முதல் ஒன்பது மாதங்களில் 48.9 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்து, குழுமத்தின் வலுவான நிதி செயல்திறனை தக்கவைத்த Sunshine Holdings

Share

Share

Share

Share

பன்முகத்தன்மை கொண்ட குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் 48.9 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.1% அதிகாிப்பாகும். இந்தக் காலக்கட்டத்தில், சில வணிகப் பிரிவுகளின் செயல்பாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், குழுமம் அதன் மூலோபாய திட்டங்களை விவேகத்துடன் செயல்படுத்தி, அதன் நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்கும் முக்கிய துறைகளை வலுப்படுத்த தொடர்ந்து முதலீடு செய்தது.

குழுமத்தின் அதிக வளர்ச்சிக்கு சுகாதாரப் பிரிவு பெரும் பங்களிப்பை வழங்கியது, இது மொத்த வருவாயில் 55.4% ஆகும். இதனிடையே, நுகர்வோர் பிரிவு 29.7% மற்றும் விவசாய வணிகப் பிரிவு 14.9% ஆக குழுமத்தின் மொத்த வருவாய்க்கு பங்களித்தன. குழுமத்தின் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய ஈட்டுத் தொகை (EBIT) முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.2% சிறிய வளர்ச்சியுடன் 7.5 பில்லியன் ரூபாவாக இருந்தது. விவசாய வணிகம் மற்றும் நுகர்வோர் பிராண்டுகளின் வலுவான செயல்திறனே இதற்கு முக்கிய காரணமாகும். இது சுகாதாரப் பிரிவின் குறைந்த இலாப வரம்புகளின் தாக்கத்தைக் குறைக்க உதவியது. வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.8% குறைந்து 4.3 பில்லியன் ரூபாவாக இருந்தது, சுகாதாரப் பிரிவின் இலாப ஈட்டும் திறன் குறைந்தமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

குழுமத்தின் இந்த நிதி செயல்திறன் குறித்து சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் கூறுகையில், “கடந்த ஒன்பது மாதங்களில், சில வணிகப் பிரிவுகளுக்கு செயல்பாட்டு சவால்கள் மற்றும் பல்வேறு வெளிப்புற பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், குழுமம் அதன் மூலோபாய திட்டங்களை விவேகத்துடன் செயல்படுத்தி, அதன் நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்கும் முக்கிய துறைகளை வலுப்படுத்த தொடர்ந்து முதலீடு செய்தது. சுகாதாரப் பிரிவின் வருவாய் தொடர்ந்து வளர்ச்சியடைந்த போதிலும், புதிய மருந்து விலை நிர்ணய முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் குறைந்த உற்பத்தி மற்றும் விலைகள் மீதான அழுத்தம் காரணமாக, இலாபமீட்டும் திறன் குறுகிய காலத்தில் பாதிப்புக்குள்ளானது. அதே நேரத்தில், விவசாய வணிகப் பிரிவு மற்றும் நுகர்வோர் பிராண்டுகளின் உயர் செயல்திறன், குழுமத்தின் ஈட்டுதல்களை நிலையாக வைத்திருக்க உதவியது. நாங்கள் தெரிவு செய்த துறைகளில் பொறுப்புடன் தொடர்ந்து முதலீடு செய்கிறோம்,” என தெரிவித்தார்.

ஜனவரி 2026 இல், முன்னணி ஏற்றுமதி நிறுவனமான Joint Agri Products Ceylon (Private) Limited (JAPC) பங்குகளை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குழுமம் அறிவித்தது. இதன்மூலம், மசாலாப் பொருட்கள் மற்றும் தெங்கு சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட, பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களுக்கான அணுகலை அதிகரித்தன் மூலம், நுகர்வோர் பிராண்டுகள் பிரிவை மேலும் வலுப்படுத்த முடிந்தது. மேலும், இதன்மூலம் முக்கிய சர்வதேச சந்தைகளில் தனது நிலையை வலுப்படுத்தவும் குழுமம் இலக்கு கொள்கிறது.

சுகாதாரப் பிரிவு
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலக்கட்டத்தில், குழுமத்தின் சுகாதாரப் பிரிவு 27.1 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 9.3% வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சியில் மருந்து விநியோகம், மருத்துவ உபகரணங்கள், மருந்தகங்கள் மற்றும் மருந்து உற்பத்தியில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளடங்கும். மருந்து விநியோக வணிகம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.0% வலுவான வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதனிடையே, முக்கிய பொருட்களுக்கான நிலையான தேவை காரணமாக, மருத்துவ உபகரணப் பிரிவு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.7% வளர்ச்சியடைந்தது.

2026 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், Healthguard Distributionஇன் வணிக மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் முன்னணி பிராண்டுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புதிய மூலோபாய கூட்டாண்மைகள் காரணமாக, Healthguard Distribution முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 24.8% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதனிடையே, விற்பனை செய்யப்பட்ட மருந்துச்சீட்டுகளின் அளவு / மருந்து விற்பனை அதிகரித்தமை, மருந்துகள் மற்றும் நல்வாழ்வு பொருட்கள் ஆகிய இரண்டு துறைகளிலும் பதிவான அதிக விற்பனை மதிப்பு காரணமாக, Healthguard மருந்தகச் சங்கிலியின் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 13.3% வளர்ச்சியைக் காட்டியது. எனினும், சுகாதாரப் பிரிவின் உற்பத்தி செயல்பாட்டில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஒட்டுமொத்த வணிகத்தின் இலாபமீட்டும் திறன் குறைந்தது. முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, அரசாங்க கொள்முதல் ஆணைகளின் அளவு குறைந்தமை மற்றும் புதிய விலை நிர்ணய முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட சவால்கள் இதில் தாக்கம் செலுத்தின.

நுகர்வோர் பிரிவு
உள்நாட்டு பிராண்ட்கள் மற்றும் ஏற்றுமதிகளை உள்ளடக்கிய நுகர்வோர் பிரிவு, 9MFY26இல் 14.5 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்தது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.9% வளர்ச்சியாகும். உள்நாட்டு சந்தை நிலவரங்கள் மேம்பட்டமை, நுகர்வோரின் நம்பிக்கை அதிகரித்தமை மற்றும் நிறுவனத்தின் விநியோக நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டமை இதற்குக் காரணமாகும். பிராண்டட் தேயிலை மற்றும் மிட்டாய் வணிகங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.4% அதிகரித்தது.

பிராண்டட் தேயிலை வணிகத்தின் விற்பனை மற்றும் சந்தை மதிப்பு நிலையான வளர்ச்சியைக் காட்டியது. ‘தித்வா’ புயல் காரணமாக விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட தற்காலிக இடையூறுகளால் 9MFY26இல் நிதி செயல்திறனில் சில பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், மிட்டாய் வணிகத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை அளவு அதிகரித்தது. முக்கியமாக விற்பனை கலவையினால், அதிக ஏற்பாட்டு அளவுகள் இருந்த போதிலும், ஏற்றுமதி வணிகமானது வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு 4.7% வீழ்ச்சியைப் பதிவு செய்தது. வெளிநாடுகளில் அதிக அதிக விற்பனையை பதிவு செய்த போதிலும், ஏற்றுமதி வணிகமானது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 4.7% குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விவசாய வணிகப் பிரிவு
குழுமத்தின் விவசாய வணிகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டவளை பெருந்தோட்ட நிறுவனத்தின் வருவாய், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 20.6% அதிகரித்து 7.3 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. ஃபாம் ஒயில் விலை குறிப்பிடத்தக்களவில் உயர்ந்தமை மற்றும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஃபாம் ஒயில் விற்பனை 8.8% வளர்ச்சியடைந்தமை இதற்கு முக்கிய காரணமாகும். ஃபாம் ஒயில் வணிகத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 25.8% உயர்ந்தது. இதனிடையே, உரிய காலக்கட்டத்தில் பால் உற்பத்தி மற்றும் விற்பனை விலை குறைந்தமை காரணமாக, பால் சார்ந்த வணிகத்தின் வருவாய் 842.7 மில்லியன் ரூபாவாக இருந்தது, இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.1% வீழ்ச்சியாகும். பால் சார்ந்த வணிகத்தின் வருவாய் குறைந்த போதிலும், உரிய காலக்கட்டத்தில் விவசாய வணிகப் பிரிவின் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய ஈட்டுத் தொகையின் (EBIT) மாற்றம், முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவான 37.9% உடன் ஒப்பிடும்போது 45.6% ஆக உயர்ந்து, அந்தப் பிரிவின் ஒட்டுமொத்த இலாபமீட்டும் திறன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியது. ஃபாம் ஒயில் வணிகத்தின் செயல்திறன் மற்றும் செலவு முகாமைத்துவமே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

Tesla Model Y කාර් රථයට...
புதிய வாகன மாடல்களுக்கான விரிவான லீசிங்...
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818...
Prime Group இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று...
ஜனசக்தி லைஃப், 2026 வருடாந்த விற்பனை...
ஜனசக்தி பைனான்ஸ் AFBU, இலங்கையில் நெறிமுறையான...
Janashakthi Life කණ්ඩායමේ මානව දයාව...
MullenLowe’s Sampath Karunaratne Awarded Next...
ஜனசக்தி பைனான்ஸ் AFBU, இலங்கையில் நெறிமுறையான...
Janashakthi Life කණ්ඩායමේ මානව දයාව...
MullenLowe’s Sampath Karunaratne Awarded Next...
JAAF reaffirms confidence in long-term...