2025 Fintech மாநாட்டில் HNB Accept என்ற புதிய மொபைல் கொடுப்பனவு முறையை அறிமுகம் செய்யும் HNB

Share

Share

Share

Share

கொழும்பு, செப்டம்பர் 23, 2025 – இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Visa நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் HNB மொபைல் வங்கிச் செயலியில் HNB Accept எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொருத்தமான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் பாதுகாப்பான மொபைல் விற்பனை மையங்களாக (mPOS) மாற்றப்பட்டு, ஒவ்வொரு HNB வாடிக்கையாளரும் எளிதாக டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களைப் பெற முடியும்.

2025 இலங்கை ஃபின்டெக் உச்சிமாநாட்டின் அங்குரார்ப்பண விழாவில் இப்புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இலங்கை அரசின் உயர் அதிகாரிகளும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதந்த மதிப்புமிக்க ஃபின்டெக் துறை நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

இந்த அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரத்ன கருத்து தெரிவிக்கையில், “இலங்கையை ஃபின்டெக் மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்றத் துறைகளில் உலக அரங்கில் முன்னணி நாடாக மாற்றும் எங்களது தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளித்தமைக்காக HNB மற்றும் Visa நிறுவனங்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இத்தகைய புத்தாக்க முயற்சிகள் இலங்கைப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டவை. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தொழில்முனைவோர்கள் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய உதவுகின்றன. இது நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, நமது நாட்டின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பரந்த அளவில் பங்கேற்பை விரிவுபடுத்துகிறது,” என்று தெரிவித்தார்.

இப்புதிய தொழில்நுட்பம் Visa Accept தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதல் வன்பொருள் எதுவும் தேவையில்லை. அனைத்து இலங்கையர்களுக்கும், குறிப்பாக நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வீட்டிலிருந்து செயல்படும் தொழில்முனைவோர் மற்றும் பெண்கள் தலைமையிலான வணிகங்களுக்கும் குறைந்த செலவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகளை பெரிய அளவில் அணுகும் வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய அறிமுகம் குறித்து HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த கருத்து தெரிவிக்கையில், “பல தசாப்தங்களாக, HNB வங்கி மாற்றத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. டிஜிட்டல் மாற்றத்தை ஏற்றுக்கொண்ட முதல் இலங்கை வங்கிகளில் ஒன்றாக, எமது தொழில்நுட்ப உட்கட்டமைப்பை வலுப்படுத்த நாங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்துள்ளோம். HNB Accept-இன் அறிமுகம் இந்தப் பயணத்தில் மற்றொரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. இது இலங்கை டிஜிட்டல் வர்த்தகத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பதை மாற்றியமைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எந்தவொரு கையடக்கத் தொலைபேசியையும் பாதுகாப்பான பணப்பரிமாற்ற ஏற்பு சாதனமாக மாற்றுவதன் மூலம், நிதி அமைப்பின் அணுகுமுறையை மிகச் சிறிய நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கும் விரிவுபடுத்துகிறோம். இது போன்ற புத்தாக்கங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படும்போது, நிதி உள்ளடக்கம் மற்றும் தொழில்முனைவுக்கு இடையேயுள்ள தடைகளை அகற்றி, பொருளாதாரத்தின் ஒவ்வொரு நிலையிலும் வலுவான தன்மையை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் தெரிவித்தார்.

HNB Accept மூலம், தகுதிவாய்ந்த HNB Visa வாடிக்கையாளர்கள் மொபைல் வங்கி செயலியில் விற்பனையாளர் சுயவிபரத்தை விரைவாக செயல்படுத்தி, Tap-to-Phone அல்லது Pay-by-Link வழியாக டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்கலாம். அனைத்துப் பரிவர்த்தனைகளும் Visa வலையமைப்பின் வழியாகச் செயலாக்கப்பட்டு, பணம் கிட்டத்தட்ட உடனடியாகத் தீர்வு செய்யப்படுகிறது. அதேவேளை, உள்ளமைக்கப்பட்ட பரிவர்த்தனை வரம்புகள் மற்றும் அங்கீகார முறைகள் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் பாதுகாப்பான கொடுப்பனவை உறுதி செய்கின்றன.

HNB உடன் இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்புதிய சேவை தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் அவன்தி கொலம்பகே கருத்து தெரிவிக்கையில், “Visa Accept சிறு வணிகர்கள் மற்றும் வீட்டில் இருந்து இயங்கும் வணிகங்களுக்கு பாரம்பரிய டிஜிட்டல் வர்த்தகத் தடைகளை அகற்றி அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்வை HNB-இன் நம்பகமான மொபைல் வங்கித் தளத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், பணப்பரிமாற்ற ஏற்புத் தன்மையை எளிமையாகவும், பாதுகாப்பாகவும், விரிவாக்கத்திற்கு ஏற்றதாகவும் மாற்றியுள்ளோம். இந்த அறிமுகம் புத்தாக்க மையமாக இலங்கையின் மீதும், சந்தைக்கு நிதித் தொழில்நுட்பத்தை வழங்குவதில் HNB-இன் தலைமைத்துவத்தின் மீதும் எங்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.” என்று கூறினார்.

HNB Accept-இல் உள்ள அனைத்துப் பரிவர்த்தனைகளும் Visa வலையமைப்பில் உடனடியாக செயலாக்கப்பட்டு, விற்பனையாளர்கள் தங்கள் வருமானத்தை உடனே பெற முடியும். முன் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் மற்றும் பலமான அங்கீகார முறைகள் பாதுகாப்பான வர்த்தகச் சூழலை உருவாக்குகின்றன. குறுகிய பண ஓட்டத்தில் இயங்கும் நுண் வணிகர்களுக்கு இந்த உடனடித்தன்மை மிகவும் முக்கியமானது. இது அன்றாட செயல்பாடுகளைத் தொடர்வதற்கும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் இடையேயான வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

Softlogic Life Grows 29% with...
TikTok Launches Time and Well-being...
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன்...
Sri Lanka Targets Inclusive Economic...
2025 SLIM ජාතික විකුණුම් සම්මාන...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
Global Talent Competes to Solve...