வருடாந்திர இரத்த தான நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த HNB FINANCE

Share

Share

Share

Share

இலங்கையின் நிதித் துறையில் முன்னணி நிறுவனமான HNB FINANCE PLC, அதன் வருடாந்திர இரத்த தான நிகழ்ச்சியை சமீபத்தில் நிறுவனத்தின் பிரதான அலுவலக அரங்கில் வெற்றிகரமாக நடத்தியது. HNB FINANCEஇன் நிறுவன சமூக பொறுப்புணர்வு அணுகுமுறையின் கீழ் இந்த நிகழ்ச்சி ஒழுங்கமைக்கப்பட்டது, மேலும் ஊழியர் உறவுகள் மற்றும் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.

HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியில், நிறுவனத்தின் ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அருகிலுள்ள பிற நிறுவனங்களின் பணியாளர்கள் உள்ளிட்ட பிரதேசத்தின் ஏராளமான இரத்த தானம் செய்பவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இரத்த தானம் செய்வதற்கு முன்வந்த சுமார் 150 இரத்த தானம் செய்பவர்களில், இலங்கை தேசிய இரத்த வங்கிக்கு 120 பைண்ட் இரத்தத்தை வழங்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த HNB FINANCE PLCஇன் பிரதி பொது முகாமையாளரும் மனித வளங்கள் மற்றும் தலைமை மனித வள அதிகாரியுமான திரு. ருவான் பிரனாந்து அவர்கள், “நிறுவன சமூக பொறுப்புணர்வு என்பது நிதிச் சேவைகளை வழங்குவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அது எங்கள் வருடாந்திர இரத்த தான நிகழ்ச்சியின் மூலம், எங்கள் ஊழியர்களுக்கும், இதற்கு பங்களிக்கும் இரத்த தானம் செய்பவர்களுக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதில் நேரடியான மற்றும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதேபோல்தான் இந்த முறை நிகழ்ச்சிக்கு கிடைத்த உயர் மக்கள் பங்கேற்பும். அதன் மூலம், மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் சமூக அங்கீகாரம் பற்றிய ஒரு உணர்வை உருவாக்கிக்கொள்ளவும், அதை மேலும் மேம்படுத்திக்கொள்ளவும் இத்தகைய சமூக நல நிகழ்ச்சிகள் உதவுகின்றன. மேலும், நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்காக எங்களை வழிநடத்திய HNB FINANCEஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கும், இலங்கை தேசிய இரத்த வங்கியின் தேவையான மருத்துவ மற்றும் செயல்பாட்டு ஆதரவை வழங்கிய பணியாளர்களுக்கும், அதற்கு பல்வேறு வழிகளில் ஆதரவளித்த அனைவருக்கும், HNB FINANCE நிறுவனத்தின் சார்பாக எங்கள் மரியாதைக்குரிய நன்றியை தெரிவிக்க இதை ஒரு வாய்ப்பாகக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

நீடித்த சமூக தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, ஊழியர் பங்கேற்பை ஊக்குவிக்கும் மற்றும் இலங்கையின் சமூகங்களின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் இத்தகைய நிகழ்ச்சிகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து செயல்படுத்த HNB FINANCE உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செப்டம்பரில் ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளபோதிலும்,...
Sampath Bank Introduces One-Stop Housing...
வருடாந்திர இரத்த தான நிகழ்ச்சியை வெற்றிகரமாக...
“மனதளவில் வலிமையானவர்கள் – செல்வச் செழிப்புள்ள...
Daraz ශ්‍රී ලංකා සමාගම සිය...
JAAF welcomes Government’s commitment to...
Pearson BTEC Connect South Asia...
Coca-Cola Beverages Sri Lanka celebrates...
JAAF welcomes Government’s commitment to...
Pearson BTEC Connect South Asia...
Coca-Cola Beverages Sri Lanka celebrates...