2023 முதல் காலாண்டு Community Guidelines அமலாக்க அறிக்கையை வெளியிடுகிறது TikTok

Share

Share

Share

Share

குறும் வீடியோக்களுக்கான முன்னணி தளமான TikTok, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச் 2023) தனது சமீபத்திய சமூக வழிகாட்டுதல்கள் அமலாக்க (Community Guidelines Enforcement Report) அறிக்கையை வெளியிட்டுள்ளது, தவறான தகவலை எதிர்த்துப் போராடுவதற்கும் பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இடத்தை உருவாக்குவதற்கும் அதன் அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்துகிறது. பொறுப்புக்கூறல் மூலம் நம்பிக்கையைப் பெறுவதற்கும் அதன் சமூகத்திற்கு பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க சூழலைப் பேணுவதற்கும் TikTok இன் தற்போதைய உறுதிப்பாட்டை அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், உலகளவில் மொத்தம் 91,003,510 வீடியோக்கள் அகற்றப்பட்டன, இது TikTok இல் பதிவேற்றப்பட்ட அனைத்து வீடியோக்களிலும் சுமார் 0.6% ஆகும். இவற்றில், 53,494,911 வீடியோக்கள் தானியங்கி அமைப்புகள் மூலம் அகற்றப்பட்டன, அதே நேரத்தில் 6,209,835 வீடியோக்கள் மதிப்பாய்வுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டன.

உலகளவில், இளம் பாவனையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, 13 வயதுக்குட்பட்ட பாவனையாளர்களுக்கு சொந்தமானதாக ஐயப்படும் 16,947,484 கணக்குகளை TikTok நீக்கியுள்ளது. மேலும், முதல் காலாண்டில் 51,298,135 போலி கணக்குகள் அகற்றப்பட்டன, இது மோசடி நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான TikTok இன் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.

TikTok இன் சமூக வழிகாட்டுதல்கள் அனைத்து பாவனையாளர்களுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் உண்மையான அனுபவத்தை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்கைகள் அனைவருக்கும் மற்றும் அனைத்து வகையான உள்ளடக்கங்களுக்கும் பொருந்தும், அவற்றின் அமுலாக்கத்தில் நிலைத்தன்மையையும் சமத்துவத்தையும் உறுதி செய்ய TikTok முயற்சிக்கிறது.

TikTok அதன் சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை அடையாளம் காணவும், மதிப்பிடவும் மற்றும் நடவடிக்கை எடுக்கவும் புத்தாக்கமான தொழில்நுட்பம் மற்றும் மனித மதிப்பாய்வின் கலவையைப் பயன்படுத்துகிறது. Community Guidelines Enforcement அறிக்கையின் காலாண்டு வெளியீடு, நீக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் கணக்குகளின் அளவு மற்றும் தன்மை பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது, இது முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. முழுமையான 2023 முதல் காலாண்டு அறிக்கைக்கு, ஆங்கிலத்தில் கிடைக்கும் TikTok இன் Transparency Centreஐ பார்வையிடவும்.

TikTok இன் உள்ளடக்க Guidelines, Tools மற்றும் Policies பற்றி மேலும் அறிய, Community Guidelinesஐ பார்க்கவும்.

TikTok தொடர்பாக

குறுகிய வடிவ மொபைல் வீடியோவிற்கான முன்னணி இடமாக TikTok உள்ளது. எங்கள் நோக்கம் படைப்பாற்றலை ஊக்குவிப்பதும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதும் ஆகும். TikTok ஆனது லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், லண்டன், பாரிஸ், பெர்லின், துபாய், சிங்கப்பூர், ஜகார்த்தா, ஜோஹன்னஸ்பர்க், சியோல் மற்றும் டோக்கியோ உள்ளிட்ட உலகளாவிய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. www.tiktok.com

 

இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok...
Kaushala Amarasekara Honoured Among Top...
දකුණු ආසියානු සංචාරක සහ සුඛෝපභෝගී...
City of Dreams Sri Lanka...
MAS Holdings, AICPA සහ CIMA...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
ITC Ratnadipa to Launch ‘The...