பெற்றோருக்கு அதிக கட்டுப்பாடும், வெளிப்படைத்தன்மையும் கொண்ட மேம்படுத்தப்பட்ட குடும்ப இணைப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தும் TikTok

Share

Share

Share

Share

இளவயது பாவனையாளர்களுக்கான ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை ஊக்குவிக்க, பெற்றோர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் நலன் சார்ந்த புதிய கருவிகளை TikTok அறிமுகப்படுத்தியுள்ளது. இவை குடும்ப இணைப்பு (Family Pairing) அம்சத்தின் ஒரு பகுதியாகவும், இணையப் பாதுகாப்பு மீதான வுமைவுழம-இன் முழுமையான பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கின்றன.

TikTok அறிமுகப்படுத்தியுள்ள புதிய மேம்பாடுகளில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. இதில் திரையில்லா நேர அட்டவணை (Time Away Scheduling), இளம்பருவத்தினரின் நெட்வொர்க் தெரிவுநிலை (Teen Network Visibility) மற்றும் முன்னெச்சரிக்கை அறிக்கை விழிப்பூட்டல்கள் (Proactive Reporting Alerts) போன்ற அம்சங்கள் அடங்கும். இதன்மூலம் 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு அம்சங்கள் பெற்றோருக்கு கிடைக்கின்றன. இது அவர்களின் இளவயது பிள்ளைகளின் TikTok அனுபவத்தை தனிப்பயனாக்க உதவுகிறது.

16 வயதுக்குட்பட்ட பாவனையார்களுக்காக TikTok புதிய Wind-Down அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இரவு 10 மணிக்குப் பிறகு TikTok இல் தொடர்ந்து செயலில் இருக்கும் இளம்பருவத்தினருக்கு, முழு-திரை நினைவூட்டல் மற்றும் அமைதியான இசையுடன் கூடிய எச்சரிக்கை தோன்றும். இது அவர்களை வெளியேற ஊக்குவிக்கும். ஆரம்பகால பரிசோதனைகள் இந்த அம்சம் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுகின்றன. மேலும், TikTok விரைவில் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த தியான பயிற்சிகளையும் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

இப்புதிய மேம்பாடுகள் தொடர்பில் TikTok இன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘TikTok இன் அனைத்து செயல்பாடுகளிலும் பாதுகாப்பு எமது மையமாக உள்ளது. இந்த புதிய மேம்பாடுகள் ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்க குடும்பங்களுக்குத் தேவையான கருவிகளை வழங்குவதற்கான எங்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். குடும்ப இணைப்பை மேம்படுத்துவதன் மூலமும், தொழில்துறை கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதன் மூலமும், புத்தாக்க நல்வாழ்வு அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், இளவயது பாவனையாளர்கள் பாதுகாப்பான மற்றும் நேர்மறையான இணைய சூழலில் ஆராய, உருவாக்க மற்றும் தொடர்பு கொள்ள முடியும் என்பதை உறுதிசெய்கிறோம்,’ என்று கூறினார்.

TikTok உலகளாவிய தலைவர்களுடன் இணைந்து வயது உறுதிப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்த செயல்படுகிறது பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 13 வயதுக்குட்பட்டவர்கள் தளத்தில் இருப்பதைத் தடுக்கவும், இளம்பருவத்தினர் சரியான வயதுக்கேற்ற அனுபவத்தில் இருப்பதை உறுதிசெய்யவும் TikTok தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. Telefónica உடன் இணைந்து மொபைல் சேவை வழங்குநர் அடிப்படையிலான வயது சரிபார்ப்பு முறைகளை ஆராய்கிறது. மேலும், தகவல் கொள்கை மையம் மற்றும் WeProtect Global Alliance உடன் இணைந்து, டிஜிட்டல் தளங்களில் வயது சரிபார்ப்புக்கான சிறந்த நடைமுறைகளை உருவாக்க பல பங்குதாரர் உரையாடலில் பங்கேற்கிறது.

தளத்தின் மேம்பாடுகளில் இளைஞர்களின் குரல்களை மையப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, TikTok 2025-க்கான தனது உலகளாவிய இளைஞர் பேரவையை (Global Youth Council) விரிவுபடுத்துகிறது. வெற்றிகரமான முதல் ஆண்டிற்குப் பிறகு, ஆரம்பத்தில் 2023-ல் ஆரம்பிக்;கப்பட்ட இந்தப் பேரவை, இளவயதினரின் கருத்துக்களை உயர்த்திக் காட்டவும், தளத்தில் அவர்களது அனுபவத்தை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இளைஞர் குழுவானது TikTok இன் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள இளவயது பாவனையாளர்களின் தேவைகள் மற்றும் அனுபவங்களுடன் தளம் தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதிசெய்கிறது.

இப் புதிய புதுப்பிப்புகளுடன், TikTok, இளையர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலன் மேம்பாட்டில் தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு கருவிகளை அறிமுகப்படுத்தி, இளையர்களுக்கு ஆரோக்கியமான இணைய பழக்கங்களை ஊக்குவித்து, பாதுகாப்பு நிபுணர்களுடன் கூட்டாண்மைகளை வலுப்படுத்துகிறது. இந்த முயற்சிகள், குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில், TikTok-இன் தொடர்ச்சியான பணியை பிரதிபலிக்கின்றன.

SampathCards & Hilton Colombo Collaborate...
நிம்னா & இசுரு: TikTok மூலம்...
Samsung Sri Lanka Hosts B2B...
Atlas PlayPalz, ශ්‍රී ලංකාවේ මුල්...
Sunshine Holdings celebrates employee excellence...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
Sri Lanka’s coconut industry faces...