2022 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் சிறந்த பெருநிறுவன பிரஜையாக HNB முடிசூட்டப்பட்டது

Share

Share

Share

Share

பேண்தகைமை, சிறந்த நிர்வாகம் மற்றும் கூட்டுத்தாபன சிறப்புத்தன்மை ஆகியவற்றில் உண்மையான தலைமைத்துவத்தை ஒருங்கிணைத்த, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, மதிப்புமிக்க Ceylon Chamber of Commerce Best Corporate Citizen Sustainability Awards 2022 (CCC BCCSA) விருது வழங்கும் நிகழ்வில் ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான ‘Best Corporate Citizen Sustainability Award’இன் ஒட்டுமொத்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், HNB BCCSA 2022 விருது வழங்கும் நிகழ்வில் ஆதிக்கம் செலுத்தியது, சிறந்த 10 Corporate Citizens பட்டியலில் இடம் பிடித்தது உட்பட மேலும் 4 கௌரவிப்புக்களைப் பெற்றது – 13 ஆண்டுகளாக HNB இந்த கௌரவிப்பை அடைந்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
“கடந்த மூன்று வருடங்கள் எமது அமைப்பிற்கு சவால் விடுத்த, இலங்கையின் பொருளாதாரத்தின் நெகிழ்வுத்தன்மையானது எமது மக்களின் மனப்பான்மையை மீண்டும் மீண்டும் சோதித்துள்ளன. ஆயினும்கூட, எங்கள் நிறுவன இலக்குகளை அடைவதற்கான எங்கள் முயற்சிகளில், மிகவும் முக்கியமானவற்றை ஒருபோதும் இழக்காமல் இருக்க ஒரு சிறந்த முயற்சியை மேற்கொண்டோம்: அது குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்து எங்களுடைய பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நமது கூட்டுப் பொறுப்பாகும்.
“இன்னும் பல சவால்கள் எமக்கு முன்னால் இருந்தாலும், நாங்கள் இணைந்திருக்கும் சமூகங்கள், வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அதே வேளையில், செயல்பாட்டுச் சிறப்பைத் தொடர்ந்து செலுத்துவதற்கான எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். முன்னேற்றத்தில் இலங்கையின் பங்காளியாக நாங்கள் தொடர்ந்து சேவை செய்வோம் – அது சாதகமான நேரங்களிலும் சரி பாதகமான நேரங்களிலும்,” என HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய இலங்கையின் மாற்றத்தை ஆதரிப்பதில் அதன் அமைப்பு ரீதியான தேசிய பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக HNB நிதித் துறைக்கான பேண்தகைமை வல்லவனாக முடிசூட்டப்பட்டது மற்றும் அடிமட்ட-தலைமையிலான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது போலவே பல்முனை சுற்றுச்சூழல் மற்றும் சமூக பிரசாரங்களுக்கும் HNB பேண்தகைமை அறக்கட்டளை பங்களிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள சமூகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 2020 இல் ஆரம்பிக்கப்பட்ட ஊழியர் தலைமையிலான முதன்மையான Oba Venuwen Api முயற்சியும் இதில் அடங்கும். Hatna குடும்பம், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த 1,000 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஊட்டச்சத்து அமைப்பை தொடங்கியதோடு, அத்தியாவசிய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகிறது. வங்கியினால் வழங்கப்படும் 1,000 ரூபா வைப்புத்தொகையுடன் சிங்கிதி கிரிகெட்டியோ கணக்கை ஆரம்பிக்க ஒவ்வொரு தாயையும் ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கு நிலையான நிதி எதிர்காலத்தை வழங்க HNB மேலும் உறுதிபூண்டுள்ளது.
Oba Venuwen Api முன்முயற்சியின் விளைவாக 251 மைக்ரோநிதி வாடிக்கையாளர்களுக்கு மேலும் 25.1 மில்லியன் ரூபா மானியமாக வழங்கப்பட்டது. கோவிட் தொற்றுநோய் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறு சமூகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வணிகங்களின் மறுமலர்ச்சியை இந்த நிதி உறுதி செய்தது.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், மத்திய மாகாணத்தில் உள்ள உள்ளூர் விவசாயிகளுடன் இணைந்து, HNB தனது முன்னோடியான நிகழ்ச்சித் திட்டமான Saru Ge-Watte மேம்பாட்டுத் திட்டத்தையும் ஆரம்பித்தது. மற்றும் வங்கியின் பரந்த கிளை மற்றும் வாடிக்கையாளர் வலையமைப்பைப் பயன்படுத்தி, கடந்த ஆண்டு எரிபொருள் நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது, அவர்களின் உற்பத்திகளை விற்க புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கியது. மேலும், நகர்ப்புறங்களில் வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்துவதற்கும் பிராந்திய உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வங்கி பொருள் பங்களிப்பை வழங்கியது.
கூடுதலாக, HNB ஆனது, கடந்த 4 ஆண்டுகளாக வங்கி ஆதரித்து வரும் Project LIFE மூலம் 2.5 ஹெக்டேயர் பாழடைந்த நிலத்தை மீட்டெடுத்து நிர்வகிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியது. இதேபோல், HNB தனது ஊழியர்களிடையே சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்தை ஊக்குவிக்கும் HNB Walk The Talk போன்ற புதிய வேலைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Coca-Cola Sri Lanka launches Marvel-inspired...
The 99x Group Emerges as...
නොයොන් ලංකා ආයතනය ලේස් නිෂ්පාදනයේ...
Kaspersky expands Kids Cyber Resilience...
Chevron Lanka ஆனது Uber SL...
ஆடைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்:...
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC...
இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20...
ஆடைத் தொழிலின் மாற்றமடைந்து வரும் மாதிரிகள்:...
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC...
இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20...
GSCS International Ltd, with a...