இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, வாகனங்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் நிதி தீர்வுகள் மற்றும் பிரத்யேக சலுகைகளை வழங்குவதற்காக, United Motors இன் வாகனப் பிரிவான UNIMO உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த கூட்டாண்மை, வாகனங்களில் முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு நிறுவனங்களின் நன்மைகளுடன் இணைக்கப்பட்ட பிரத்யேக வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சிறப்பு நிகழ்வு, HNB வாடிக்கையாளர் வங்கிப் பிரிவின் தலைவர் காஞ்சன கருணாகம மற்றும் UNIMO பொது முகாமையாளர் Shalain De Silva ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த HNBஇன் வாடிக்கையாளர் வங்கிப் பிரிவின் தலைவர் காஞ்சன கருணாகம, “HNB-ல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான மற்றும் மலிவு விலையில் நிதி தீர்வுகளை வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். UNIMO உடனான எங்கள் கூட்டாண்மை, எங்கள் இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் வாகனங்கள் வாங்கும் போது, இணையற்ற நன்மைகள் மற்றும் சலுகைகளை வழங்குவதற்கான எங்கள் திறனை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த தனித்துவமான வாய்ப்பை பலர் பயன்படுத்தி வாகனங்களில் முதலீடு செய்வார்கள் என்று நம்புகிறோம்.” என தெரிவித்தார்.
இந்த கூட்டாண்மையின் கீழ், HNB அதன் விரிவான வாடிக்கையாளர் தளத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பலவிதமான கவர்ச்சிகரமான நிதித் தேர்வுகளை வழங்கும். வங்கி 5 ஆண்டுகள் வரையிலான கட்டமைக்கப்பட்ட லீசிங் முறைகள் மற்றும் மிகுதியான லீசிங்களுக்கு கூடுதல் வட்டி கட்டணங்கள் இல்லாமல் நிலவும் வட்டி விகிதத்தை வழங்கும்.
இந்த சலுகையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் Prestige Prime Credit Card மூலம், வாகனப் பொருட்கள், சர்வீஸ், உதிரி பாகங்கள், டயர்கள், பேட்டரிகள் மற்றும் பலவற்றில் பிரத்யேக அட்டை சலுகைகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகளைப் பெறலாம். மேலும், HNB General Insurance 4.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இலவச ஆயுள் காப்புறுதி மற்றும் 600,000 ரூபா வரையான இயற்கை மரண காப்புறுதி தொகையையும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.