2026 ஆசிய விளையாட்டு விழா: இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடைகளை அறிமுகம் செய்தது MAS

Share

Share

Share

Share

ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டுப் விழாவில் பங்கேற்கும் இலங்கை தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ விளையாட்டு ஆடைகளை, அதன் உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளரான ‘எம்ஏஎஸ் ஹோல்டிங்ஸ்’ (MAS Holdings) நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 20ஆவது ஆசிய விளையாட்டு விழா இம்மாதம் 19 ஆம் திகதி முதல் அக்டோபர் 4 ஆம் திகதி வரை ஜப்பானின் அய்ச்சி மாகாணம் மற்றும் நகோயா நகரங்களில் நடைபெறவுள்ளன. அந்த வகையில், தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஆசிய விளையாட்டு விழாவுக்கான ஆடைகள், கொழும்பில் உள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் டங்கன் வைட் கேட்போர்கூடத்தில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளர் என்ற வகையில், வில்வித்தை, தடகளம், பெட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், துடுப்புப் படகோட்டம், ரக்பி, பாய்மரப் படகோட்டம், ஸ்குவாஷ், சர்ஃபிங், மேசைப்;பந்து, கடற்கரை கரப்பந்தாட்டம், பளுதூக்குதல், மல்யுத்தம், ஹொக்கி, கூடைப்பந்து, வூசு மற்றும் கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கு MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆடைகளை வழங்கவுள்ளது.

ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வேறு விதமான உடல் அசைவுகள், சௌகரியம் மற்றும் பல்வேறு தேவைகள் என்பவற்றை கருத்தில் கொண்டு, இலங்கை அணியின் தனித்துவமான அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆடைகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த முழுமையான தொகுப்பில் நான்கு வகையான ஆடைகள் அடங்கியுள்ளன. பயிற்சிகள், போட்டிகள் மற்றும் பதக்க மேடை நிகழ்வுகள் வரை அனைத்து தருணங்களுக்கும் ஏற்ற வகையில் சாதாரண ஆடை (Casual), பதக்க மேடை ஆடை (Podium), பயண ஆடை (Travel) மற்றும் விளையாட்டுக்கேற்ற செயல்திறன் ஆடை (Performance Kits) என நான்கு பிரிவுகளில் இந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் அலைகளின் ஓட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அலைகளின் தொடர்ச்சியான அசைவும், ஆற்றலும் இலங்கை வீரர்களின் வேகம், விடாமுயற்சி மற்றும் மன உறுதியை இந்த ஆடைகள் பிரதிபலிக்கின்றன.

இது குறித்து MAS Holdings நிறுவனத்தின் Bodywear பிரிவின் தயாரிப்பு புத்தாக்கத்துறை பணிப்பாளர் அரோஷ் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், “எங்கள் வடிவமைப்பு மற்றும் புத்தாக்க குழுக்கள், தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து வீரர்களின் செயல்திறனை மேம்படுத்தும் வகையிலும், இலங்கையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த ஆடைகளை உருவாக்கியுள்ளன. எமது நாட்டைச் சுற்றியுள்ள கடல் அலைகளின் ஆற்றல், விளையாட்டு வீரர்கள் இந்த ஆசிய விளையாட்டு விழாவிற்கு கொண்டு செல்லும் வேகம் மற்றும் உறுதியின் பொருத்தமான வெளிப்பாடாக அமைந்தது. எனவே எமது நாட்டின் பெருமையை சர்வதேச அரங்கில் பறைசாற்றும் வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டார்.

உலகின் முன்னணி விளையாட்டு ஆடை உற்பத்தியாளர்களில் ஒன்றான MAS, பல ஆண்டுகளாக தனது நிபுணத்துவத்தை பல்வேறு விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த தேசிய அணிகளுக்கு வழங்கி வருகிறது.

இந்த நிலையில், MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் Bodywear பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் தர்மேந்திர கருத்து தெரிவிக்கையில், ‘நிச்சயமாக, இது உற்பத்தி திறன் மற்றும் நிபுணத்துவம் பற்றியது மட்டுமல்ல. எங்களைப் பொறுத்தவரை இது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு சார்ந்ததும் ஆகும், ஒரு நிறுவனமாக, உள்ளூர் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்த ஆதரவளிக்க நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். ஆடைகள் அவர்களின் சாதனைகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும், எனவே, அதை வழங்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்றார்.

இலங்கையின் விளையாட்டுத் துறையில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் மாஸ் ஹோல்டிங்ஸ MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம், சர்வதேச அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை ஊக்குவிப்பதில் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது.

Huawei Cloud Named a Leader...
Softlogic Life Pioneers AI-Powered Corporate...
විබ්මෝ වංචා සහ අවදානම් කළමනාකරණ...
A Milestone Achievement: Barista Coffee...
ஜனசக்தி லைஃப், வாழ்வைப் பாதுகாத்து, நம்பிக்கையைக்...
Darin Leads Sri Lanka’s Powerlifting...
2026 Calin Popular Awards மற்றும்...
Sumathi IT Marks 25 Years...
Darin Leads Sri Lanka’s Powerlifting...
2026 Calin Popular Awards மற்றும்...
Sumathi IT Marks 25 Years...
ஜனசக்தி லைஃப், யாழ்ப்பாணத்தில் சமூக ஈடுபாட்டை...