2021/2022 மற்றும் 2022/2023 ஆம் ஆண்டுகளில் சிறந்த ஏற்றுமதிக்கான விருது உட்பட 16 ஜனாதிபதி விருதுகளை வென்றுள்ள MAS Holdings

Share

Share

Share

Share

உலகளாவிய ஆடை மற்றும் ஜவுளி நிறுவனமான, MAS ஹோல்டிங்ஸ், அதன் துணை நிறுவனங்களான MAS Active Trading (Pvt) Ltd மற்றும் MAS Intimates (Pvt) Ltd ஆகியவற்றின் மகத்தான சாதனையை பாராட்டும் வகையில் 2021/22 மற்றும் 2022/23 ஆம் ஆண்டிற்கான பிரசித்திபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டது. இலங்கையின் ஏற்றுமதித் துறையில் நிறுவனத்தின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, MAS Active ஆனது 2021/22 மற்றும் 2022/23 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியாளர் (overall exporter of the year) விருதையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மிகவும் வரவேற்கப்படும் விருதுகளுடன், MAS Active மற்றும் Intimates இணைந்து, நிகழ்வில் மொத்தம் 16 விருதுகளைப் பெற்றன. இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு MAS இன் பங்களிப்புகளுக்கான இந்த அங்கீகாரம், நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு தொழில்துறை முன்னோடியாகவும் முக்கியமான பங்காளராகவும் கம்பனியின் நிலைப்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது.

குறிப்பிடத்தக்க இரட்டிப்பு வெற்றி – MAS Active Trading (Pvt) Limited

MAS Active (Active மற்றும் KREEDA பிரிவுகள்), 2021/2022 மற்றும் 2022/23 ஆகிய இரண்டிற்கும் இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியாளர் விருதை வென்று குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தது. 2021/22 காலப்பகுதியில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தைப் பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதியாளர் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் சிறந்த செயல்திறன் கொண்ட ஏற்றுமதியாளர் என்ற விருது வழங்கப்பட்டது. Active மேலும் ஆடைத் துறையில் மிகப்பெரிய பிரிவில் Merit விருதைப் பெற்றது.

MAS Active தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது மற்றும் ஏற்றுமதியின் நிலையான வளர்ச்சிக்கு பங்களித்ததற்காக பல விருதுகளை வென்றது, அத்துடன் ஆண்டின் புத்தாக்கமான ஏற்றுமதியாளர், வளர்ந்து வரும் சந்தைகளில் சிறந்த செயல்திறன் கொண்ட ஏற்றுமதியாளர் மற்றும் 2022/23 ஆம் ஆண்டிற்கான ஆடைத் துறை பெரிய அளவிலான பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதை வென்றது.

சிறந்த முன்னோடி – MAS Intimates Private Limited

2021/22 காலப்பகுதியின் போது, MAS Intimates ஏற்றுமதி களத்தில் இணையற்ற சிறப்பை வெளிப்படுத்தியது. இந்த ஆண்டுக்கான நிகர அந்நியச் செலாவணி சம்பாதிப்பாளருக்கான ஒட்டுமொத்த விருதையும் நிறுவனம் பெற்றது மட்டுமல்லாமல், தயாரிப்பு பல்வகைப்படுத்தலில் சிறந்த ஏற்றுமதியாளர் என்ற பெரிய பிரிவில் விருதையும் பெற்றது.

இந்த வெற்றியின் அடிப்படையில், MAS Intimates 2022/23 இல் அதன் சிறப்பான செயல்திறனை முன்னெடுத்துச் சென்றது. மீண்டும், நிறுவனம் இந்த ஆண்டின் நிகர அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொடுப்போருக்கான ஒட்டுமொத்த விருதைப் பெற்றது மற்றும் ஏற்றுமதி விநியோகச் சங்கிலிக்கான பிராந்தியங்களில் இருந்து பங்களிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டது. பாராட்டுக்களை ஒன்றிணைத்து, MAS Intimates, ஆடைத் துறை – பெரிய பிரிவில் மெரிட் விருதைப் பெற்றது, இது உலகளாவிய ஏற்றுமதி சந்தையில் ஒரு முக்கிய பங்காளராக அதன் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இந்த வெற்றிகள் இலங்கையின் ஏற்றுமதி துறையில் மறுக்கமுடியாத தலைவராக MAS இன் நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகளாவிய ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் என்ற வகையில், பல்வகையான வர்த்தகநாமங்களின் கோப்புறையுடன், MAS ஹோல்டிங்ஸ், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியிலும் பரந்த ஆடைத் தொழிற்துறையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

nVentures Emerges as Sri Lanka’s...
Sri Lanka’s Textile and Apparel...
Sunshine Holdings reports 11.6% YoY...
C Rugby තරඟාවලියට සියල්ල සූදානම්...
நிலையான வணிகத்தை வலுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின்...
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது...
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு...
Bring home Samsung’s 32-inch HD...
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது...
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு...
Bring home Samsung’s 32-inch HD...
HNB Finance இன் “திரியென் தியுனுவட்ட...