மாதவிடாய் வறுமையை எதிர்த்துப் போராட இணைகிறது MAS Femography மற்றும் Selyn Foundation

Share

Share

Share

Share

பெண்களுக்கான ஆடைத் தீர்வுகளில் (FemTech apparel) உலகளாவிய முன்னணியில் திகழும் MAS Femography, இலங்கையின் Selyn அறக்கட்டளையுடன் இணைந்து, மாதவிடாய் வறுமைக்கு எதிரான தங்களது தொடர்ச்சியான முயற்சிகளை 2026 ஆம் ஆண்டிற்கான #BleedGood முன்முயற்சியின் ஊடாக முன்னெடுத்துச் செல்கின்றன.

இந்த மைல்கல் கூட்டாண்மையானது, பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இலங்கைச் சமூகங்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் கூடிய மாதவிடாய் கண்ணியத்தை முன்னெடுத்துச் செல்வதற்குமான Selyn மற்றும் MAS Femography ஆகிய இரு நிறுவனங்களினதும் பகிரப்பட்ட இலட்சியத்தை இது பிரதிபலிக்கிறது.

இந்தக் கூட்டணி குறித்து, Selyn மற்றும் Selyn அறக்கட்டளையின் பணிப்பாளர் செலினா பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “பெருந்தொற்று காலத்தில் எமது சமூகங்களுக்குள்ளேயே காணப்பட்ட மாதவிடாய் வறுமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காகவே Selyn அறக்கட்டளையினால் இந்த முன்னெடுப்பு உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் தற்போது தேசிய அளவில் வளர்ச்சியடைந்து பரவி வருவதைக் காண்பது மிகுந்த ஊக்கமளிக்கிறது. இதன் சென்றடைவையும் தாக்கத்தையும் விரிவுபடுத்துவதில் MAS போன்ற நிறுவனங்களுடனான பங்களிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.” என தெரிவித்தார்.

ஒவ்வொரு #BleedGood கருத்தரங்கும் விரிவான நான்கு கட்ட மாதிரியைக் கொண்டன. இதில் பங்கேற்பாளர்களுக்கு மருத்துவத் தரம் வாய்ந்த, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘Femme-Care’ மாதவிடாய் துவாய் தயாரிப்புகள் வழங்கப்படுவதுடன், அவற்றை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டமானது, உரிமம் பெற்ற சுகாதார நிபுணர்களால் நடத்தப்படும் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த கல்வி அமர்வுகள், ஆண்கள் மற்றும் சிறுவர்களை இதில் ஈடுபடுத்துவதற்காகப் பயிற்சி பெற்ற ஆண் ஆதரவாளர்களால் வழிநடத்தப்படும் அமர்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட காலநிலை கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. அத்துடன், இலங்கையில் மாதவிடாய் சமத்துவத்தையும் நிலையான தீர்வுகளையும் வலுப்படுத்துவதற்கான கொள்கை உருவாக்கத்திற்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்காக, ஒரு வலுவான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பும் இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது.

Selyn அறக்கட்டளை மற்றும் MAS Femography ஆகியன தங்களது பகிரப்பட்ட நிபுணத்துவம் மற்றும் பெண்களின் பூர்த்தி செய்யப்படாத தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் சிந்தனைப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட தீர்வுகள் மூலம் மாதவிடாய் சுகாதாரத் துறையில் முன்னிலை வகிக்கின்றன. அத்துடன், சமூக அடிப்படையிலான திட்டமிடல், காலநிலை விழிப்புணர்வுடன் கூடிய மாதவிடாய் நீதி (Climate-conscious menstrual justice) மற்றும் கொள்கை ரீதியான ஆதரவு ஆகியவற்றில் செலின் அறக்கட்டளை ஆழமான அனுபவத்தைக் கொண்டுள்ளது.

மாதவிடாய் காலம், மகப்பேறு மற்றும் மாதவிடாய் நிற்றல் (Menopause) ஆகிய நிலைகளில் பெண்களுக்கு ஆதரவளிக்கும் அறிவியல் ரீதியான ஆடைத் தீர்வுகளை வடிவமைத்து உற்பத்தி செய்த எமது அனுபவம், ‘மாதவிடாய் சமத்துவத்தை’ அடைவது என்பது நமது காலத்தின் மிகவும் அவசரமான, அதேசமயம் தீர்க்கக்கூடிய சவால்களில் ஒன்று என்பதை எங்களுக்குக் கற்பித்துள்ளது. இது ஒரு கூட்டுப் பொறுப்பு என்பதை அங்கீகரிப்பதிலிருந்தே இதற்கான முன்னேற்றம் தொடங்குகிறது. இதற்குத் தொடர்ச்சியான சமூக ஈடுபாடும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும்.

“மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் சுகாதாரத் துவாய்கள் போன்ற காலநிலை-நட்பு ரீதியான தயாரிப்புகள் ஒரு தனித்துவமான பன்முக வாய்ப்பை வழங்குகின்றன; இவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதுடன், நீண்டகால செலவுகளைக் குறைக்கவும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் உளச்சமூக மேம்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன,” என MAS Femography-இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பிலார் டயஸ் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட #BleedGood முன்னெடுப்பானது, கோவிட்-19 ஊரடங்கு மற்றும் அதனைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் போது ஒரு நெருக்கடி காலத் தீர்வாக ஆரம்பிக்கப்பட்டது. இச்சவால்கள் நாடு முழுவதும் மாதவிடாய் வறுமையை மேலும் தீவிரப்படுத்தியிருந்தன. அன்று முதல், இந்த முயற்சியானது அரச நிறுவனங்கள், தனியார் துறை பங்காளிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அடிமட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் ஒரு பலதரப்பு பங்காளர்களைக் கொண்ட இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த அறக்கட்டளையானது தனது முன்னெடுப்பை சர்வதேச ரீதியாகவும் விரிவுபடுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற மனிதாபிமான உதவி தேவைப்படும் சூழல்களில் இதற்கான முன்னோடித் திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேவேளை, மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் தயாரிப்புகளுக்கான தேசிய மற்றும் உலகளாவிய தரநிலைகளை உருவாக்குவதற்கான பணிகளையும் இது தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Hope Is Just a Scroll...
Hope Is Just a Scroll...
Samsung Sri Lanka 2026 අලෙවි...
වාහන සඳහා මූල්‍ය පහසුකම් සැලසීමට...
ඔබ අප කෙරෙහි තැබූ විශ්වාසය...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய...