300க்கும் மேற்பட்டவர்களின் பங்கேற்புடன் சுவ திவிய நிறுவனத்தின் முதலாவது பொது நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது

Share

Share

Share

Share

நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமான Suva Diviya நிறுவனம், இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தினால் “Unmask Diabetes” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒரு சிறப்பு பொது நிகழ்ச்சியை நடத்தியது, இதில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும்.

இலங்கையில் நீரிழிவு நோய் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது, அத்துடன் 30% பேருக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய அபாயம் உள்ளது. நகரத்தில் வசிக்கும் இளைஞர்களிடையே நீரிழிவு நோய் வேகமாக அதிகரித்து வருவதால் இந்த நிலைமை அதிக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனையாக மாறியுள்ளது.

மேலும் உடற்பயிற்சியின்றி அவர்களின் செயலற்ற வாழ்க்கை முறை இந்த சிக்கலை அதிகப்படுத்துகிறது மற்றும் இது நாட்டின் பணியாளர்களை நேரடியாக பாதிக்கிறது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், இந்த நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள், சுமார் ஒரு மில்லியன், தங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என்று தெரியாதுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரபல நாளமில்லாச் சுரப்பியியல் நிபுணரும் உட்சுரப்பியல் பீடத்தின் தலைவருமான டொக்டர் திருமதி திமுத்து முதுகுடா சிறப்புரையாற்றினார். நீரிழிவு நோயின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்த மருத்துவர், நீரிழிவு நோயின் தீவிரத்தன்மை மற்றும் அதைப் பற்றி அதிக விழிப்புணர்வு பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட இந்நோயின் தீவிரம் குறித்தும், சர்க்கரை நோய் பற்றிய தவறான புரிதல்களை அகற்றி, அதை பற்றிய சரியான தெளிவான புரிதலை வழங்குவதே தனது விரிவுரையின் முக்கிய நோக்கமாக இருந்தது. இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்தல் மற்றும் பயனுள்ள நீரிழிவு கட்டுப்பாட்டிற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், டொக்டர் திமுத்து முத்துக்குடா, உடல்கூற்று நிபுணர் டொக்டர் டி.கே.டி. மத்யூ, கண் வைத்திய நிபுணர் டொக்டர் அமில டி சில்வா, இருதய வைத்திய நிபுணர் டொக்டர் சந்திரிகா பொன்னம்பெரும, சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் உதன ரத்னபால, நிபுணத்துவ நிபுணரான ரேணுகா ஜயதிஸ்ஸ ஆகியோரைக் கொண்ட நிபுணர் குழுவொன்று. இந்த திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
Global Talent Competes to Solve...
අපනයනාභිමුඛ ප්‍රතිපත්ති ක්‍රියාත්මක කිරීමේ අවශ්‍යතාව...
MAS wins multiple honours at...
ලොව පිළිගත් DENZA නව බලශක්ති...
வலுவான நிதி செயல்திறனை வெளிப்படுத்தி, வங்கியின்...
கண்ணுக்குத் தெரியாமலும், மதிப்பிடப்படாமலும்: இலங்கையின் சிறு...
කොළඹ වරායේ බහලුම් තදබදය අවම...
வலுவான நிதி செயல்திறனை வெளிப்படுத்தி, வங்கியின்...
கண்ணுக்குத் தெரியாமலும், மதிப்பிடப்படாமலும்: இலங்கையின் சிறு...
කොළඹ වරායේ බහලුම් තදබදය අවම...
Softlogic Life wins best “AI...