15வது தடவையாக இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் சேவை வங்கியாக அங்கீகரிக்கப்பட்ட HNB

Share

Share

Share

Share

அண்மையில் முடிவடைந்த 2025 சர்வதேச வாடிக்கையாளர் நிதிச் சேவை விருது வழங்கும் நிகழ்வில் (Asian Banker Global Excellence in Retail Financial Services Awards), HNB சிறந்த வாடிக்கையாளர் வங்கிக்கான விருதைப் பெற்றது. இந்த விருதை HNB 15ஆவது தடவையாக வென்றுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். இதன் மூலம், புத்தாக்கமான சேவைகள், நிதிச் சேவைகளில் அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் வாடிக்கையாளர் மைய வங்கி சேவைகளுக்கு HNB காட்டும் அர்ப்பணிப்பை இது தெளிவாக பிரதிபலிக்கிறது.

இந்த குறிப்பிடத்தக்க வெற்றி குறித்து கருத்து தெரிவித்த, HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த, “ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அனைத்து இலங்கையர்களின் முன்னேற்றத்திற்கும் உதவியாளராக இருந்து, தேவையான ஆதரவை வழங்குவதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தொடக்கத்திலிருந்தே நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த உலகளாவிய நடைமுறைகள் மூலம், ஒரு வாடிக்கையாளர் மைய வணிக மாதிரியாக மாற்றி, நாளுக்கு நாள் முன்னேறுவதற்கு எங்களால் முடிந்துள்ளது. 15 ஆண்டுகளாக வாடிக்கையாளர் வங்கி துறையில் சிறந்த வங்கியாக விருது பெறுவதில் வெற்றி பெற்ற நாங்கள், எதிர்காலத்திலும் அந்த நிலையை தொடர்ந்து பராமரிக்க பணியாற்றுவோம்.” என தெரிவித்தார்.

வாடிக்கையாளர் வங்கி புத்தாக்கப்படுத்தல்கள் மூலம் வாடிக்கையாளர் வசதி மற்றும் நிதிச் சேவைகளை மீண்டும் மீண்டும் வரையறுக்கும் பணியை மேற்கொண்டுள்ள HNB, சமீபத்தில் அதன் டிஜிட்டல் சேவைகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. பிரதான மூன்று மொழிகளில் தகவல்தொடர்பு செய்யும் திறனை வழங்கும் மூன்று மொழி மொபைல் வங்கி செயலியை அறிமுகப்படுத்தியது.
இந்த சேவைகள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு அதிக அணுகல் திறன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நபருக்கும் பொருந்தக்கூடிய அனுபவங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முறைப்படுத்துதல் மற்றும் நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானத்தை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. இந்த டிஜிட்டல் தீர்வுகள் மூலம், வாடிக்கையாளர் தேவைகள் பற்றிய ஆழமான புரிதலுடன் அதிநவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான HNBஇன் அர்ப்பணிப்பு வலியுறுத்தப்படுகிறது.

மேலும், HNB வாடிக்கையாளர் வங்கி செயல்பாடுகளை மாற்றுவதற்கான மூலோபாய கவனம் காரணமாக, தயாரிப்புகள், சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை உருவாக்கியுள்ளது. மேலும், மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட சேமிப்புத் திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட வாடிக்கையாளர் சேவைகளிலிருந்து, குறைந்த நேரத்தில் சேவையை வழங்கக்கூடிய டிஜிட்டல் செயல்முறைகள் வரை, ஒவ்வொரு துறையிலும் புத்தாக்கத்தை மேற்கொள்வதற்காக HNB அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர் வங்கியில் தனது தலைமையை சிறப்பாக வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

HNB தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக அதன் டிஜிட்டல் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது, மேலும் இலங்கையில் நிதி வலுவூட்டல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நம்பகமான பங்காளியாக நற்பெயரைப் பெற்றுள்ளது.

வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதற்கான HNBயின் அர்ப்பணிப்பு 2024 LankaPay Technnovation விருதுகளில் பல பாராட்டுகளுடன் அங்கீகரிக்கப்பட்டது, ‘சிறந்த வாடிக்கையாளர் வசதிக்கான ஆண்டின் சிறந்த வங்கி’ விருதை வென்றது. டிஜிட்டல் கட்டண தீர்வுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை இந்த அங்கீகாரம் கௌரவிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் கருவிகள் மூலம்,...
China Unicom Beijing, Huawei Deploy...
Strong sectoral performances drive CIC’s...
JAAF welcomes 2026 Budget focus...
Sampath Bank Honoured at the...
Renewed diaspora optimism as the...
Green Cabin Marks Festive Season...
Mahindra Ideal Finance records 204%...
Renewed diaspora optimism as the...
Green Cabin Marks Festive Season...
Mahindra Ideal Finance records 204%...
දහසය වන ජාතික සයිබර් ආරක්ෂණ...