பொழுதுபோக்குத் துறையில் சிறந்த நிலைபேறாண்மைக்கான விருதை வென்ற Cinnamon Life at City of Dreams

Share

Share

Share

Share

இலங்கையின் அடையாளச் சின்னமான ஒருங்கிணைந்த சுற்றுலா விடுதியான Cinnamon Life at City of Dreams> CIOB இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 இல் ‘நிலையான கட்டுமானம் – பொழுதுபோக்குத் துறை’ (“Sustainable Construction – Leisure Sector”) பிரிவில் விருதை வென்று சாதனை படைத்துள்ளது.இந்த முக்கிய விருது இந்த பிரபல திட்டத்தின் சாதனைப் பட்டியலில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Cinnamon Life நிறுவனத்தின் நிலைபேறாண்மை முயற்சிகளை அங்கீகரிக்கும் இந்த விருது, அவர்களின் முழுமையான சுற்றுச்சூழல் அணுகுமுறையை பறைசாற்றுகிறது. ஆற்றல் திறன்மிக்க வடிவமைப்பு, சுற்றுச்சூழல் மாசற்ற கட்டுமான முறைகள், திறமையான கழிவு மேலாண்மை, நீர்வள பாதுகாப்பு மற்றும் உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய பசுமை திட்டங்கள் ஆகியவற்றில் இந்த நிறுவனம் முன்னோடியாக திகழ்கிறது.உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பல் சேவைகளை வழங்கும் அதே வேளையில், இலங்கையின் நிலைபேறாண்மை நோக்கங்களுக்கு உதவும் வகையில் செயல்படும் இந்த முன்மாதிரி திட்டம், விருந்தோம்பல் மற்றும் கட்டுமான துறைகள் இரண்டிலும் புதிய தரநிலைகளை அமைத்துள்ளது.

2025 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு
அமைச்சின் முழு ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், இலங்கையின் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். கட்டுமானத் துறையில் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்த விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Cinnamon Life at City of Dreams நிறுவனம் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக கொள்கைகள் (ESG) மீது உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இது மின்சார பயன்பாட்டைக் குறைத்தல், ஆற்றல் சேமிப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் விரிவான மறுசுழற்சித் திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

Softlogic Life Grows 29% with...
TikTok Launches Time and Well-being...
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன்...
Sri Lanka Targets Inclusive Economic...
2025 SLIM ජාතික විකුණුම් සම්මාන...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
Global Talent Competes to Solve...