2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.6% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Share

Share

Share

Share

சன்ஷைன் ஹோல்டிங்ஸ், 2026 நிதியாண்டில் வலுவான செயல்திறன் மற்றும் வரிக்குப் பின் இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் பல்துறை நிறுவனங்களைக் கொண்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமம், 2026 நிதியாண்டின் (FY26) முதல் காலாண்டில் 15.9 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.6% வளர்ச்சியை காட்டுகிறது. மேலும், வரிக்குப் பின் இலாபம் (PAT) 20.6% அதிகரித்து 1.7 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. சிறந்த பொருளாதார நிலைமைகள் மற்றும் நுகர்வோர் செயல்பாடுகள் அதிகரிப்பு காரணமாக, சன்ஷைன் குழுமம் அதன் முக்கியத் துறைகளான சுகாதார சேவைகள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் விவசாய வணிகங்களில் நிலையான வளர்ச்சியைத் தொடர்ந்து காட்டியுள்ளது.

குழுமத்தின் இந்த உயர்ந்த வளர்ச்சிக்கு சுகாதாரப் பிரிவு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது, இது மொத்த வருவாயில் 54.2% ஆகும். இதற்கிடையில், நுகர்வோர் பிரிவு 30.1% மற்றும் விவசாய வணிகப் பிரிவு 15.7% வருவாயில் பங்களித்துள்ளது. மொத்த இலாபம் (Gross Profit) கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 22.3% அதிகரித்து 5.1 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. மொத்த இலாப விகிதம் (Gross Profit Margin) 277 அடிப்படைப் புள்ளிகள் (bps) அதிகரித்து 31.8% ஆக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு விவசாய வணிகம் மற்றும் நுகர்வோர் பிரிவுகளின் உயர் இலாப விகிதங்களே முக்கிய காரணமாகும்.

சன்ஷைன் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஷியாம் சதாசிவம் இந்த நிதி முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு மேற்கொண்ட மூலோபாய முதலீடுகளின் மூலம், வருவாய் மற்றும் இலாபத்தில் கணிசமான வளர்ச்சியை ஈட்டியுள்ளோம். இது 2026 நிதியாண்டிற்கான வலுவான ஆரம்பத்தைக் குறிக்கின்றது.

பொருளாதாரத்தின் முன்னேற்றம் மற்றும் நுகர்வோர் செலவினங்கள் படிப்படியாக சீராகி வருவது எங்கள் இந்த நிதி முடிவுகளில் பிரதிபலிக்கிறது. குறிப்பாக சுகாதார சேவைத் துறை, குழுமத்தின் இந்த நிதி முடிவுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. மேலும், நுகர்வோர் துறை படிப்படியாக சீரடைவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. எனவே, அதை கருத்தில் கொண்டு எங்கள் வணிக வர்த்தக நாமங்களை மேம்படுத்துதல், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் பிற சந்தைகளுக்கான ஏற்றுமதியை விரிவுபடுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறோம். நிலையான விலை மற்றும் செலவு நிர்வகிப்பு போன்ற காரணிகளால் விவசாயத் துறையும் தொடர்ச்சியான வலுவான வளர்ச்சியை காட்டுகிறது. மொத்தத்தில், குழுமம் மூலோபாய முதலீடுகளை மேற்கொள்வதன் மூலமும், செயல்பாட்டு வலிமையை பராமரிப்பதன் மூலமும் நீண்டகால மதிப்பை உருவாக்குவதில் அர்ப்பணித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

சுகாதாரப் பிரிவு
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில், குழுமத்தின் சுகாதாரப் பிரிவு Q1-ல் 8.6 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 14% குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டுகிறது. இந்த வளர்ச்சிக்கு பின்வரும் துறைகளில் இருந்தான வருவாய் பங்களிப்பு செலுத்தியுள்ளது, Healthguard Distribution, மருத்துவ உபகரணங்கள், மருந்தகம் மற்றும் மருந்து உற்பத்தி, முக்கிய வளர்ச்சி குறிகாட்டிகளாகும். மருந்து விநியோகத் துறை 26.7% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் துறை 17.2% வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த காலாண்டில், Healthguard Distribution அதன் வணிக மாதிரியில் மாற்றங்கள் மற்றும் புதிய மூலோபாய கூட்டுப்பணிகளின் மூலம் 44.5% வருவாய் வளர்ச்சியை (YoY) அடைந்துள்ளது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில், ஹெல்த்கார்ட் ஃபார்மசி 17.4% வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இருப்பினும், அரசாங்கத்தின் மருந்து விநியோக கால அட்டவணையில் ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக, குழுமத்தின் மருந்து உற்பத்தி நிறுவனமான லீனா மேனிஃபேக்சரிங் (தனியார்) நிறுவனத்தின் வருவாய் 19.6% குறைந்துள்ளது.

