2024 CFA Capital Market விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த முதலீட்டு உறவுகளுக்கான தங்க விருதை Sunshine வென்றது

Share

Share

Share

Share

பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான Sunshine Holdings அண்மையில் கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற CFA Society Sri Lanka Capital Market Awards நிகழ்வில் ‘சிறந்த முதலீட்டு உறவுக்கான’ (Mid to Large Market Capitalization Companies) தங்க விருதை வென்றது. இந்த மதிப்புமிக்க விருது Sunshine Holdingsஇன் எதையும் சமாளிக்கக்கூடிய தன்மை, வாய்ப்புகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயன்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான முதலீட்டு உறவுகளைப் பேணுதல் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 12 வருட Capital Market Awards நிகழ்வு வரலாற்றில் Sunshine Holdings நான்காவது தடவையாக இந்த விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பட்டய நிதி ஆய்வாளர்கள் சங்கம் (CFA Society Sri Lanka) ஏற்பாடு செய்த CFA Capital Market விருது வழங்கும் நிகழ்வானது அந்த சங்கத்தின் முக்கிய அங்கமாகும். ‘அரச-தனியார் உறவின் பலம்’ என்ற தொனிப்பொருளில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு இலங்கையின் தற்போதைய அரச-தனியார் கூட்டுறவின் நிலை மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தியது. சிறந்த சமபங்கு ஆராய்ச்சி குழு, சிறந்த சமபங்கு ஆராய்ச்சி அறிக்கை, சிறந்த கள ஆய்வு அறிக்கை, சிறந்த முதலீட்டு உறவுகள், சிறந்த அலகு நம்பிக்கை நிதி மற்றும் சிறந்த சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) அறிக்கையிடல் ஆகிய பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த முதலீட்டாளர் உறவுகளுக்கான CFA Capital Market விருதுகள் முதலீட்டாளர்களுடன் தீவிரமாக ஈடுபடும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன, முதலீட்டாளர்களுடன் திறந்த மற்றும் செயல்திறன் தொடர்புகளை ஊக்குவிக்கின்றன, மேலும் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டாளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன மற்றும் நிர்வகிக்கின்றன என்பதில் உயர் தரம் மற்றும் பயனுள்ள நடைமுறைகளை ஊக்குவிக்கின்றன. நிறுவனங்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன, பெருநிறுவனம் முதல் நடுத்தர சந்தை மூலதன நிறுவனங்கள் மற்றும் சிறிய சந்தை மூலதன நிறுவனங்கள், அவற்றின் முதலீட்டு உறவு முறைகள் மற்றும் அவை எவ்வாறு பதிலளிக்கின்றன. பங்குத் தரகு நிறுவனங்கள், நிதி நிர்வாகிகள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களைக் கொண்ட ஆய்வாளர்கள் குழு நடத்திய விரிவான கணக்கெடுப்பின் மூலம் இந்த நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நிறுவனங்கள் தங்கள் நிர்வகிப்பு எவ்வளவு அணுகக்கூடியது மற்றும் பதிலளிக்கக்கூடியது, அவர்களின் தகவல் வெளிப்படுத்தல்களின் தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை மற்றும் வெவ்வேறு பொருளாதார நிலைமைகளில் முதலீட்டு உறவுகளை எவ்வளவு சீராக நிர்வகித்தது ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த தங்க விருதை வென்றது, தொழில் தரத்தை உயர்த்துவதற்கும், இலங்கையின் மூலதனச் சந்தைகளில் சிறந்து விளங்குவதற்கும் Sunshine Holdingsஇன் வலுவான அர்ப்பணிப்புக்கு சிறந்த சான்றாகும். நான்கு தடவை தங்க விருதை வென்றது தவிர, நிறுவனம் இதற்கு முன்பு 2019 மற்றும் 2023 இல் வெள்ளி விருதுகளையும் 2015 இல் வெண்கல விருதுகளையும் வென்றுள்ளது.

இந்தச் சாதனை குறித்து கருத்து தெரிவித்த Sunshine Holdingsஇன் தலைமை வளர்ச்சி அதிகாரி (Chief Growth Officer) திரு. ஹிரான் சமரசிங்க, “CFA Capital Market விருது வழங்கும் நிகழ்வில் இந்த மதிப்புமிக்க தங்க விருதை வெல்ல முடிந்தமை பெரும் கௌரவமாகும். இந்த மதிப்பீடு, எங்கள் முதலீட்டாளர்களுடன் வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் செயலில்/செயல்திறன் வாய்ந்த தகவல் தொடர்புக்கான எங்கள் வலுவான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. Sunshineஇல் வலுவான முதலீட்டாளர் உறவுகள் எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இந்த விருது எங்கள் முழு குழுவின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது. முன்னோக்கிச் செல்லும்போது, எங்கள் நடவடிக்கைகள் மற்றும் தகவல்தொடர்புகளில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும், முதலீட்டு நிறுவனங்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் உயர்ந்த தரத்தை தொடர்ந்து பராமரிக்கவும் நாங்கள் பணியாற்றுவோம்.” என தெரிவித்தார்.

CFA Society Sri Lanka Capital Market Awards இலங்கையின் மூலதனச் சந்தைகளில் சிறந்த சாதனைகளை அங்கீகரித்துள்ளது. இந்த விருதுகள் சிறப்பான தரத்தை அமைத்து, இலங்கையின் மூலதனச் சந்தைகளின் எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்தும் இளம் தலைவர்களை அங்கீகரிப்பதற்கான சிறந்த தளத்தையும் வழங்குகிறது.

Sunshine Investment Relations குழுவின் தலைவராக திரு. ஹிரான் சமரசிங்க அவர்கள் இருப்பதுடன், நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வின் சிரேஷ்ட முகாமையாளர் திரு. கிரண ஜயவர்தன மற்றும் கூட்டுத்தாபன நிதி மற்றும் மூலோபாய முகாமையாளர் திரு. ஹசந்த மிரியகல்ல ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் தொடர்பாக

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. என்பது இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான சுகாதாரம், நுகர்வுப் பொருட்கள் மற்றும் விவசாய வணிகத்தில் பெறுமதியை உருவாக்குவதன் மூலம் ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு’ பங்களிக்கும் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமாகும்.

1967 இல் ஸ்தாபிக்கப்பட்ட குழுவானது, தற்போது இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்களான Zesta Tea, Watawala Tea, Ran Kahata, Daintee Confectionary மற்றும் Healthguard Pharmacy போன்றவற்றின் தாயகமாக உள்ளது, 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 55 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. மேலும் அந்த துறைகள் 2023 இல் “வேலை செய்வதற்கான சிறந்த இடம்” என்று சான்றளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் இருப்பின் நோக்கம் “நல்ல விஷயங்களை வாழ்க்கைக்கு கொண்டு வருவது” என்று நாங்கள் நம்புகிறோம், அதாவது, அனைத்து இலங்கையர்களுக்கும் தரமான மருந்துகள் மற்றும் நுகர்வோர் பொருட்களை மலிவு விலையில் கிடைக்கச் செய்வோம், இதன் மூலம் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வோம். எங்கள் வணிகத்தை நெறிமுறையோடு நடத்துவதற்கான எங்கள் உறுதிப்பாடு மற்றும் எங்கள் மதிப்புகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலமே எங்கள் வளர்ச்சி வரையறுக்கப்பட்டுள்ளது.

 

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC...
இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20...
GSCS International Ltd, with a...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...