மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு நீங்கள் தயாரா?

Share

Share

Share

Share

சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் விளையாட்டு, இசை மற்றும் கேளிக்கைக்காக ஒன்றுசெரும் உன்னத தருணம்

ஆகஸ்ட் 30ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பிலுள்ள CR&FC மைதானத்தில் மீண்டும் கோலாகலமான நிகழ்ச்சியொன்று அரங்கேறுகிறது. அன்றைய தினம் பாடசாலைகளின் பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் இணைந்த ரக்பி அணிகள் களமிறங்கி, தலைசிறந்த இசைக்குழுக்கள் மற்றும் DJ கலைஞர்களின் இசைவெள்ளத்தில் குடும்பங்கள் சகிதம் குதூகலித்து மகிழக்கூடிய பிரத்தியேகமான தருணம் உருவாகிறது. அணிக்கு ஏழு பேர் கொண்ட C-Rugby Tag Rugby சுற்றுத்தொடரில் மொத்தமாக 16 அணிகள் விளையாடவுள்ளன. இந்த நிகழ்;ச்சியை இசிப்பத்தனை கல்லூரியின் பழைய மாணவரும், CR&FC கழகம் மற்றும் தேசிய அணி ரக்பி அணிகளுக்காக விளையாடியவரும், பிரபல ரக்பி ஆளமையுமான டில்ரோய் பெர்னாண்டோ தலைமையிலான AGOAL International என்ற அமைப்பு எட்டாவது தடவையாகவும் ஒழுங்குபடுத்துகிறது.

சகோதர சகோதரிகளின் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களையும், பழைய மாணவிகளையும் ஒன்றுசேர்க்கும் ஒரே சுற்றுத்தொடர் இதுவாகும். தலைசிறந்த இசையுடன், ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான கேளிக்கைகள் நிறைந்த விருந்துடன் சாகசங்களுடன் கூடிய ரக்பி விளையாட்டுடன் நட்பின் நேசங்களை மீளவும் புதுப்பித்து, இனிமையான ஞாபகங்களை மீட்டுத் தர வழிவகுக்கும் பிரத்தியேகமான சுற்றுத்தொடர் என்ற பெருமையும் இதற்குக் கிடைக்கிறது.

இந்நிகழ்ச்சியில் கடந்த காலத்தின் பொன்னான நாட்களை மீட்டிப் பார்த்து, பழைய நட்புக்களுடன் மீண்டும் தோள்கோர்த்து நிற்பதுடன் நில்லாமல், இலங்கையின் சிறந்த இசைக்குழுக்கள் மற்றும் DJ கலைஞர்களின் இசைவிருந்துடன் சங்கமிக்கலாம். இங்கு விற்பனை நிலையங்கள், நடைபாதைக் கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுகள் போன்றவை உள்ளடங்கிய கார்னிவெல் நிகழ்ச்சியும் பொழுதுகளை இனிமையாக்கும். Slipping Chairs, Dreaming of Saturn, Pop Culture and Section 8 and DJs Trev D, Rob R, DJ Ace ஆகிய இசைக்குழுக்களை சேர்ந்தவர்களும், DJ கலைஞர்களும் தொடர்ந்து இசை விருந்து படைப்பார்கள்.

இந்த சுற்றுத்தொடரில் லீக் மட்டத்திலான 24 போட்டிகள், இறுதிச் சுற்றுக்குரிய 15 போட்டிகள் அடங்கலாக 39 போட்டிகள் உள்ளடங்கியுள்ளன. இவை பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகி இரண்டு ஆடுகளங்களில் நள்ளிரவு வரை நீடிக்கும். இரவு 8.30 இற்கு Bowl Finals உம், அதனைத் தொடர்ந்து Plate Finals உம் and Cup Finals உம் நடைபெறும்.

ஒவ்வொரு அணியிலும் வயதெல்லைப் பிரிவுகளுக்கு அமைய 25 வயதிற்கு மேற்பட்ட இரண்டு போட்டியாளர்களும், 35 வயதைத் தாண்டிய மூன்று போட்டியாளர்களும், ஆடவர் குழுவின் சகோதரிகளது பாடசாலையைச் சேர்ந்த இரண்டு பெண் போட்டியாளர்களும் விளையாட வாய்ப்பளிக்கப்படும். பல்வேறு கால எல்லைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஒன்றுசேர்வதை இது உறுதி செய்யும்.

போட்டியில் விளையாடும் அணிகள் ரோயல்/விசாக்கா, இசிப்பத்தனை/சென்.போல்ஸ், சென்.ஜோசப்ஸ்/சென்.பிரிஜட்ஸ், கிங்ஸ்வூட்/பெண்கள் உயர்தரப் பாடசாலை கண்டி, வெஸ்லி/மெத்தடிஸ்ட், டீ.எஸ்.சேனநாயக்க/சிறிமாவோ பண்டாரநாயக்க, ஆனந்த/மியூசியஸ், திரித்துவம்/ஹில்வூட், சென்.தோமஸ்/பிஷொப்ஸ், சயன்ஸ் கல்லூரி/பெண்கள் உயர்தரப் பாடசாலை கல்கிஸ்ஸ, சென்.சில்வெஸ்டர்ஸ்/சென். அந்தனீஸ் மகளிர் கல்லூரி, தர்மராஜா/மஹாமாயா, சென்.பெனடிக்ட்ஸ்/நல்லாயன் கன்னியர்மடம், வித்தியார்த்த/புஷ்பதான மகளிர் கல்லூரி, சென்.பீற்றர்ஸ்/திருக்குடும்ப கன்னியர்மடம் பம்பலப்பிட்டி, தேர்ஸ்ட்டன்/தேவி பாலிகா ஆகியவையாகும்.

கடந்த வருடம் வித்தியார்த்த/புஷ்பதான இணைந்த அணிகள் C-Rugby சம்பியன் பட்டத்தை வென்றிருந்தன. வெஸ்லி/மெத்தடிஸ்ட் அணி Plate சம்பியன் பட்டத்தையும், சென்.பீற்றர்ஸ்/திருக்குடும்ப கன்னியர்மட அணி Bowl சம்பியன் பட்டத்தையும் சுவீகரித்தன. கடந்த வருடத்தை இவ்வாண்டு கூடுதலான கொண்டாட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இம்முறை நடத்தப்படும் நிகழ்ச்சி வர்ணஜாலம் கலந்து உற்சாகம் கரைபுரண்டோடுவதாக அமைவதில் சந்தேகம் கிடையாது. சுற்றுத்தொடருக்காக கைகோர்க்கும் நிறுவனங்கள் – Lemonade, Keells Krest, Imorich, Haleon-Iodex, Fairway Holdings, FriMi, The Papare, Prima, Rush, CR&FC and YES 101 ஆகியவையாகும்.

From ASMR to Astro: How...
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් 2025 SUN සම්මාන...
மெல்லிய திரையுடன் சிறந்த பார்வை அனுபவத்தை...
The Sampath Group’s Total Assets...
SLINTEC’s Accredited Food Testing Services...
அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு 20% வரி விகிதத்தை...
එක්සත් ජනපද අපනයනයන් සඳහා 20%ක...
හිතේ හැටියට TV බලන්න සිහින්...
அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு 20% வரி விகிதத்தை...
එක්සත් ජනපද අපනයනයන් සඳහා 20%ක...
හිතේ හැටියට TV බලන්න සිහින්...
Yara Technologies partners with Clover...