நுகர்வோர் பிரிவு
FY26 முதல் காலாண்டில், நுகர்வோர் பிரிவு கடந்த ஆண்டை விட 3.7% வளர்ச்சி அடைந்து 4.8 பில்லியன் ரூபா வருவாயை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் ஏற்பட்ட விரிவாக்கம் முக்கிய காரணமாக இருந்தது. உள்நாட்டு நுகர்வோர் வணிகம் கடந்த ஆண்டை விட 4.5% வருவாய் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் இனிப்பு மற்றும் ஸ்னாக்ஸ் பிரிவு குறிப்பிடத்தக்க 19.9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சிறந்த வர்த்தக நாமம் கொண்ட தேயிலைத் தயாரிப்பு விற்பனை அளவு மற்றும் மதிப்பு இரண்டிலும் சிறிய அளவில் வளர்ச்சி காணப்பட்டது. ஏற்றுமதி வணிகம் நன்கு செயல்பட்டு, கடந்த ஆண்டை விட 7.2% வருவாய் அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

விவசாய வணிகப் பிரிவு
குழுமத்தின் விவசாய வணிகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டவளை பெருந்தோட்ட நிறுவனம் FY26 முதல் காலாண்டில் 2.5 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 20.7% குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டுகிறது. ஃபாம் ஒயில் வணிகம் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியது. சாதகமான விலை நிர்ணயம் மற்றும் விற்பனை அளவு அதிகரிப்பு காரணமாக ஆண்டுக்கு ஆண்டு 27.2% வருவாய் வளர்ச்சியை பதிவு செய்தது. பால் சார்ந்த வணிகம் 278.5 மில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 14.6% வீழ்ச்சியாகும். வருவாய் குறைந்திருந்தாலும், FY26 Q1-ல் EBIT விளிம்பு (வட்டி மற்றும் வரிக்கு முன் இலாபம்) கடந்த ஆண்டின் 38.8% ஐ விட 48.8% ஆக உயர்ந்துள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு ஃபாம் ஒயில் துறையின் வலுவான வருவாய் வளர்ச்சி மற்றும், ஃபாம் ஒயில் வணிகத்தின் திறமையான செலவு நிர்வாகமே காரணமாகும்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பற்றிய விளக்கம்
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. என்பது இலங்கை பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான சுகாதாரம், நுகர்வுப் பொருட்கள் மற்றும் விவசாய வணிகத்தில் பெறுமதியை உருவாக்குவதன் மூலம் ‘தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு’ பங்களிக்கும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமாகும்.

1967 இல் ஸ்தாபிக்கப்பட்ட குழுவானது, தற்போது இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்களான Zesta Tea, Watawala Tea, Ran Kahata, Daintee Confectionary மற்றும் Healthguard Pharmacy போன்றவற்றின் தாயகமாக உள்ளது, 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ளதுடன், 24/25 நிதியாண்டில் 59.3 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. வணிக அலகுகளில் சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா, Sunshine Consumer Lanka மற்றும் வட்டவளை பிளாண்டேஷன்ஸ் பி.எல்.சி ஆகியவை உள்ளடங்கும், அவை அவற்றிற்குரிய துறைகளில் முன்னணியில் உள்ளன, மேலும் அவற்றிற்கு 2024 இல் “வேலை செய்ய சிறந்த இடம்” என்று சான்றளிக்கப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Softlogic Life launches future-ready Learning...
HNB 24/7 පැයේ නව පාරිභෝගික...
John Keells CG Auto පුද්....
TikTok releases Q1 2025 Community...
පහසු වාහන ලීසිං විසඳුම් ලබා...
ශ්‍රී ලංකාවේ රෙදිපිලි හා ඇඟලුම්...
2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.6%...
ශ්‍රී ලංකාවේ විශ්වාසදායී සූර්ය පැනල...
ශ්‍රී ලංකාවේ රෙදිපිලි හා ඇඟලුම්...
2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.6%...
ශ්‍රී ලංකාවේ විශ්වාසදායී සූර්ය පැනල...
TikTok தளத்தில் குறைந்த செலவில் சுற்றுலா...