விடுமுறைக் காலத்தில் இனிமையான அனுபவங்களை அள்ளித் தரும் செலான் அட்டைகள்

Share

Share

Share

Share

அனைத்து சமூகங்களும் ஒன்றாகக் கொண்டாடி மகிழும் இந்த விடுமுறைக் காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான இன்றியமையாத அட்டையான செலான் அட்டைகள் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்காக, நாடு முழுவதும் உள்ள பரந்துபட்ட சிறந்த வணிகர்களுடன் இணைந்து, அதன் பருவகால கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது. செலான் அட்டைகள், நம்பமுடியாத சலுகைகளை வழங்குவதன் மூலம் நத்தார் மற்றும் புத்தாண்டு ஷாப்பிங்கிற்கான சிறந்த தேர்வாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

பருவகால அனுபவத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஆடைகள், காலணிகள், accessories, online சலுகைகள் மற்றும் கண் பராமரிப்பு தொடர்பான தீர்வுகள் என பலதரப்பட்ட பிரிவுகளில் 300இற்கும் மேற்பட்ட முன்னணி வணிகர்களுடன் செலான் அட்டைகள் இணைந்துள்ளது. இதில் Softlogic Brands, Spa Ceylon, D. Samson & Sons, Hameedia, Cool Planet, Fashion Bug, Nolimit, CIB, Sriyani Dresspoint, Thilakma ஆகிய பல முன்னணி வணிகர்களுடன் மேலும் பலரும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இந்த பண்டிகைக் காலத்தில், செலான் அட்டைகள் பலதரப்பட்ட வணிகர்களுடனான இணைவு மூலம் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான சலுகைகளை வழங்க உற்சாகமாக உள்ளது. அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற வகையில் செலான் வங்கி அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்குவதில் பெருமை கொள்கிறது. ‘இனிமையான அனுபவங்கள்’ என்ற எங்கள் கருப்பொருள் ஊடாக எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மறக்கமுடியாத தருணங்களை வழங்க உறுதியாக உள்ளமை எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று செலான் வங்கியின் அட்டைகளின் தலைவர் ருசித் லியனகே தெரிவித்தார்.

மேலும், Keells, Cargills, Glomark, Arpico மற்றும் Spar போன்ற பல்பொருள் அங்காடிகளுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு 30% வரையான கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகின்றது. மேலதிகமாக, செலான் அட்டைகள் Mastercard மற்றும் Cinnamon Hotels உடன் இணைந்து இந்த விடுமுறைக் காலத்தில் அட்டை வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவருந்தும் அனுபவத்தை வழங்கவுள்ளது.

பண்டிகைக் காலக்கொண்டாட்டத்தை மேலும் பரவசமாக்கும் வகையில், செலான் அட்டைகள் Halo Flights உடன் இணைந்து ஒரு அதிர்ஷ்டசாலி செலான் அட்டை வாடிக்கையாளர்களுக்கு சிங்கப்பூர் சென்று வருவதற்கான இரண்டு இருவழி விமானப்பயணச் சீட்டுகளை வெல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. செலான் அட்டை வாடிக்கையாளர்கள் அவர்களின் செலான் கடனட்டை மூலம் குறைந்தபட்சம் ரூ. 5000/- பெறுமதியான பரிவர்த்தனையை மேற்கொள்வதன் மூலம் இந்த குலுக்கல் போட்டியில் நுழையலாம். விடுமுறை ஷாப்பிங்கை எளிதாக்கும் முகமாக செலான் அட்டைகள் அதன் இலகு கட்டண திட்டத் தெரிவுகளை பயணங்கள், பள்ளிக்கட்டணம் செலுத்துதல் மற்றும் காப்பீட்டு வகைகளுக்கு விரிவுபடுத்துகிறது.

டிசம்பர் 1 முதல், செலான் அட்டைகளின் பிரத்தியேக பிரதிநிதிகள் குழு Havelock City Mallஇல் இருப்பார்கள். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மாதம் முழுவதும் பல சலுகைகள் மற்றும் பரிசுகள் காத்திருக்கின்றன. செலான் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் எமது குழு உறுப்பினர்களை அணுகலாம்.

இந்தப் பருவத்தின் கருப்பொருளான ‘இனிமையான அனுபவங்கள்’ அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலானின் அடையாளத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. இக்காலகட்டத்தில், சலுகைகள் மூலம் தனது வாடிக்கையாளர்களின் இதயங்களில் மறக்கமுடியாத நினைவுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வங்கி ஏற்றுக் கொள்கின்றது. இச்சலுகைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, 011 200 88 88 என்ற விஷேட இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும். செலான் கடனட்டையை பெற ஆர்வமுள்ளவர்கள், எமது பிரதிநிதிகளான துமிந்த – 070 445 6841 அல்லது விதுரங்கவை – 070 445 6835 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இப் பண்டிகைக் காலத்தை தமது அன்பானவர்களுடன் கொண்டாட இலங்கையர்கள் தயாராகி வரும் நிலையில், செலான் அட்டைகள் அவர்களின் விடுமுறை நாட்களை மிகவும் மகிழ்ச்சியாகவும், இதயபூர்வமாகவும், மறக்கமுடியாததாகவும் ஆக்குவதற்கான சிறந்த பங்காளியாக திகழ்கிறது. இந்த பிரத்தியேக சலுகைகளை தவறவிடாதீர்கள்.

 

 

 

 

 

 

 

 

 

SampathCards & Hilton Colombo Collaborate...
நிம்னா & இசுரு: TikTok மூலம்...
Samsung Sri Lanka Hosts B2B...
Atlas PlayPalz, ශ්‍රී ලංකාවේ මුල්...
Sunshine Holdings celebrates employee excellence...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
Sri Lanka’s coconut industry faces...