மத்திய கிழக்கு மாயாஜாலத்துடன் Golden Mirage–ஐ அறிமுகப்படுத்தும் City of Dreams Sri Lanka

Share

Share

Share

Share

2025 நவம்பர் 19 – ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய தினத்தை சிறப்பிக்கும் வகையில், அரேபிய இரவுகளின் மாயாஜாலம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் “Signature Golden Mirage” நிகழ்வை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் இந்த சிறப்புக் கொண்டாட்டம் உங்களுக்கு மத்திய கிழக்கின் மறக்க முடியாத தருணங்களைப் பரிசளிக்கும்.

அதன்படி, நவம்பர் 28 முதல் டிசம்பர் 2 வரையிலான காலத்தில் City of Dreams Sri Lanka-வின் 6ஆவது மாடி மத்திய கிழக்கு பாலைவனக் காட்சிகளாக மாற்றப்படவுள்ளதுடன், இது வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தையும் கொடுக்கவுள்ளது.

இங்கு வருகை தரும் அனைத்து விருந்தினர்களும் அரபு நாட்டின் பிரமாண்ட அரண்மனைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள், அலங்கார விளக்குகள், பழங்கால வர்த்தக நகரங்கள் ஆகியவற்றின் பிரமிப்பூட்டும் காட்சிகளை இலங்கையில் இருந்தபடியே பார்ப்பதற்கான வாய்ப்பை City of Dreams Sri Lanka மேற்கொண்டுள்ளது.

குறித்த நாட்களின் மாலை வேளைகளில் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் நவீன இசை நிகழ்ச்சிகளுடன் வருகை தரும் விருந்தினர்களை மகிழ்விக்க City of Dreams Sri Lanka தயாராக உள்ளது. அதனுடன் கண்கவர் நடனங்கள், தர்புக்கா இசையின் மந்திர தாளங்கள், மற்றும் சிறப்பு DJ இசை ஒரு சுவாரசியமான மாலைப் பொழுத்தை உங்களுக்கு வழங்கும். அது மட்டுமல்லாமல், இந்த அனுபவத்தை பூரணமாக்கும் வகையில், நூற்றாண்டுகளாக மத்திய கிழக்கின் விருந்தோம்பலின் அடையாளமாக திகழும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டு பரிமாறப்படும் இலவச அரபு காபியுடன் விருந்தினர்கள் வரவேற்கப்படுவார்கள்.

மத்திய கிழக்கு இரவின் கவர்ச்சியுடன் உயிரோட்டமான அனுபவத்தை பெறுவதற்கும், நண்பர்களுடன் 5 நாட்கள் முழுவதும் மறக்க முடியாத மாலையை கழிப்பதற்கும் சிறந்த வாய்ப்பை Signature Golden Mirage உங்களுக்கு வழங்கும்.

இந்தப் பண்டிகைக் காலத்தில், City of Dreams Sri Lanka-வின் 6ஆவது மாடிக்கு வாருங்கள், பாலைவனம் பிரகாசிக்கும், இசை உங்கள் உள்ளத்தை தொடும், ஒவ்வொரு நொடியும் ஆயிரத்தொரு இரவுகளின் கதையிலிருந்து எடுக்கப்பட்டது போன்ற அற்புத உணர்வை அளிக்கும் ஒரு உலகத்திற்குள் அடியெடுத்து வையுங்கள்.

இந்த சிறப்பான நிகழ்வுகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு 1094 77 283 1613 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

පාම් තෙල් විරෝධය, විශ්වාස සහ...
2026 ආධුනික වයස් කාණ්ඩ පිහිනුම්...
இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி களம் அமைக்கும்...
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் Rebuilding...
කොකා-කෝලා පදනම සහ සේවාලංකා පදනම...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி...