முன்பதிவு கொள்வனவுக்கு சிறப்புச் சலுகைகளுடன் Galaxy S24FE ஐ வழங்கும் Samsung

Share

Share

Share

Share

உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான Samsung, அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy S24FE-க்கான முன்பதிவுகளை தொடங்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. இதன்படி, முன்பதிவு கொள்வனவு காலம் ஒக்டோபர் 15 ஆம் திகதி காலை 05:00 மணிக்கு தொடங்கி, ஒக்டோபர் 31 ஆம் திகதி இரவு 11:59 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Galaxy S24FE-க்கான முன்பதிவு கொள்வனவுக்கு பல சிறந்த சலுகைகளையும், விதிவிலக்கான பல நன்மைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் Samsung மகிழ்ச்சியடைகிறது. அதேபோல, முன்பதிவு கொள்வனவுக்கான விலையானது 24,491 ரூபா சேமிப்புடன் 253,838 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் Galaxy S24FE-ஐ முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இரண்டு வருட காலத்திற்கு சிறப்பு திரை மாற்றும் வசதி உள்ளிட்ட பல சலுகைகளைப் பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டு தடவைகள் திரையை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம், வழக்கமான விலையில் 72,000 ரூபா மதிப்புள்ள இந்த சேவை, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் மாதம் 9,411 ரூபா தவணையில் 24 மாதங்களுக்கு எளிய முறையில் கொடுப்பனவை மேற்கொள்ள முடியும். அதேபோல, Dialog மற்றும் Mobital என்பன வழங்கும் 600GB Data தொகுப்புகள் மற்றும் ழுநெனுசiஎந-க்கான 2 மாத இலவச சந்தா உள்ளிட்ட பல சிறப்பான சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து Samsung Electronics Sri Lanka இன் முகாமைத்துவப் பணிப்பாளர் SangHwa Song கருத்து தெரிவிக்கையில், ‘எமது சமீபத்திய கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்புகளின் அனைத்து நன்மைகளையும் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். Galaxy AI பயனர்களுக்கு பல புதிய அனுபவங்களைத் திறக்கிறது. அவர்களின் தொடர்பாடல், படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவுகிறது. Galaxy S24 FE ஆனது S24 தொடரின் சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் அதிநவீன Galaxy AI திறன்களை இன்னும் அதிகமான மக்களுக்குக் கிடைக்கச் செய்கிறது.’ என தெரிவித்தார்.

AI அடிப்படையிலான ProVisual Engine மற்றும் Galaxy AI இன் Photo Assist அம்சங்களால் இயக்கப்படும் Galaxy S24 FE, பயனர்கள் மேலும் படைப்பாற்றலுடன் இருக்க உதவும் மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 6.7 அங்குல Dynamic AMOLED 2X திரை, நீண்ட நேரம் நிலைக்கும் 4,700mAh பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த Exynos 2400e series chipse கொண்ட இது Gaming விளையாட்டுக்கு சிறந்த சாதனமாகும். Galaxy S24 FE, premium Galaxy AI கருவிகள் மற்றும் சூழல் இணைப்பை வழங்குகிறது – இவை அனைத்தும் சிறந்த வடிவமைப்பில் மற்றும் வலுவான Galaxy KNOX பாதுகாப்புடன் கூடியது.

குறிப்பாக, Galaxy S24 FE ஆனது வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான செயல்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 7 வருடங்கள் operating system மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளை (devices) வழங்குகிறது.

முன்பதிவு கொள்வனவு சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அத்துடன், பணம், Debit மற்றும் Credit அட்டைகள் கட்டணங்களுக்கு பொருந்தும். JKOA, Sinhagiri மற்றும் Softlogic காட்சியறைகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் Galaxy S24 FE ஐ எளிதாக முன்பதிவு செய்யலாம்.
Samsung தனது விருப்பப்படி சலுகைகளை மாற்ற அல்லது திரும்பப் பெறுவதற்கான உரிமையை கொண்டுள்ளது. சாதனங்களின் விலைகள் முன் அறிவிப்பின்றி மாற்றப்படலாம். மேலும், அனைத்து சர்ச்சைகளும் இலங்கையில் உள்ள நீதிமன்றங்களின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.

தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக இயந்திரங்கள், தரவுகள்...
පුල්ලේ මඩුවෙන් වෛද්‍ය පීඨයට වැවිලි...
The cost of hesitation: lessons...
TikTok strengthens AI transparency and...
රෙදිපිළි හා ඇඟලුම් උපාංග නිෂ්පාදකයින්ගේ...
Deleted Scenes by BBDO Sri...
150 years of rubber: A...
Swisstek strengthens integrated building solutions...
Deleted Scenes by BBDO Sri...
150 years of rubber: A...
Swisstek strengthens integrated building solutions...
පාරිභෝගිකයින්ට සුවිශේෂී ප්‍රතිලාභ රැසක් පිරිනමමින්...