10,000 க்கும் மேற்பட்ட மீள்பயன்பாட்டு சுகாதாரத் துவாய்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கான அதன் அர்ப்பணிப்பை MAS இன் Femography மேலும் அதிகரித்துள்ளது. இந்த நன்கொடைகள் மாதவிடாய் சுகாதாரத் துவாய் வறுமையை ஒழிப்பதற்காகப் போராடி இந்நாட்டுப் பெண்களின் வாழ்வை வலுவடையச் செய்யும் நோக்கில் செய்யப்பட்டன. பெண்களின் விசேட தேவைகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமானது, பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் 2000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உதவிகளை வழங்குவதாகும். Femography ‘Run for Her’ வேலைத் திட்டத்துடன் இணைந்து, இந்த மீள்பயன்பாட்டு சுகாதார துவாய் நன்கொடை மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கான நிதி மற்றும் விழிப்புணர்வைத் திரட்டியது.
பெண்மையின் படைப்புத்திறன் மற்றும் பராமரிப்பு ஆற்றலால் ஈர்க்கப்பட்ட ஆடைகள் மூலம் பெண்களுக்கு நல்ல ஆரோக்கியம், பெருமை மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட Femography, பெண்களின் சுகாதாரத்திற்கான பாரம்பரிய வரம்புகளுக்கு எதிராக நிற்கும் FemTech ஆடைத் துறையில் ஒரு முன்னோடியாகவும் குறிப்பிடலாம். அதனால்தான், பெண்களின் சுகாதாரத்தில் புத்தாக்கங்கள், ஒருமுறை தூக்கி எறியக்கூடிய சுகாதாரப் பொருட்கள் முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுகாதாரப் பொருட்கள் வரை பெண்களின் நல்வாழ்வுக்கு பெரும் பங்களிப்பைச் செய்ய அவர்கள் உழைத்துள்ளனர்.
பெண்களின் மாதவிடாய் சுகாதார சவால்களை நிவர்த்தி செய்வதில் Femographyயின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் மட்டுமல்லாது, இந்த திட்டம் Femographyயின் சமூகப் பொறுப்பு மற்றும் புத்தாக்கத்தின் நோக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த MAS Femographyஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி Pilar Diaz, “ஆடை உற்பத்தி மற்றும் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளவர்களை விட அதிகமாக வழங்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். வாடிக்கையாளருக்கு சரியான தீர்வுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பொருட்கள் முதல் பெண்களின் சுகாதாரத்திற்காக மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வரை, சர்வதேச அளவிலான உற்பத்தி மூலம் பெண்களின் சுகாதாரத்தை அதிகரிக்க நாங்கள் உழைத்தோம். இதன் மூலம் மிகவும் முக்கியமாக இலங்கைப் பெண்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் மாதவிடாய் சுகாதாரத் துவாய் வறுமையை குறைத்து அவர்களை வலுவூட்டுவதற்கு நாங்கள் பாடுபட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.
மாதவிடாய் சுகாதாரத் துவாய் வறுமையை என்பது உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதிக்கும் குறைவான மதிப்பிடப்பட்ட ஆனால் தீவிரமான பிரச்சனையாகும். இலங்கையில் உள்ள பல பெண்கள் பொருளாதார சிரமங்கள் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக தேவையான சுகாதார பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு முன்பு, மாதவிடாய் ஏற்படும் வயதுடைய பெண்களைக் கொண்ட சுமார் 50% குடும்பங்கள் சுகாதார துவாய்களை வாங்க முடியவில்லை, இது அந்த நாட்களில் பாடசாலை மற்றும் வேலையில் வருகையைக் குறைத்தது. ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சுகாதாரப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் சுமார் 20% பாடசாலை மாணவிகள் அந்தக் காலப்பகுதியில் பாடசாலைக்கு சமூகமளிக்க மறுத்தமை ஒரு துரதிஷ்டமான நிலை என சுட்டிக்காட்டலாம்.
மாதவிடாய் துவாய் வறுமை என்பது பெண்களுக்கு உடல் உபாதைகள் மட்டுமல்ல, அவர்களின் தொழில், கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தடுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கு குறிப்பிடக்கூடிய மற்றொரு பிரச்சனை, அன்றாடம் பயன்படுத்தும் சுகாதார துவாய்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்சினையாகும். பொதுவாக பயன்படுத்தப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் சுகாதார துவாய்கள் மாசு மற்றும் கழிவுகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. பெண்களின் சுற்றுச்சூழல் வலையமைப்பு ஆராய்ச்சியில், ஒருமுறை தூக்கி எறியும் மாதவிடாய் துவாய் சிதைவதற்கு குறைந்தது 500 ஆண்டுகள் ஆகும் என்று கண்டறிந்துள்ளது, இது நிலையான பொருட்களைப் பயன்படுத்துவதற்கான அவசரத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக FemTech துறையில் முன்னணியில் உள்ள Femography என்பது MAS ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமாகும். மாதவிடாய் சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தவும், உலகளவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் அதன் அனுபவத்தையும் வளங்களையும் பயன்படுத்தி, பெண்களுக்கு நிலையான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் சுகாதாரப் பொருட்கள் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த Femography பணியாற்றியுள்ளது.