடைக்குரிய முதிர்ச்சியை எட்டிவருவதை இந்நிறுவனம் ஏற்கனவே கண்டுள்ளது.

மல்வத்தை பெருந்தோட்ட நிறுவனம் இலங்கையில் வழக்கமான 200 மரங்களுக்குப் பதிலாக, ஒரு ஹெக்டேயருக்கு 800க்கும் மேற்பட்ட அடர்த்தியில் Avocado (வெண்ணெய்ப்பழம்) பயிரிட்டு, திராட்சைத் தோட்ட பாணி பந்தல் அமைப்புகளைச் சோதனை செய்து, வணிக ரீதியான புதிய செய்கை முறையில் முன்னணியில் திகழ்கிறது. இந்த அதி-அடர்த்தி செய்கை, மரங்களின் கிளைகளை நிர்வகிப்பதையும் அறுவடையையும் எளிதாக்குவதுடன், அதிக மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புத் திறனைக் கொண்ட ஒரு புதிய சந்தைப் பிரிவுக்கு வழிவகுத்தது.

இயந்திரமயமாக்கப்பட்ட தேயிலை பறிக்கும் முறையும் தற்போது உருவாக்கப்பட்டு வரும் மற்றொரு புதிய முயற்சியாகும். ட்ரோன் கேமராக்கள் அதன் விசிறிச் சுழற்சி காற்றின் குறுக்கீடு காரணமாக, அறுவடைக்குத் தயாராக உள்ள தேயிலை இலைகளைத் துல்லியமாக அடையாளம் காண்பதில் தொழில்நுட்பச் சவால்கள் நீடித்த போதிலும், நிறுவனம் தனது செயல்பாடுகளில் மனித உழைப்பின் மீதான சார்பு நிலையைக் குறைப்பதற்கான ஒரு பரந்த அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, இந்த இயந்திரவியல் தேயிலை பறிக்கும் தீர்வுகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

தோட்டப் பயிர் முதல் இறுதித் தயாரிப்பு வரை
மல்வத்தை பெருந்தோட்ட நிறுவனம் Conveyor அமைப்புகள், இலை உருட்டும் அறைகள் மற்றும் தரம் பிரிக்கும் செயல்முறைகளைத் தானியங்கி மயமாக்கியுள்ளது, தற்போதைய கவனம் தேயிலை வாடவைக்கும் கட்டத்தில் உள்ளது. மேலும், குறைந்த தொழிலாளர்களுடன் அதிக சீரான தன்மையை உறுதி செய்ய, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட குறைந்த எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளுக்குள் உற்பத்தியை ஒருங்கிணைத்துள்ளது.

செயல்திறனை மேம்படுத்துவதற்கான அந்த தீவிர முயற்சிக்கு இணையாக, புதிய சர்வதேச சந்தைகளுக்குள் நுழைவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம், இலங்கையின் முதலாவது ‘மட்சா’ தயாரிப்பு ஆலையை நிறுவி வருகிறது; இது இலங்கை தேயிலை சபையின் அங்கீகாரம் பெற்றதுடன், ஜப்பானிய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து உயர்தர Green Teaயும் தயாரிக்கப்படவுள்ளது; இது, இலங்கை இதுவரை மிகக் குறைந்த அளவிலேயே கால்பதித்திருந்த, உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சர்வதேச சந்தைப் பிரிவுகளில் மல்வத்தை பெருந்தோட்ட நிறுவனம் வலுவான தடம் பதிக்க வழிவகுக்கும்.

மல்வத்தை பெருந்தோட்ட நிறுவனம் தேயிலைத் தோட்டத் தொழிலைத் தாண்டி, இயற்கை சாறுகளைக் கொண்ட அழகுசாதனப் பொருட்களைத் தயாரித்து ஜெர்மனியில் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த வளர்ச்சி, நிறுவனம் பாரம்பரிய பெருந்தோட்ட வேர்களில் இருந்து சர்வதேச தரம் வாய்ந்த பன்முகப்படுத்தப்பட்ட வணிகமாக மாறியுள்ளதைக் காட்டுகிறது.

இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து வழிநடத்துவது நீண்ட காலத்திற்காக கட்டமைக்கப்பட்ட ஒரு செயல்பாட்டு அடித்தளமாகும். எங்களது தொழிற்சாலைகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) மூலம் இயங்குகின்றன, நிறுவனம் தனது சொந்த கிடங்கை (warehouse) இயக்குகிறது, மற்றும் அனைத்து செயல்பாடுகளிலும் தோட்ட மட்டத்திலான கண்காணிப்புத் திறன் பராமரிக்கப்படுகிறது; இது சர்வதேச வாடிக்கையாளர்கள் தற்போது முதன்மையான தரநிலையாக எதிர்பார்க்கும் விநியோகச் சங்கிலி வெளிப்படைத்தன்மைத் தரங்களை நிறைவு செய்கிறது.

மல்வத்தை பெருந்தோட்ட நிறுவனம் அதி-அடர்த்தி பயிர்ச்செய்கை மற்றும் ஆழமான மதிப்புக்கூட்டலை மையமாகக் கொண்ட 2030 திட்டவரைபுடன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கு ஒரு வெற்றிகரமான நடைமுறை மாதிரியை உருவாக்கி வருகிறது. இத்தகைய புத்தி கூர்மை மற்றும் முயற்சியுடன், இந்நிறுவனம் ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் முன்னோடியாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Still Chosen, Still Evolving: Coca-Cola...
මීළඟ ඩොලර් බිලියන 3 හඹා...
TikTok, කිසිඳු භේදයකින් තොරව සියලු...
Effie සහ SLIM DIGIS හි...
ITC Ratnadipa Celebrates World Tourism...
Sophos To Bring OpenAI GPT...
வகுப்பறைகளைத் தாண்டிய அறிவியல்: TikTok மூலம்...
JXG Spotlight earns dual recognition...
Sophos To Bring OpenAI GPT...
வகுப்பறைகளைத் தாண்டிய அறிவியல்: TikTok மூலம்...
JXG Spotlight earns dual recognition...
மின்சார வாகன சந்தையில் புதிய மைல்கல்:...