2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு இந்த ஆண்டு 16வது முறையாக நடைபெற உள்ளது, மேலும் TikTok நிறுவனம் SL CERT உடன் ஓன்லைன் பாதுகாப்பு தொடர்பான அதன் மூலோபாய பங்காளியாக கைகோர்த்துள்ளது. இந்த உச்சி மாநாடு இந்த மாதம் (நவம்பர்) 12 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இலங்கையில் சைபர் பாதுகாப்பு குறித்த முதன்மையான தேசிய நிகழ்வாகக் கருதப்படும் வருடாந்திர உச்சிமாநாடு, அரசு நிறுவனங்கள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் உலகளாவிய சிந்தனையாளர்களை ஒன்றிணைக்கும். அவர்கள் வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிப்பார்கள், அறிவைப் பகிர்ந்து கொள்வார்கள் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான உத்திகளை ஆராய்வார்கள்.
டிஜிட்டல் இருப்பை வளர்ப்பது, ஒன்லைன் பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் விழிப்புணர்வு மற்றும் ஒத்துழைப்பு மூலம் சமூகங்களை மேம்படுத்துவதில் அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், ஓன்லைன் பாதுகாப்பிற்கான அதன் மூலோபாய கூட்டாளியாக TikTok இணைகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில், டிஜிட்டல் குடியுரிமையை மேம்படுத்துவதற்கும், பாவனையாளர்களைப் பாதுகாப்பதற்கும், இளைஞர்களை மேம்படுத்துவதற்கும் அதன் உலகளாவிய மற்றும் உள்ளூர் முயற்சிகளை TikTok முன்னிலைப்படுத்தவுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த TikTokஇன் தெற்காசியாவிற்கான அரச உறவுகள் மற்றும் பொதுக் கொள்கைத் தலைவர் திரு. ஃபிர்டோஸ் மோட்டகின், “இந்த ஆண்டு தேசிய சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ஒன்லைன் பாதுகாப்பு என்பது அனைவரின் பணியாகும். அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நேர்மறையான இணைய அமைப்பை வளர்ப்பதற்காக அரசாங்கங்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த SL CERT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் கனிஷ்க கருணாசேன, “டிஜிட்டல் யுகத்தில் குடிமக்களைப் பாதுகாக்க பல்வேறு துறைகள் மற்றும் நாடுகள் இடையே ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இந்த நிகழ்விற்கான TikTokஇன் ஒத்துழைப்பு ஒன்லைன் பாதுகாப்பில் சர்வதேச அனுபவத்தைப் பெற உதவும். இலங்கையர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சைபர் திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான ஒன்லைன் இடத்தை உருவாக்குதல் என்ற எங்கள் குறிக்கோளுடன் TikTokஇன் ஈடுபாடு நன்கு ஒத்துப்போகிறது.” என தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் SL CERT|CC, 2006 முதல் இலங்கையின் தேசிய சைபர் பாதுகாப்பு திட்டங்களை வழிநடத்தி வருகிறது. இந்த சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு, அதன் முதன்மையான வருடாந்த திட்டங்களில் ஒன்றாக, கொள்கை உரையாடல் மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கு மிகவும் முக்கியமானது.
இந்த ஆண்டு, நிபுணர் கலந்துரையாடல்கள், முக்கிய உரைகள், AI அடிப்படையிலான அச்சுறுத்தல் கண்டறிதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம், படைப்பாற்றல், இணைப்பு மற்றும் வளர்ச்சிக்கு இணையத்தை பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இடமாக மாற்றுவதற்கான அதன் நீண்டகால நோக்கத்தை TikTok மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





