வத்தளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை வத்தளையில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. HNB FINANCE நாடு முழுவதும் நிறுவனத்தின் சேவைகளைப் பேணுவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் தனது நிதிச் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் புதிய இடங்களில் கிளைகளை நிறுவுகின்றது.

இந்த புதிய வத்தளை கிளை இல. 420 வத்தளை, கொழும்பு நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளது. HNB FINANCE PLC வழங்கும் அனைத்து நிதிச் சேவைகளும் வத்தளை கிளையில் கிடைக்கின்றன, மேலும் இந்த சேவைகளில் லீசிங், சேமிப்பு, நிலையான வைப்பு, வணிகக் கடன், வீட்டுக் கடன் மற்றும் தொழில்துறையில் மிகவும் பிரபலமான தங்கக் கடன் சேவை ஆகியவை அடங்கும்.

வத்தளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கக் கடனுக்கான பெரும் தேவை இருப்பதால், HNB FINANCE வத்தளை கிளையில் புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தையும் அமைத்துள்ளது. HNB FINANCE தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாறுபடும் பல தங்கக் கடன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, நிறுவனத்தின் தங்கக் கடன் சேவைகளான “Gold Loan” Gold Plan மற்றும் VIP Gold Loan ஆகியவை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள அனைத்து தங்க கடன் சேவைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. HNB FINANCE தங்கக் கடன் சேவையானது குறைந்தபட்ச வட்டியில் ஒரு தங்கப் பவுணுக்கு அதிகபட்ச முன்பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, மேலும் இந்த புதிய தங்கக் கடன் சேவை அலகு சேவைக் கட்டணங்கள் அல்லது பிற மறைமுகக் கட்டணங்கள் இல்லாமல் நம்பகமான பரிவர்த்தனையைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

மேலும் HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மதுரங்க ஹீன்கெந்த ஆகியோரின் தலைமையில் இந்த புதிய கிளை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட பிரதம அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

“HNB FINANCE ஐப் பொருத்தவரையில் எங்கள் நோக்கம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான நிதிச் சேவையை வழங்குவதாகும். வத்தளையிலுள்ள இந்த புதிய கிளையின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த நிதி சேவை அனுபவத்தையும், மிக இலகுவாக அணுகக் கூடிய வசதிகள் தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளுடன் சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த புதிய கிளையை வாடிக்கையாளர்களுக்கு உகந்த சேவை மத்திய நிலையமாக மேம்படுத்துவதில் எங்களின் பணிவான மகிழ்ச்சி.” என HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார். மேலும்

 

தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக இயந்திரங்கள், தரவுகள்...
පුල්ලේ මඩුවෙන් වෛද්‍ය පීඨයට වැවිලි...
The cost of hesitation: lessons...
TikTok strengthens AI transparency and...
රෙදිපිළි හා ඇඟලුම් උපාංග නිෂ්පාදකයින්ගේ...
Deleted Scenes by BBDO Sri...
150 years of rubber: A...
Swisstek strengthens integrated building solutions...
Deleted Scenes by BBDO Sri...
150 years of rubber: A...
Swisstek strengthens integrated building solutions...
පාරිභෝගිකයින්ට සුවිශේෂී ප්‍රතිලාභ රැසක් පිරිනමමින්...