இலங்கையில் நீரிழிவை கட்டுப்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதற்காக யூனியன் அஷ்யூரன்ஸ் ‘சுவமக நடமாடல் இனங்காணல் அலகு’ அறிமுகம்
கொழும்பு, இலங்கை – 27 நவம்பர் 2024: இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான சுவமக ஊடாக, சமூகத்தின் நலனுக்கு வளமூட்டும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது. இலங்கையில் அதிகரித்துச் செல்லும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கும் வகையில், தனது வர்த்தக நாம நோக்கமான வாழ்க்கையை பாதுகாத்தல் மற்றும் அனைவரின் நலனுக்கும் வளமூட்டல் என்பதற்கமைவாக, சுவமக திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. நீரிழிவு தொடர்பில் […]