“2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த வங்கியாக” கௌரவிக்கப்பட்டது HNB

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, ஐக்கிய இராச்சியத்தின் (UK) “The Banker” சஞ்சிகையினால் வழங்கப்படும் மதிப்புமிக்க Bracken விருதை “2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த வங்கி” என்ற வகையில் பெற்றுள்ளது.

லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் Financial Times வெளியீடு, வங்கியின் பலம் மற்றும் நாட்டின் மிகவும் மீள்தன்மை கொண்ட, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட நிதி நிறுவனங்களில் ஒன்றாக அதன் நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், HNB PLCக்கு மதிப்புமிக்க “The Banker” விருதை வழங்கி கௌரவித்தது.

The Banker சஞ்சிகையின் வருடாந்த விருதுகள், உலகளாவிய வங்கிகளை அவற்றின் நிதி பலம், புத்தாக்கம், ஆளுகை மற்றும் நீண்ட கால மூலோபாய செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்கின்றன. சவாலான செயற்பாடும் சூழல் இருந்தபோதிலும், HNB தனது நிதிநிலை அறிக்கை ஆரோக்கியம், வாடிக்கையாளர் தீர்வுகள் மற்றும் செயற்பாட்டுத் திறன் ஆகியவற்றில் சீரான முன்னேற்றத்தை வழங்கி தொடர்ச்சியாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த கௌரவப்படுத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த, “தேசிய மீட்சிக்கும் நீண்ட கால வளர்ச்சிக்கும் ஒத்துழைக்கும் ஒரு வங்கியாக நாங்கள் அடையும் முன்னேற்றத்தை இந்த விருது அங்கீகரிக்கின்றது. எமது கவனம், நிதிநிலை அறிக்கை ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துதல், சேவை நம்பகத்தன்மையை மேம்படுத்துதல், அத்துடன் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் முன்னேற உதவும் டிஜிட்டல் மற்றும் ஆலோசனைத் தீர்வுகளை விரிவுபடுத்துதல் என்பவற்றில் உள்ளது. ஒவ்வொரு வெற்றியும் எமது குழுக்களின் ஒழுக்கமான செயலாக்கத்தினாலும் அத்துடன் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளிகள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையினாலும் விளைந்ததாகும்.” என தெரிவித்தார்.

வலுவான மூலதனம் மற்றும் பணப்புழக்க தன்மை நிலை, சொத்துத் தரத்தில் மேம்பாடுகள், SME மற்றும் பரிவர்த்தனை வங்கிச் சேவைகளில் வளர்ச்சி, மற்றும் வங்கியின் டிஜிட்டல் தளங்களை அதிகளவில் மக்கள் ஏற்றுக்கொண்டமை போன்றவை HNBக்கு ஒரு வருடத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனைகளைக் கொண்ட ஆண்டாக அமைந்திருந்தது. மேலும், HNB இன் முதலீட்டு வங்கிச் சேவைகள் திறன்களை விரிவுபடுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், HNB Investment Bankஇன் எஞ்சிய 50% பங்குகளை வெற்றிகரமாகக் கையகப்படுத்தியமை ஒரு முக்கிய அம்சமாகும். போட்டித்திறன் மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்ட கடன் வழங்கல், ஆலோசனை ஆதரவு மற்றும் பங்காளித்துவங்கள் மூலம் பொருளாதரத்தின் முக்கிய துறைகளுக்கு வங்கி தொடர்ந்து ஆதரவளித்தது.

செயல்முறை மறுவடிவமைப்பு, தரவு அடிப்படையிலான முடிவெடுத்தல், அத்துடன் கிளைகள் மற்றும் டிஜிட்டல் தொடுபுள்ளிகள் (digital touchpoints) முழுவதும் வாடிக்கையாளர் அனுபவத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் மூலம் HNB தனது செயற்பாட்டு மீள்திறனையும் வலுப்படுத்தியது. இந்த முயற்சிகள், மிகவும் நிலையான செயல்திறன் குறிகாட்டிகளுக்கும் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான அதிக சுறுசுறுப்பான அடித்தளத்திற்கும் பங்களித்துள்ளன.

இலங்கையின் நிதித் துறை நவீனமயமாக்கப்பட்ட சேவைகள் மற்றும் அதிக வெளிப்படையான ஆளுகையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், HNB நீண்ட கால ஸ்திரத்தன்மை, டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கம் ஆகியவற்றுக்கு அர்ப்பணிப்புள்ள ஒரு வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ‘The Banker’ சஞ்சிகையினால் வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம், இந்த நிறுவனத்தை பிராந்தியத்தின் மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட வங்கிகளில் ஒன்றாக நிலைநிறுத்துகிறது, அத்துடன் நாட்டின் பொருளாதாரப் பாதையை ஆதரிப்பதில் அதன் தொடர்ச்சியான பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.

අටාලේ ශ්‍රී ලංකාවේ විශාලතම රබර්...
2025 மூன்றாம் காலாண்டில் 20 கோடிக்கும்...
கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில், தனது...
CINEC Celebrates 1,800 Graduates and...
Sunshine Holdings to Acquire 75%...
සොෆ්ට්ලොජික් ලයිෆ්, Norfund සහ OP...
Sri Lanka Chamber of the...
Felix Fernando elected Chairman of...
සොෆ්ට්ලොජික් ලයිෆ්, Norfund සහ OP...
Sri Lanka Chamber of the...
Felix Fernando elected Chairman of...
அட்டாலே எஸ்டேட்: இலங்கையின் மிகப்பெரிய ரப்பர்...