உலகளாவிய ஆடை தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், சமீபத்தில் நிறைவடைந்த 2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில், ஆடை மற்றும் ஜவுளித் துறைகளில் பல கௌரவங்களைப் பெற்று, மிகவும் பாராட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது.
மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க அவர்களின் ஆதரவின் கீழ், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான தொழில்துறை நடைமுறைகளுக்கு விதிவிலக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய பொது மற்றும் தனியார் நிறுவனங்களைப் பாராட்டுகின்றன.
சுற்றுச்சூழல் செயல்திறன் மற்றும் இணக்கத்தன்மையில் அவற்றின் தலைமைத்துவத்திற்காகப் பல வணிக அலகுகள் அங்கீகரிக்கப்பட்டதன் மூலம், MAS இந்த ஆண்டு அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜவுளி மற்றும் ஜவுளிப் பதப்படுத்தும் தொழில்துறை பிரிவில் (வகை A & B), MAS Active Linea Intimo தங்க விருதையும், MAS Kreeda Vaanavil வெள்ளி விருதையும், Silueta வெண்கல விருதையும் பெற்றன. ஆடைத் தொழில்துறை பிரிவில் (வகை A & B), MAS Kreeda Shadeline மற்றும் MAS Intimates Thurulie ஆகியவை வெள்ளி விருதுகளைப் பெற்றன, MAS Active Contourline வெண்கல விருதைப் பெற்றதுடன், MAS Kreeda Balangoda, Merit Award வழங்கப்பட்டது.
மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தின் (EPL) கட்டமைப்பின் கீழ் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன, இது தொழில்களை அவற்றின் சாத்தியமான சுற்றுச்சூழல் தாக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்துகிறது. வகை A மற்றும் B தொழில்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பிரிவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன, எனவே அவை கடுமையான இணக்கத் தேவைகளுக்கு உட்பட்டவை. இந்தக் கட்டமைப்பானது பெரிய அளவிலான தொழில்துறை வசதிகள் தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அளவுருக்களுக்குள் செயல்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சாதனைகள் குழுமத்தின் ‘மாற்றத்திற்கான திட்டம்’ (Plan for Change) கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலைத்தன்மை உறுதிப்பாடுகளுடன் நெருக்கமாக ஒத்துப்போகின்றன. இந்தக் கட்டமைப்பு, கார்பன் வெளியேற்றறத்தைக் குறைத்தல், வளங்களின் செயல்திறனை வலுப்படுத்துதல் மற்றும் வட்ட உற்பத்தி ஆகியவற்றை மேம்படுத்துதல் போன்ற தெளிவான இலக்குகளை வகுக்கிறது. MAS சமீபத்தில் ‘மாற்றத்திற்கான திட்டம் 2030’ ஐ அறிமுகப்படுத்தியது. இது, அதன் முந்தைய உறுதிப்பாடுகளின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘தயாரிப்பு’, ‘வாழ்க்கை’ மற்றும் ‘புவி’ ஆகிய காரணிகளில் புதுப்பிக்கப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கும் ஒரு புதுப்பிக்கப்பட்ட ஐந்தாண்டு கால திட்டமாகும்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள், பொது மற்றும் தனியார் துறைகளில் சுற்றுச்சூழல் செயல்திறனுக்கான இலங்கையின் மிக உயர்ந்த அங்கீகாரங்களில் ஒன்றாகும். MAS ஐப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டுக்கான இந்த விருதுகள், நிலைத்தன்மையை வணிகத்தின் மையத்தில் உட்பொதிக்கும் நீண்ட காலப் பயணத்தில் ஒரு மற்றொரு படிநிலையைக் குறிக்கின்றன. இது பொறுப்பான வளர்ச்சி மற்றும் தேசிய மேம்பாட்டிற்கான குழுமத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.




